ஜெயிலர் படத்தில் மாஸ் காட்டும் மங்களம் சீனு.. சூப்பர் போஸ்டர் இதோ!
சென்னை : அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா படத்தில் மங்களம் சீனு கேரக்டரில் நடித்து கலக்கியவர் நடிகர் சுனில்.
தற்போது இவர் ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தில் முக்கியமான கேரக்டரில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் சுனிலின் கேரக்டர் குறித்த போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.

புஷ்பா படத்தின் சூப்பர் கேரக்டர்
அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த ஆண்டு இறுதியில் வெளியான படம் புஷ்பா. இந்தப் படம் விமர்சன ரீதியாகவும் வசூல்ரீதியாகவும் மிரட்டியது. இந்தப் படத்தில் மங்களம் சீனு என்ற கேரக்டரில் நடித்து அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தார் சுனில்.

சுனில் கேரக்டரை வெளியிட்ட சன் பிக்சர்ஸ்
இந்நிலையில் இந்தப் படத்தின் புதிய அப்டேட்டை தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது. சுனிலின் கேரக்டர் போஸ்டரை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிய்டடுள்ளது. இதில் வித்தியாசமான கெட்டப்பில் சுனில் காணப்படுகிறார். இதையொட்டி ஜெயிலர் படத்தில் தரமான பீரியட் போர்ஷன் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக தெரிகிறது. இதையடுத்து இயக்குநர் நெல்சனுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

ஏப்ரலுக்குள் சூட்டிங்கை முடிக்க திட்டம்
நடிகர் ரஜினிகாந்த் அண்ணாத்த படத்திற்கு பிறகு தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் சூட்டிங் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் பிரம்மாண்டமான சிறைச்சாலை செட் போடப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது. படத்தின் 60 சதவிகித சூட்டிங் நடைபெற்று முடிந்துள்ளது.

முக்கிய நட்சத்திரங்கள்
வரும் ஏப்ரல் மாதத்திற்குள் படத்தின் சூட்டிங்கை முடித்துவிட்டு போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகளை துவக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். மேலும் படத்தை ஆகஸ்ட் மாதத்திற்குள் ரிலீஸ் செய்யவும் திட்டமிட்டு வருகின்றனர். படத்தில் ரம்யா கிருஷ்ணன், சிவராஜ் குமார் உள்ளிட்டவர்களும் முக்கியமான வேடங்களில் நடித்து வருகின்றனர். நடிகை தமன்னாவும் கெஸ்ட் ரோலில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

ரஜினியுடன் இணைந்த மோகன்லால்
ஏப்ரல் மாதத்திற்குள் படத்தின் சூட்டிங்கை நிறைவு செய்யவும் படத்தின் இசை வெளியீட்டை நடத்தவும் நெல்சன் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் படத்தின் டீசரையும் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் பிரபல மலையாள நடிகர் மோகன்லாலும் இணைந்துள்ள நிலையில் படத்திற்கான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.


Click it and Unblock the Notifications











