கொரோனா கைதியால் வினை.. போலீஸ் ஸ்டேஷன் அருகே விழா.. தனிமைப்படுத்தப்பட்ட பிரபல காமெடி நடிகர்!

By

திருவனந்தபுரம்: போலீஸ் ஸ்டேஷன் அருகே நடந்த விழாவில் கலந்துகொண்ட பிரபல காமெடி நடிகர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

Recommended Video

கொரோனா.. இறைவன் ரிலீஸ் செய்த படம்.. வைரலாகும் வடிவேலுவின் வீடியோ!

கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் காரணமாக உலக நாடுகள் கடும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகிக் கொண்டிருக்கின்றன.

இந்தியாவில் இந்த வைரஸ் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இத் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

நிவாரண நிதி

நிவாரண நிதி

இதைக் கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன. இருந்தும் இந்தத் தொற்று வேகமாகப் பரவி வருகிறது. இதனால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கு உயர்ந்துகொண்டே வருகிறது. இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1.38 லட்சமாக உள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4021-ஆக அதிகரித்துள்ளது.

சுராஜ் வெஞ்சுரமூடு

சுராஜ் வெஞ்சுரமூடு

இந்நிலையில் பிரபல மலையாள நடிகர் சுராஜ் வெஞ்சுரமூடு வீட்டில் தனிமைப்படுத்தப் பட்டுள்ளார். மலையாளத்தில் சுமார் 250-க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ள இவர், வில்லன், ஹீரோ, குணசித்திரம் மற்றும் காமெடி வேடங்களில் நடித்துள்ளார். பெயரறியாதவர் என்ற படத்தில் நடித்ததற்காக தேசிய விருது பெற்றவர்.

விவசாய விழா

விவசாய விழா

சச்சி இயக்கத்தில் பிருத்விராஜூடன் இவர் நடித்த டிரைவிங் லைசன்ஸ் சூப்பர் ஹிட்டானது. வெஞ்சரமூடு போலீஸ் ஸ்டேஷன் அருகே கடந்த 23 ஆம் தேதி விவசாய விழா ஒன்று நடந்தது. இதில் நடிகர் சுராஜ் வெஞ்சரமூடு, அந்தப் பகுதி எம்.எல்.ஏ முரளி உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்நிலையில் மதுபோதையில் வாகனம் ஓட்டியதாக 2 பேரை கைது செய்து அந்த போலீஸ் ஸ்டேஷனில் வைத்திருந்தனர்.

உறுதி செய்யப்பட்டது

உறுதி செய்யப்பட்டது

அவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது மருத்துவ பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. இதனால், அந்த விழா நடந்தபோது போலீஸ் ஸ்டேஷனில் இருந்த, நடிகர் சுராஜ் வெஞ்சரமூடு, எம்.எல்.ஏ முரளி, போலீஸ் கான்ஸ்டபிள்கள் உள்ளிட்டவர்களை தனிமைப்படுத்துமாறு மருத்துவர்கள் கூறியதை அடுத்து, அவர்கள் அனைவரும் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X