நடிகர், பாடகர் சுராங்கனி மனோகர் காலமானார்! #CeylonManohar

By Vignesh Selvaraj

Recommended Video

சுராங்கனி மனோகர் காலமானார்!

சென்னை : சிலோன் மனோகர் என அழைக்கப்பட்ட பிரபல நடிகரும், பாடகருமான ஏ.இ.மனோகரன் சென்னையில் நேற்று காலமானார்.

இவர் இலங்கையைச் சேர்ந்த புகழ்பெற்ற பாப் இசைப் பாடகரும் திரைப்பட நடிகரும் ஆவார். பல மொழிப் பாடல்கள் பாடுவதிலே திறமை வாய்ந்தவர்.

பாப் இசைச் சக்கரவர்த்தி எனப் பாராட்டுப் பெற்றவர். இவருக்கு தமிழகம் மட்டுமின்றி இலங்கையிலும் பல ரசிகர்கள் உள்ளனர்.

சுராங்கனி மனோகர்

சுராங்கனி மனோகர்

1970-களில் இளையராஜா இசையில் வெளிவந்த 'அவர் எனக்கே சொந்தம்' என்ற படத்தில், இலங்கையில் மிகவும் பிரபலமான பாடல் ஒன்று பயன்படுத்தப்பட்டது. "சுராங்கனி" என்ற அந்தப் பாடலை இயற்றிப் பாடியவர் சிலோன் மனோகர். இவர் பாடிய "சுராங்கனி சுராங்கனி.. சுராங்கனிடா மாலுகெனாவா.." என்ற பைலா பாடல் இலங்கை, இந்திய ரசிகர்கள் மத்தியில் பேராதரவைப் பெற்றது.

வில்லன் நடிகர்

வில்லன் நடிகர்

இலங்கையில் பிறந்த அவர், சென்னைக்கு வந்து பாடகரானார். 'ஜேஜே', 'காஷ்மீர் காதலி', 'தீ' , 'அதே கண்கள்', 'ராஜா நீ வாழ்க', 'காட்டுக்குள் திருவிழா', 'மாங்குடி மைனர்' உள்ளிட்ட தமிழ்ப் படங்களில் பல முன்னணி நடிகர்களுடன் சண்டைக்காட்சிகளிலும் நடித்துள்ளார். நடிகர் கமலஹாசனுடன் ‘மனிதரில் இத்தனை நிறங்களா' படத்தில் பாடி நடித்திருக்கிறார்.

பாப் இசை சக்ரவர்த்தி

பாப் இசை சக்ரவர்த்தி

தமிழ், இந்தி திரைப்படங்களில் நடித்துள்ள மனோகர் தமிழ் டி.வி. தொடர்களிலும் நடித்துள்ளார். ஐந்து மொழிகளில் 260க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள சிலோன் மனோகர், இலங்கையின் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாப் இசை சக்ரவர்த்தி என்ற பட்டமும் பெற்றுள்ளார்.

காலமானார்

காலமானார்

சென்னையில் வசித்து வந்த சிலோன் மனோகர் இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், நேற்றிரவு காலமானார். அவரது இறுதிச் சடங்குகள் நாளை நடைபெறும் என அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X