அடுத்தடுத்து வரிசை கட்டும் தோல்விகள்.. சூர்யாவின் புதிய யுக்தி.. கைகொடுக்குமா?
சென்னை: தானா சேர்ந்த கூட்டம், என்.ஜி.கே. படங்கள் சரியாக போகாததால், அடுத்து வெளியாகவுள்ள காப்பான் மற்றும் சூரரைப் போற்று படங்களில் நடிகர் சூர்யா புதிய யுக்தியைக் கையாண்டுள்ளார்.
என்.ஜி.கே.வை தொடர்ந்து, சூர்யா - கே.வி.ஆனந்த் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்திருக்கும் படம்காப்பான்’. இப்படத்தில் மோகன்லால் பிரதமராகவும், சூர்யா அவரது பாதுகாப்பு அதிகாரியாகவும் நடித்துள்ளனர்.


சூர்யா ஜோடியாக சாயிஷாவும், முக்கிய கதாபாத்திரங்களில் ஆர்யா, சமுத்திரக்கனி, பொம்மன் இரானி, சிரக் ஜனி என பல்வேறு நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். திருமணத்திற்கு பிறகு ஆர்யா - சாயிஷாவும் இணைந்து நடித்து வெளியாகவுள்ள படம் காப்பான்.

ஜாக்கி ஷெராப் உள்பட மேலும் பலர் நடிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். மேலும் இந்த படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் மோகன்பாபு, முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவர் 1980-களில் தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகனாக இருந்தார். ரசிகர்கள் சூப்பர் ஸ்டாராக அவரை கொண்டாடினார்கள். இவர் நீண்ட இடைவெளிக்கு பிறகு சூரரை போற்று படம் மூலம் மீண்டும் தமிழ் படத்தில் நடிக்கிறார்.

காப்பான், சூரரைப் போற்று இரு படங்களுமே தமிழ் மட்டுமின்றி மலையாளம் மற்றும் தெலுங்கிலும் வெளியாகின்றன. 2 படங்களிலுமே அந்தந்த மொழி சூப்பர் ஸ்டார்கள் நடித்துள்ளதால், அம்மொழி ரசிகர்களை நேரடியாக சென்றடையும் என எதிர்பார்க்கலாம்.

Comments


Click it and Unblock the Notifications