கதை ரெடியாம்... கால்ஷீட்டுக்காக வெயிட்டிங்: டைரக்டராகும் நடிகர் சுரேஷ்!

சென்னை: நடிகர் சுரேஷ் விரைவில் திரைப்படம் ஒன்றை இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பன்னீர் புஷ்பங்கள் படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் சுரேஷ். இதுவரை தமிழ், தெலுங்கு மலையாள மொழிகளில் 250க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள சுரேஷ். பல வருடங்களுக்கு பிறகு கிழக்கு கடற்கரை சாலை படத்தின் மூலம் ரீ-என்ட்ரி ஆனார்.

இப்போது குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார். தொலைக்காட்சியில் ரியாலிட்டி ஷோக்களை நடத்தி வரும் சுரேஷ் விரைவில் ஒரு படத்தை இயக்கி டைரக்டராகவும் இருக்கிறாராம்.

நீண்ட நாள் ஆசை...

நீண்ட நாள் ஆசை...

இதுபற்றி, செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: படம் இயக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை. 250 படங்களுக்கு மேல் நடித்த அனுபவம் இருக்கிறது.

போதுமான அனுபவம்...

போதுமான அனுபவம்...

100க்கும் மேற்பட்ட டைரக்டர்களுடன் பணியாற்றி இருக்கிறேன். வாழ்க்கையின் பெரும்பகுதி காலத்தை ஷூட்டிங் ஸ்பாட்டில் கழித்திருக்கிறேன். இது போதாதா ஒரு படம் டைரக்ட் பண்ணுவதற்கு.

இரண்டு கதைகள்...

இரண்டு கதைகள்...

லவ் அண்ட் காமெடி, ஆக்ஷன் வித் த்ரில்லர் என இரண்டு கதைகள் தயாராக இருக்கிறது. நடிகர்களுடன் பேசி வருகிறேன்.

விரைவில் அறிவிப்பு....

விரைவில் அறிவிப்பு....

அது முடிவானதும் முறையான அறிவிப்பு வரும். நடித்துக் கொண்டே படங்களும் டைரக்ட் செய்ய முடிவு செய்திருக்கிறேன்' எனத் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X