"பன்னீர் புஷ்பங்கள்" சுரேஷிற்கு இன்று பிறந்தநாள்.. குவியும் வாழ்த்துக்கள்!

சென்னை : தமிழ் திரைப்படங்களில் பெரும்பாலும் லவ்வர் பாயாக வலம் வந்த நடிகர் சுரேஷ் நடிகராக மட்டுமல்லாமல் அஜித், நாகார்ஜுனா உள்ளிட்ட பிரபலமான பல நடிகர்களுக்கு பின்னணி குரல் கொடுத்துள்ளார்.

ஆறடி உயரம் அழகிய உருவம் என பெண்களின் மனதை கொள்ளை கொள்ளும் ஆணழகனாக வலம் வந்த சுரேஷ் 1980 மற்றும் 90களில் மிகப் பிரபலமான நடிகராக தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெற்றிநடை போட்டு வந்தார்.

சமீபத்தில் ஹரிஷ் கல்யாண் நடித்த இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் திரைப்படத்தில் நடித்திருந்த சுரேஷ் இப்பொழுது தமிழில் பல்வேறு திரைப்படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் ஆகஸ்ட் 26 ஆம் தேதியான இன்று தனது பிறந்தநாளை குடும்பத்தாருடன் மகிழ்ச்சியாக கொண்டாடி வருவதையொட்டி இவரது நண்பர்கள் திரைப் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என அனைவரும் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.

திரையுலகிற்கு அறிமுகம்

திரையுலகிற்கு அறிமுகம்

மிகப்பிரபலமான திரை குடும்பத்திலிருந்து திரைத்துறைக்கு வந்த நடிகர் சுரேஷ் அசிஸ்டன்ட் எடிட்டராகவும், அசிஸ்டன்ட் நடன இயக்குனராகவும் பணியாற்றி வந்த நிலையில் " பன்னீர் புஷ்பங்கள்" திரைப்படத்தின் மூலம் முதன்முறையாக திரையுலகிற்கு அறிமுகம் செய்யப்பட்டார்.

பெண்களின் மனதை

பெண்களின் மனதை

1980 மற்றும் 90களில் அதிக அளவிலான லவ்வர் பாய் கதாபாத்திரங்களில் நடித்தது யார் என்ற பட்டியலை எடுத்துப் பார்த்தால் கண்டிப்பாக அதில் சுரேஷின் பெயர் இடம்பெறும், இந்த அளவுக்கு எக்கச்சக்கமான காதல் திரைப்படங்களில் நடித்து பெண்களின் மனதை கொள்ளைகொள்ளும் லவ்வர் பாயாக வலம் வந்த சுரேஷுக்கு இன்று வரை ரசிகைகள் கூட்டம் பல இருந்து வருகிறது.

மாறுபட்ட கதாபாத்திரத்தில்

மாறுபட்ட கதாபாத்திரத்தில்

தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் எக்கசக்கமான திரைப்படங்களில் நடித்து வரும் சுரேஷ் தெலுங்கு மொழியில் உருவாகி தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்ட மெஹா ஹிட் திரைப்படமான "அம்மன்" திரைப் படத்தில் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் அசத்தி இருப்பார். இவ்வாறு புகழ்பெற்ற நடிகராக வலம் வரும் சுரேஷ் "பவானி" என்ற தெலுங்கு திரைப்படத்தை இயக்கியதோடு அதில் ஹீரோவாகவும் நடித்து இருந்தார்.

தமிழில் டப் செய்யப்பட்ட

தமிழில் டப் செய்யப்பட்ட

தயாரிப்பு துறையையும் விட்டு வைக்காத சுரேஷ் பிரார்த்தனா, பவானி, ராகவா, சிவுது உள்ளிட்ட படங்களை தயாரித்தும் உள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் மிகவும் புலமை வாய்ந்த சுரேஷ் ஆசை திரைப்படத்தில் அஜித்குமாருக்கு பின்னணி குரல் கொடுத்திருப்பார். மேலும் நாகார்ஜுனாவின் நடிப்பில் உருவாகி தமிழில் டப் செய்யப்பட்ட பெரும்பாலான திரைப்படங்களுக்கு சுரேஷ் தான் இன்றுவரை பின்னணி குரல் கொடுத்து வருகிறார்.

Recommended Video

Samantha Nargajuna Green India Challenge • Blissful Video
பிறந்தநாள்

பிறந்தநாள்

இவ்வாறு அனைவரும் ரசிக்கும் மிகச் சிறந்த நடிகராக இன்று வரை ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்திருக்கும் நடிகர் சுரேஷ் ஆகஸ்ட் 26 ஆம் தேதியான இன்று தனது பிறந்தநாளை குடும்பத்தாருடன் மகிழ்ச்சியாக கொண்டாடி வருவதையொட்டி பல்வேறு திரை பிரபலங்களும், நெருங்கிய நண்பர்களும் மற்றும் ரசிகர்களும் என பலரும் இவருக்கு வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X