twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தப்பே இல்ல.. நல்லா வெளுக்கலாம்.. இல்லாட்டி ராணுவத்ததான் கூப்பிடனும்.. பிரபல நடிகர் கடும் எச்சரிக்கை!

    |

    சென்னை: ஊரடங்கு உத்தரவை மீறி நடப்பவர்களை அடித்து உதைப்பதில் தவறே இல்லை என பிரபல நடிகர் காட்டமாக கூறியுள்ளார்.

    Recommended Video

    Day-9: Soori's daughter strong message | Lock Down | Quarantine

    மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சுரேஷ் கோபி. அரசியல்வாதி, பின்னணி பாடகர், தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் என பல முகங்களை கொண்டவர்.

    மலையாளம் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடா, தமிழ், இந்தி என பல மொழிகளிலும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். மற்ற மொழிகளிலும் பெரும் பிரபலமானவராக உள்ளார் சுரேஷ் கோபி.

    தமிழில்

    தமிழில்

    இதுவரை 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள சுரேஷ் கோபி தற்போது ராஜ்ய சபா உறுப்பினராகவும் உள்ளார். தமிழில் ஐ, சமஸ்தானம், தீனா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது தமிழரசன், மகாவீர் கண்ணா ஆகிய படங்களில் ஒப்பந்தமாகியிருக்கிறார்.

    அடிப்பதில் தவறில்லை

    அடிப்பதில் தவறில்லை

    இந்நிலையில் ஊரடங்கை மீறி வெளியில் சுற்றுபவர்கள் மீது போலீசார் தடியடி நடத்துவது குறித்து நடிகர் சுரேஷ் கோபி கருத்து தெரிவித்துள்ளார். அதாவது ஊரடங்கை மதிக்காமல் நடப்பவர்களை அடிப்பதில் எந்த தவறும் இல்லை. உத்தரவை மீறி வெளியே நடமாடுபவர்களை முக்கியமான உறுப்புகள் பாதிக்காத வகையில் போலீசார் அடிப்பது தவறு அல்ல என கூறியுள்ளார்.

    புகார் சொல்லக் கூடாது

    புகார் சொல்லக் கூடாது

    மேலும் சொல்வதை கேட்காமல் செயல்படும் சிலரை அடித்துத்தான் திருத்த முடியும். இதற்காக போலீசார் மீது புகார் சொல்ல கூடாது. அவர்களுக்கு கட்டுப்பாடுகளையும் விதிக்க கூடாது. இதுபோன்ற நேரத்திலும் போலீசார் மக்களுக்காக வேலை செய்கிறார்கள். அவர்களின் சேவையை பாராட்ட வேண்டும் என தெரிவித்திருக்கிறார்.

    ராணுவத்தை அழைக்கனும்

    ராணுவத்தை அழைக்கனும்

    மேலும் நிலைமை எல்லை மீறி போனால் ராணுவத்தைதான் அழைக்க வேண்டும் என்று கூறியுள்ள சுரேஷ் கோபி அவர்களுக்கு தமிழன், மலையாளி, வேறு மொழி பேசுபவர்கள் என்று வித்தியாசமெல்லாம் கிடையாது. சொல்வதை கேட்காவிட்டால் என்ன செய்ய வேண்டுமோ அதை அவர்கள் செய்வார்கள்.

    உத்தரவை மீறி

    உத்தரவை மீறி

    இதனை ஒரு எச்சரிக்கையாகவே எடுத்துக்கொள்ளுங்கள், என காட்டமாக கூறியிருக்கிறார் சுரேஷ் கோபி. கொரோனா வைரஸின் அச்சுறுத்தலால் நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மக்கள் அனைவரும் அத்தியாவசிய தேவையின்றி வீடுகளை விட்டு வெளியே வரக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதனை கேட்காமல் சிலர் வெளியே சுற்றி திரிந்து வருகின்றனர்.

    போலீஸ்க்கு ஆதரவு

    போலீஸ்க்கு ஆதரவு

    வெளியே வரும் மக்களை போலீசார் தடியடி நடத்தியும் வித்தியாசமான தண்டனை கொடுத்தும் விரட்டி வருகின்றனர். போலீசாரின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பும் ஆதரவும் எழுந்துள்ள நிலையில் நடிகர் சுரேஷ் கோபி போலீசாருக்கு ஆதரவாக பேசியிருப்பதோடு வெளியில் சுற்றுபவர்களை கடுமையாக எச்சரித்துள்ளார்.

    English summary
    Actor Suresh Gopi supports police for beating on people who are roaming arround out side. Suresh gopi also warns publice to stay inside.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X