குடும்பத்துடன் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார் நடிகர் சூரி!

சென்னை : நம்ம வீட்டுப் பிள்ளையை தொடர்ந்து சிவகார்த்திகேயன் உடன் மீண்டும் இணைந்து டான் படத்தில் நடித்து வருகிறார் சூரி.

இதுவரை காமெடியனாக கலக்கிக் கொண்டிருந்த இவர் முதன் முறையாக ஹீரோவாக நடிக்க அந்த படத்தை இயக்குனர் வெற்றிமாறன் இயக்குகிறார்.

கொரோனா தொற்றின் தீவிரம் மேலும் அதிகரிக்க நாளுக்கு நாள் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி பற்றிய விழிப்புணர்வும் அதிகமாகிக் கொண்டிருக்கும் நிலையில் நடிகர் சூரி குடும்பத்துடன் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளார்.

மீண்டும் சிவகார்த்திகேயனுடன் இணைந்து

மீண்டும் சிவகார்த்திகேயனுடன் இணைந்து

இயக்குனர் அட்லி இடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த சிபி சக்கரவர்த்தி டான் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். முழுக்க முழுக்க கல்லூரி கதைக்களத்தை மையமாகக் கொண்டு உருவாகும் இப்படத்தில் கதாநாயகனாக சிவகார்த்திகேயன் நடிக்க ஜோடியாக ப்ரியா அருள் மோகன் ஒப்பந்தமாகியுள்ளார். நம்ம வீட்டு பிள்ளைப் படத்திற்கு பிறகு மீண்டும் சூரி சிவகார்த்திகேயனுடன் இணைந்து இந்த படத்தில் நடிக்கிறார்.

அண்ணன் தம்பி போல

அண்ணன் தம்பி போல

மனம் கொத்தி பறவை தொடங்கி வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன், சீமராஜா மற்றும் சமீபத்தில் வெளியான நம்ம வீட்டுப் பிள்ளை என சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகும் பெரும்பான்மையான திரைப்படங்களில் சூரி கட்டாயமாக இருந்து விடுவார். ஆரம்பத்தில் நண்பர்களாக பழகிய இவ்விருவரும் இப்பொழுது அண்ணன் தம்பி போல உள்ளனர்.

Recommended Video

Actor Soori Fitness Secrets | Burnout Fitness Studio | Powerstar Srinivasan
போலீஸ் அதிகாரி வேடத்தில்

போலீஸ் அதிகாரி வேடத்தில்

ரஜினிகாந்த், அஜீத், விஜய், விஜய்சேதுபதி என பல முன்னணி நடிகைகளின் திரைப்படங்களில் காமெடியனாக, கலக்கி மக்கள் மத்தியில் தனி பெயரை எடுத்த சூரி இப்பொழுது ஹீரோ அவதாரம் எடுத்திருக்கிறார். வெற்றிமாறன் இயக்கும் இந்த திரைப்படத்திற்கு விடுதலை என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் சூரி இதில் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிக்கிறார். விஜய் சேதுபதி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

தடுப்பூசி ரொம்ப அவசியம்

தடுப்பூசி ரொம்ப அவசியம்

இவ்வாறு காமெடியனாக இருந்து இப்பொழுது ஹீரோவாகியுள்ள நடிகர் சூரி குடும்பத்துடன் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளார். மேலும் இன்னைக்கு நானும் என் மனைவியும் பக்கத்துல இருக்கிற மாநகராட்சி அரசு பள்ளியில் கொரோனா தடுப்பு ஊசி போட்டுக் கொண்டுள்ளோம். இந்த பயங்கரமான நோயிலிருந்து நம்மல காப்பாத்திக்க தடுப்பூசி ரொம்ப அவசியம். வாய்ப்பு கிடைக்கும்போது தவறாமல் தடுப்பூசி போட்டுக்கங்க.. ஜாக்கிரதையா இருங்க என ரசிகர்களுக்கு வேண்டுகோளும் விடுத்துள்ளார்.

More from Filmibeat

Read more about: suri சூரி
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X