Kanguva :ரஜினி படத்தின் டைட்டிலை கையிலெடுத்த சூர்யா.. கங்குவா புது டைட்டில் இல்லையா?

சென்னை : நடிகர் சூர்யாவின் 42வது படத்தின் டைட்டில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. கங்குவா என்றால் நெருப்பு என்று அர்த்தம்.

இந்த டைட்டில் சூர்யா ரசிகர்களை மட்டுமில்லாமல், அனைத்து தரப்பினரையும் கவர்ந்துள்ளது. வரலாற்று பின்னணியுடன் வெளியாகவுள்ள இந்தப் படத்திற்கு இந்த தலைப்பு பொருத்தமாக அமைந்துள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

Actor Suryas Kanguva movie title is Rajinis Hindi movie title

முன்னதாக சூர்யா 42 படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நிலையில், தற்போது டைட்டிலும் படத்திற்கான மிகச்சிறந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரஜினிப்பட டைட்டிலை கையிலெடுத்த சூர்யா : நடிகர் சூர்யாவின் அடுத்தடுத்த வெற்றிப் படங்கள் அவரை கோலிவுட்டில் மிகச்சிறந்த ஹீரோவாக உருவாக்கியுள்ளது. சூரரைப் போற்று, ஜெய்பீம், எதற்கும் துணிந்தவன், விக்ரம் போன்ற படங்களின் வெற்றி, அவரது மார்க்கெட் வேல்யூவை எகிற செய்துள்ளது. இந்தப் படங்களை தொடர்ந்து பாலாவுடன் அவர் 18 ஆண்டுகள் கழித்து இணைந்திருந்த வணங்கான் படத்திற்கும் சிறப்பான எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அந்தப் படம் சில காரணங்களால் கைவிடப்பட்டது.

இந்தப் படத்தை தொடர்ந்து இயக்குநர் சிவாவுடன் தற்போது கங்குவா படத்தில் இணைந்துள்ளார் சூர்யா. இந்தப் படத்தின் சூட்டிங் அறிவிக்கப்பட்டபோது படத்தின் மோஷன் போஸ்டரை வெளியிட்டு படத்திற்கான எதிர்பார்ப்பை எகிற வைத்தார் இயக்குநர் சிவா. இதையடுத்து படத்தின் ரிலீசுக்கு முந்தைய வியாபாரம் 500 கோடிக்கும் மேல் நடைபெற்றது. தொடர்ந்து படத்தின் அப்டேட்டை கேட்டு ரசிகர்கள் படத்தை ட்ரெண்டாக்கி வந்தனர். ஆனால் அப்டேட் இல்லாமலேயே படத்தின் சூட்டிங்கை நிறைவு கட்டத்திற்கு கொண்டு வந்துள்ளார் சிவா.

Actor Suryas Kanguva movie title is Rajinis Hindi movie title

இந்நிலையில் தற்போது படத்தின் டைட்டில் கடந்த 16ம் தேதி வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. படத்திற்கு கங்குவா என்று பெயரிட்டுள்ளனர். கங்குவா என்றால் நெருப்பு என்று அர்த்தம். அதனால் படம் நெருப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் அடுத்தடுத்த போஸ்டர்கள், வீடியோக்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன. மிகவும் பிரம்மாண்டமாக உருவாகிவரும் இந்தப் படம் சூர்யாவின் கேரியரில் மிகப்பெரிய ஹிட் படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வரலாற்று பின்னணியுடன் உருவாகியுள்ள கங்குவா படத்தின் டைட்டிலும் வித்தியாசமாக அமைந்துள்ள நிலையில், படத்தின் டைட்டில் டீசரை ரசிகர்கள் அதிகளவில் ட்ரெண்டாக்கி வருகின்றனர். இந்நிலையில், வித்தியாசமான இந்த தலைப்பை படக்குழுவினர் மிகுந்த யோசனைக்கு பிறகுதான் வைத்துள்ளதாக ரசிகர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர். ஆனால் இந்த தலைப்பு ஏற்கனவே ஹிட்டடித்த நடிகர் ரஜினியின் பட டைட்டில் என்பது தற்போது தெரியவந்துள்ளது.

Actor Suryas Kanguva movie title is Rajinis Hindi movie title

தமிழில் வெளியாகி சூப்பர் ஹிட்டடித்த மலையூர் மம்பட்டியான் என்ற படத்தை கடந்த 1983ம் ஆண்டில் ரஜினியை வைத்து இந்தியில் ரீமேக் செய்த நிலையில், அந்தப் படத்திற்குதான் கங்குவா என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. ராஜசேகர் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தின் டைட்டிலைத்தான் தற்போது சூர்யா படத்திற்கு வைத்துள்ளனர். மிகவும் சிறப்பான விமர்சனங்களை பெற்றிருந்த கங்குவா டைட்டில் ஏற்கனவே வெளியான ரஜினியின் பட டைட்டில் என்பது ரசிகர்களை கேள்விக்குள்ளாக்கியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X