Suriya: டிடிக்கு 8 வருஷத்துக்கு முன்னாடி சூர்யா சொன்ன அட்வைஸ்.. இப்ப அவருக்கே செட் ஆகும் போலயே!

சென்னை: நடிகர் சூர்யா இருவேறு கெட்டப்புகளில் அதிரடியாக நடித்துள்ள கங்குவா படம் இன்றைய தினம் சர்வதேச அளவில் 10க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் ரிலீசாகியுள்ளது. இந்தப் படத்தை கடந்த இரண்டரை ஆண்டுகளாக படக்குழுவினர் உருவாக்கிய நிலையில், படம் கலவையான விமர்சனங்களையே பெற்றுள்ளது.

ஸ்டூடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிப்பில் கங்குவா படம் வெளியாகியுள்ள நிலையில் முன்னதாக இந்தப் படம் சர்வதேச அளவில் 2000 கோடி ரூபாய் வசூலை அள்ளும் என்று அவர் கூறியிருந்தார். இந்நிலையில் படம் அவரது எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

suriya kanguva movie anchor dd

நடிகர் சூர்யா: நடிகர் சூர்யா, திஷா பதானி, பாபி தியோல் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து இன்றைய தினம் சர்வதேச அளவில் 10க்கும் மேற்பட்ட மொழிகளில் ரிலீசாகியுள்ளது கங்குவா படம். இயக்குநர் சிவா இயக்கத்தில் இந்த படம் உருவாகியுள்ள நிலையில் ஸ்டூடியோ கிரின் சார்பில் ஞானவேல் ராஜா படத்தை தயாரித்துள்ளார். மிகவும் பிரம்மாண்டமாக அதிகமான பொருட்செலவில் இந்த படம் உருவாகியுள்ள நிலையில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை இந்த படம் உருவாக்கியிருந்தது. மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை படக்குழுவினர் ரசிகர்களிடையே ஏற்படுத்தியதாக கூறலாம்.

கங்குவா படம்: நடிகர் சூர்யா, சிவா, திஷா பதானி, பாபி தியோல் மட்டுமில்லாமல் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவும் இந்த படத்திற்காக கடந்த சில வாரங்களாக தொடர்ந்து பிரமோஷன்களில் ஈடுபட்டனர். மும்பை, டெல்லி, ஹைதராபாத், சென்னை, கொச்சி, துபாய் என அவர்கள் பறந்து பறந்து இந்த படத்திற்காக ப்ரமோஷன்களை மேற்கொண்ட நிலையில் படம் இன்றைய தினம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. இந்த படத்தின் கங்குவன் கேரக்டர் ரசிகர்களை கவர்ந்துள்ள நிலையில் பிரான்சிஸ் கேரக்டர் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது.

அடுத்தடுத்த பிரமோஷன்கள்: படத்தின் முதல் பாதி சொதப்பலாக இருப்பதாகவும் இரண்டாவது பாதியை கங்குவன் கேரக்டர் தூக்கி நிறுத்துவதாகவும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. இந்த படத்திற்காக அடுத்தடுத்த பேட்டிகளை சூர்யா கொடுத்த நிலையில் தற்போது பிரபல சேனலுக்கு டிடியுடன் அவர் இணைந்து பேட்டி ஒன்றை கொடுத்துள்ளது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்த பேட்டியில் அவர் தன்னுடைய கங்குவா படம் குறித்தும் முன்னதாக தன்னுடைய நடிப்பில் வெளியான சிங்கம், ஜெய் பீம் படங்கள் குறித்தும், தன்னுடைய சொந்த வாழ்க்கை குறித்தும், ஜோதிகா குறித்தும் பல சுவாரசியங்களை பகிர்ந்துள்ளார்.

டிடிக்கு சூர்யா கொடுத்த அட்வைஸ்: துவக்கத்தில் அவர் டிடியின் லுக் மிகவும் அழகாக இருப்பதாக பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து டிடி தன்னுடைய உற்சாகத்தை பகிர்ந்திருந்தார். இந்நிலையில் கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்னதாக தனக்கு சூர்யா கூறிய அட்வைஸ் குறித்து தற்போது டிடி நினைவு கூர்ந்துள்ளார். உனக்கு மட்டுமே இந்த பிரச்சனைகள் இல்லை என்றும் அனைத்து பிரச்சினைகளும் நம்மை வலிமையாக்கவே நிகழும் என்றும் அவற்றின்மூலம் வாழ்க்கைக்கான தெளிவு கிடைக்கும் என்றும் சூர்யா கூறிய நிலையில், அதை நினைத்து தன்னுடைய பிரச்சனைகளை எதிர்கொண்டதாகவும் டிடி சூர்யாவுடன் பேட்டியின் துவக்கத்தில் பேசியுள்ளார்.

காரணத்திற்காகவே காரியம்: இதையடுத்து பேசிய சூர்யா, ஒவ்வொரு விஷயமும் ஏதோவொரு காரணத்திற்காகத்தான் நடப்பதாக தான் நம்புவதாக தெரிவித்துள்ளார். தற்போது மிகவும் எதிர்பார்ப்புடன் வெளியாகியுள்ளது கங்குவா படம். இந்நிலையில் முன்னதாக டிடிக்கு சூர்யா கூறிய அட்வைஸ் தற்போது அவருக்கே பொருந்தும் வகையில் அமைந்துள்ளது. கடந்த இரண்டரை ஆண்டுகளாக கங்குவா படத்திற்காக மற்ற படங்களை கமிட் செய்யாமல் இருந்தார் சூர்யா. இந்நிலையில் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்துள்ளன. இந்நிலையில் இந்த பிரச்சனை அவருக்கு மட்டுமில்லை என்பதும் அவர் கண்டிப்பாக இந்த படத்தின் ரிசல்ட்டிலிருந்து வெளியில் வந்து விடுவார் என்றும் நம்பலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X