சூர்யா 44 ஷூட்டிங் முடிந்தவுடனே ஜோதிகாவை தேடி ஓடிய சூர்யா!.. இவங்களுக்குப்போய் டைவர்ஸ் வதந்தியா?

மும்பை: நடிகர் சூர்யா அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்து வருகிறார். தன்னுடைய மனைவி ஜோதிகா மற்றும் குழந்தைகளுடன் இவர் மும்பையில் செட்டில் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது. வரும் நவம்பர் மாதத்தில் சூர்யாவின் கங்குவா படம் சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே அடுத்ததாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்து வந்த சூர்யா 44 படத்தின் ஷூட்டிங் நேற்றைய தினம் நிறைவடைந்துள்ளது. இதுகுறித்து சூர்யா உள்ளிட்ட படக்குழுவினர் நேற்றைய தினம் மகிழ்ச்சியை பகிர்ந்திருந்தனர். இந்நிலையில் தன்னுடைய மனைவி மற்றும் குழந்தைகளை பார்க்க சூர்யா மும்பை புறப்பட்டு சென்றுள்ளார்.

suriya jyotika mumbai

நடிகர் சூர்யா: நடிகர் சூர்யா அடுத்தடுத்த படங்களில் முன்னணி இயக்குநர்களுடன் இணைந்து நடித்து வரும் சூழலில் வரும் நவம்பர் மாதத்தில் அவரது கங்குவா படம் சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே அடுத்ததாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கம் மற்றும் தயாரிப்பில் உருவாகி வரும் சூர்யா 44 படத்தில் இணைந்து சூர்யா நடித்து வந்தார். இந்த படத்தை சூர்யாவும் தன்னுடைய 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் கார்த்திக் சுப்புராஜு இணைந்து தயாரித்துள்ளார். அந்தமான், கேரளா உள்ளிட்ட இடங்களில் இந்தப் படத்தின் சூட்டிங் நடந்து முடிந்துள்ளது.

சூர்யா 44 சூட்டிங் ஓவர்: இந்நிலையில் சூர்யா 44 படத்தின் சூட்டிங் நிறைவடைந்துள்ளதாக நடிகர் சூர்யா மற்றும் படக்குழுவினர் நேற்றைய தினம் அறிவித்துள்ளனர். படக்குழுவினருடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் வெளியிட்டிருந்தனர். முன்னதாக இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் துப்பாக்கி சுடுவதாக அமைந்த வீடியோவும் வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்தது. இதனிடையே தற்போது நடிகர் சூர்யா மும்பை புறப்பட்டு சென்றுள்ளார். மும்பை விமான நிலையத்தில் நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் இணைந்து காணப்பட்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

ஜோதிகாவை பார்க்க சென்ற சூர்யா: சூர்யா 44 படத்தை முடித்தவுடனேயே அவர் தன்னுடைய காதல் மனைவியை பார்ப்பதற்காக மும்பை சென்றுள்ளார். முன்னதாக இவர்கள் இருவருக்கும் விவாகரத்து நடக்க உள்ளதாகவும் இருவரும் பிரியவுள்ளதாகவும் அடுத்தடுத்த தகவல்கள் வெளியாகிவந்தன. இந்நிலையில் இந்த வதந்திகளுக்கு ஃபுல் ஸ்டாப் வைக்கும் வகையில் இவர்கள் இருவரும் தற்போது மும்பை விமான நிலையத்தில் ஜோடியாக இணைந்து வந்தது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. மிகவும் க்யூட்டான கெட்டப்பில் இவர்கள் இருவரும் அனைவரையும் கவரும் வகையில் இருந்தனர்.

மும்பையில் செட்டிலான சூர்யா: அடுத்தடுத்து படங்களில் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் சூர்யா கமிட்டாகி வருகிறார். அடுத்ததாக வெற்றிமாறனின் வாடிவாசல் படத்திலும் பாலிவுட்டில் ராகேஷ் ஓம்பிரகாஷ் இயக்கத்தில் உருவாகவுள்ள கர்ணா படத்திலும் அவர் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே அவர் மும்பையில் செட்டிலாகியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதனிடையே, ஜோதிகாவும் அடுத்தடுத்த பாலிவுட் படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். மேலும் குழந்தைகளின் படிப்பிற்காகவும் இவர்கள் மும்பையில் செட்டிலாகியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X