Actor Suriya: கங்குவா பட பிரமோஷனில் சூர்யா.. ரசிகர்களுடன் சூப்பர் செல்ஃபி.. கூட யாருன்னு பாருங்க!
டெல்லி: நடிகர் சூர்யாவின் கங்குவா படம் அடுத்த மாதம் 14ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ள நிலையில் படத்தின் ப்ரோமோஷன்களை கடந்த சில தினங்களுக்கு முன்னதாகவே படக்குழுவினர் துவங்கியுள்ளனர். சென்னை மற்றும் மும்பையில் அடுத்தடுத்த ப்ரொமோஷன்கள் நடந்த நிலையில் இன்றைய தினம் டெல்லியில் கங்குவா படக்குழுவினர் ரசிகர்களை சந்திக்கவுள்ளனர்.
டெல்லியின் படக்குழுவினருடன் இணைந்து ரசிகர்களை சந்தித்த நடிகர் சூர்யா, முன்னதாக அவர்களுடன் இணைந்து செல்ஃபி எடுத்துக் கொண்டுள்ளார். இதில் ஏராளமான ரசிகர்கள் திரண்டிருந்தனர். இந்த நிகழ்ச்சியில் இயக்குனரும், தயாரிப்பாளரும் பங்கேற்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

நடிகர் சூர்யா: நடிகர் சூர்யா, திஷா பதானி, பாபி தியோல் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள கங்குவா படம் மிக பிரம்மாண்டமாக வரலாற்று பின்னணியில் உருவாக்கப்பட்டுள்ளது. சூர்யா கேரியரில் மிகவும் பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்டுள்ள கங்குவா படம் இந்த மாதம் 10ம் தேதி ரிலீசாக இருந்த நிலையில் ரஜினிகாந்தின் வேட்டையன் பட ரிலீசையடுத்து கங்குவா படம் அடுத்த மாதம் 14ம் தேதி திரையரங்குகளில் சர்வதேச அளவில் 10 மொழிகளில் ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கங்குவா படம்: இந்த படம் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள நிலையில் படத்தின் வரலாற்று பின்னணியில் உருவாக்கப்பட்டுள்ள காட்சிகள் மட்டுமே இரண்டு மணி நேரத்திற்கு மேல் படத்தில் இடம் பெற்றுள்ளதாகவும் மீதம் உள்ள காட்சிகள் நடப்பு சூழலில் உள்ள சூர்யாவின் கேரக்டரை வெளிப்படுத்தும் வகையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் ரிலீஸுக்கு ஒரு மாதத்திற்கும் குறைவான நாட்களே உள்ள நிலையில் படத்தின் ப்ரோமோஷன்களை மிகச் சிறப்பாக படக்குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர். இந்தியாவில் மட்டும் இல்லாமல் வெளிநாடுகளிலும் இந்த படத்தின் ப்ரோமோஷன்களை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அடுத்தடுத்த பிரமோஷன்கள்: சென்னையில் நடந்த ப்ரோமோஷன்களில் இயக்குனர் சிவா, தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் உள்ளிட்டவர்கள் மட்டுமே பங்கேற்ற நிலையில் மும்பை உள்ளிட்ட இடங்களில் நடத்தப்படும் அடுத்தடுத்த பிரமோஷன்களில் சூர்யா பங்கேற்று வருகிறார். தற்போது அவர் மும்பையில் தங்கியுள்ள நிலையில் அங்கு நடக்கும் பிரமோஷன்களில் அவர் அடுத்தடுத்து ஈடுபட்டு வருகிறார். தற்போது டெல்லியில் நடக்கவுள்ள பிரமோஷன்களிலும் பங்கேற்க அவர் வந்ததை பார்க்க முடிந்தது. நிகழ்ச்சிக்கு முன்னதாக அங்கு கூடியிருந்த ரசிகர்களுடன் அவர், திஷா பதானி மற்றும் பாபி தியோல் ஆகியோர் செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.
சூர்யாவின் ஸ்மார்ட் லுக்: தற்போதைய லுக்கில் சூர்யா மிகவும் ஸ்மார்ட்டாக ரசிகர்களை கவரும் வகையில் உள்ளதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். முன்னதாக மும்பையில் நடத்தப்பட்ட பிரமோஷன்களில் அவருடன் செல்ஃபி எடுத்துக் கொள்ள ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டியதை பார்க்க முடிந்தது. அவருக்கு வட இந்தியாவில் இவ்வளவு ரசிகர்களா என்று ஆச்சர்யத்தையும் இந்த நிகழ்வுகள் ஏற்படுத்தியுள்ளன. இந்நிலையில் இந்த படத்தின் இசை வெளியீடு வரும் 26ம் தேதி சென்னையில் பிரமாண்டமாக நடத்தப்பட உள்ளதாக படக்குழு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் சூர்யா பங்கேற்பார் என்று கூறப்பட்டுள்ளது. இந்த இசை வெளியீட்டு நிகழ்ச்சி சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில் மிகவும் பிரம்மாண்டமாக நடத்தப்பட உள்ளதாக படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











