Kanguva teaser: நாளைக்கு வருது.. கங்குவா டீசர் குறித்து சூர்யா கொடுத்த அப்டேட்!

சென்னை: நடிகர் சூர்யா நடிப்பில் அடுத்தடுத்து வித்தியாசமான கதைக்களங்களுடன் படங்கள் வெளியாகி வெற்றியடைந்து வருகின்றன. அந்த வகையில் அவரது சூரரை போற்று, ஜெய்பீம், எதற்கும் துணிந்தவன், விக்ரம் படங்கள் மிகப்பெரிய வெற்றியையும் வரவேற்பையும் கொடுத்துள்ளன. இந்நிலையில் தற்போது இயக்குனர் சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடித்து முடித்துள்ளார் சூர்யா. இந்த படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து கர்ணா மற்றும் புறநானூறு ஆகிய படங்களில் அவர் நடிக்க கமிட் ஆகியுள்ளார். இதில் சுதா கொங்கராவுடன் நடிக்கவுள்ள புறநானூறு படத்தின் சூட்டிங் அடுத்த மாதத்தில் துவங்கவுள்ளது.

தொடர்ந்து அடுத்தடுத்து வெற்றிப்பட இயக்குநர்களுடன் நடிக்கவும் அவர் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இதனிடையே கங்குவா படத்தின் டீசர் நாளைய தினம் வெளியாக உள்ளதாக அவர் அறிவித்துள்ளார். படக்குழுவினரும் இது குறித்து அறிவிப்பை மேற்கொண்டுள்ளனர். வரலாற்றுப் பின்னணியில் உருவாகியுள்ள இந்தப் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மிகவும் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இந்தப் படம் சர்வதேச அளவில் 10 மொழிகளில் ரிலீசாகவுள்ளதாகவும் அதனால்தான் படத்தின் ரிலீசில் தாமதம் ஏற்பட்டு வருவதாகவும் படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது.

Actor Suriya and Kanguva movie team updates about the movie teaser

நடிகர் சூர்யா: நடிகர் சூர்யா அடுத்தடுத்து முன்னணி இயக்குனர்களுடன் இணைந்து வெற்றி படங்களை கொடுத்து வரும் சூழலில் தற்போது அவரது நடிப்பில் கங்குவா படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. கமர்சியல் இயக்குனராக அஜித், ரஜினிகாந்த் உள்ளிட்டவர்களை லீட் கேரக்டர்களாக கொண்டு படங்களை இயக்கிய சிவா, தற்போது சூர்யா நடிப்பில் கங்குவா படத்தை இயக்கி முடித்துள்ளார். வரலாற்று பின்னணியில் உருவாகியுள்ள இந்த படத்தில் சூர்யாவுடன் திஷா பதானி, பாபி தியோல் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். இந்த படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன்ஸ் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

ரிலீசில் தாமதம்: படம் சர்வதேச அளவில் பத்திற்கும் மேற்பட்ட மொழிகளில் ரிலீசாக உள்ளதாகவும் தற்போது சிஜி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருவதாகவும் அதனால் படத்தின் ரிலீசில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் முன்னதாக படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது. ரசிகர்கள் விரும்பும் வகையில் இந்த படத்தை கொடுப்பது மட்டுமே இலக்கு என்றும் அதனால் சிறிது காலதாமதம் ஆனாலும் பரவாயில்லை என்றும் தயாரிப்பு தரப்பு கூறியதால் படத்தின் சிஜி வேலைகளை அழகியலுடன் கொடுக்க படக்குழு தற்போது தீவிரமாக களமிறங்கி உள்ளது. சென்னை, கொடைக்கானலின் அடர்ந்த காட்டுப்பகுதிகள் உள்ளிட்ட இடங்களில் படத்தின் சூட்டிங் நடந்து முடிந்துள்ளன.

சூர்யா உற்சாக அப்டேட்: கங்குவா படத்தின் ரிலீஸ் ஆகஸ்ட் மாதத்தை ஓட்டி திட்டமிடப்பட்டு வரும் நிலையில் இந்த படத்தின் ஷூட்டிங்கை நிறைவு செய்துள்ள சூர்யா, அடுத்ததாக சுதா கங்குரா இயக்கத்தில் புறநானூறு படத்தில் இணைய உள்ளார். இந்தப் படத்தின் சூட்டிங் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் துவங்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனிடையே இன்றைய தினம் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவர்களை சந்தித்து உரையாற்றிய சூர்யா பல விஷயங்களை குறிப்பாக மாணவிகளுக்கு பல அறிவுரைகளை வழங்கியுள்ளார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய சூர்யா, கங்குவா படத்தின் டீசர் நாளை வெளியாக உள்ளதாக உற்சாகத்துடன் தெரிவித்துள்ளார்.

நாளை வெளியாகும் டீசர்: அவரது இந்த அறிவிப்பை தொடர்ந்து படக்குழுவினரும் கங்குவா படத்தின் டீசர் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். இதனிடையே டீசர் வெளியீட்டிற்கான அடுத்தடுத்த போஸ்டர்களை வடிவமைத்து ரசிகர்கள் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டு வருகின்றனர். நாளை மாலை 4.30 மணிக்கு வெளியாகியுள்ள கங்குவா டீசர் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளையும் வரவேற்பையும் படத்திற்கு கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X