Suriya: அடுத்ததாக பாங்காக் செல்லும் சூர்யா.. எதுக்காக தெரியுமா?

சென்னை: நடிகர் சூர்யாவின் கங்குவா படத்தின் சூட்டிங் அடுத்தடுத்து கோவா, சென்னை, கொடைக்கானலின் அடர்ந்த காட்டுப்பகுதிகளில் நடந்து முடிந்துள்ளது.

சிவா இயக்கத்தில் வரலாற்றுப் பின்னணியுடன் எடுக்கப்பட்டுள்ளது கங்குவா. படத்திற்காக வழக்கம்போல சிறப்பான பிட்னசை மெயின்டெயின் செய்துள்ளார் சூர்யா.

Actor Suriya and Kanguva team plans for next schedule to Bangkok

இந்தப் படத்தில் சூர்யாவின் கெட்டப்புகள் உள்ளிட்டவை வெளியாகி ரசிகர்களை மிகுந்த எதிர்பார்ப்புகளுடன காத்திருக்க செய்துள்ளது.

பாங்காக் செல்லும் நடிகர் சூர்யா மற்றும் கங்குவா டீம்: நடிகர் சூர்யா, திஷா பதானி உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகிவரும் படம் கங்குவா. இந்தப் படத்தின் டைட்டில், டீசர், போஸ்டர்கள், டீசர் என அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. வரலாற்றுப் பின்னணியுடன் எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தினை இயக்கிவருகிறார் சிவா. முன்னதாக கமர்ஷில் படங்களை மட்டுமே எடுத்துவந்த சிவா இயக்கத்தில் வரலாற்று பின்னணியுடன் எடுக்கப்பட்டுள்ள இந்தப் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை தூண்டியுள்ளது.

தன்னுடைய படங்களுக்காக மிகப்பெரிய மெனக்கெடல்களை செய்து வருபவர் நடிகர் சூர்யா. இந்தப் படத்தில் வரலாற்றுப் பின்னணியில் போர்க்களக்காட்சிகளிலும் அவர் நடித்துள்ளார். இதற்கான சூட்டிங் கொடைக்கானலின் அடந்த காடுகளில் டுத்து முடிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி அவர் தனது பிட்னசை அதிகரித்துள்ளார். மேலும் தற்போதைய காலகட்டத்தில் வாழும் இளைஞனையும் சூர்யா பிரதிபலித்துள்ளார். இதற்கான சூட்டிங் கோவா, சென்னை போன்ற இடங்களில் நடந்து முடிந்துள்ளது.

Actor Suriya and Kanguva team plans for next schedule to Bangkok

தேவிஸ்ரீ பிரசாத்துடன் சிங்கம் படங்களை தொடர்ந்து இந்தப் படத்திலும் இணைந்துள்ளார் சூர்யா. படத்தில் அவருக்கு ஜோடியாகியுள்ளார் பாலிவுட் நாயகி திஷா பதானி. இவர்கள் இருவரின் கூட்டணியில் கோவாவில் பாடல் காட்சிகள் மற்றும் காம்பினேஷன் காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்தப் பாடல் காட்சிகள் மிகவும் சிறப்பாக வந்ததையடுத்து முன்னதாக தேவிஸ்ரீ பிரசாத்திற்கு சூர்யா வாழ்த்துக்களை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, கோவை சரளா போன்றவர்களும் படத்தில் இணைந்துள்ளனர். சூர்யாவின் 42வது படமாக உருவாகியுள்ள இந்தப் படத்தின் சூட்டிங் கோவா, சென்னை, கொடைக்காடனலில் நடந்து முடிந்துள்ள நிலையில் அடுத்ததாக படக்குழுவினர் பாங்காக் செல்லவுள்ளனர். அங்கு வரலாற்று காட்சிகளின் மீதமுள்ள போர்ஷன்களின் சூட்டிங் நடத்தப்பட உள்ளது. இதற்காக இன்னும் சில தினங்களில் சூர்யா உள்ளிட்ட படக்குழுவினர் பாங்காக் செல்லவுள்ளனர்.

படத்தில் சூர்யாவுடன் மோதவுள்ளார் பாபி சிம்ஹா. இவர்கள் இருவரின் கூட்டணியும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இருவரின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அதிகமாக பரவி வருகிறது. இந்தப் படத்தின் சூட்டிங்கை வரும் நவம்பர் மாதத்திற்குள் நிறைவு செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இதையடுத்து சுதா கொங்கராவின் சூர்யா43 படத்தில் இணையவுள்ளார் சூர்யா. இந்தப் படத்தில் பான் இந்தியா ஸ்டார்கள் இணையவுள்ள நிலையில், படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை உண்டாக்கியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X