அமைதி காக்கும் சூர்யா 42 தயாரிப்பு நிறுவனங்கள்.. ரசிகர்களுக்காக அப்டேட் போட்ட சூர்யா.. என்ன ஆச்சு?
சென்னை: சூர்யா 42 படத்தின் பூஜை சமீபத்தில் போடப்பட்ட நிலையில், படத்தின் ஷூட்டிங் ஆரம்பமானதாக நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் போட்டுள்ளார்.
Recommended Video
ஸ்டூடியோ க்ரீன் மற்றும் யூவி கிரேயஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் பிரம்மாண்டமான படமாக சூர்யா 42 உருவாக உள்ளது.
இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பதானி ஒப்பந்தமாகி உள்ளார்.

சூர்யா 42 பூஜை
கடந்த ஞாயிற்றுக்கிழமை சூர்யா 42 படத்தின் பூஜை சென்னையில் போடப்பட்டது. நடிகர் சூர்யா பூஜையில் கலந்து கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி டிரெண்டானது. சூர்யா 42 படத்தின் பூஜை தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என காத்திருந்த ரசிகர்களுக்கு கடந்த 3 நாட்களாக எந்தவொரு அறிவிப்பும் வெளியாகவில்லை.

சூர்யா அறிவிப்பு
இந்நிலையில், நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் சூர்யா 42 படத்தின் பூஜை புகைப்படத்தை வெளியிட்டு ‘Shoot Begins' என போஸ்ட் போட்டுள்ளார். இயக்குநர் சிறுத்தை சிவா, இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத் உடன் சூர்யா நிற்கும் புகைப்படத்தையும் ரசிகர்களுக்காக பதிவிட்டுள்ளார்.

முட்டுக்காட்டில் சூட்டிங்
சூர்யா 42 படத்தின் படப்பிடிப்பு கோவாவுக்கு பதில் சென்னையில் உள்ள முட்டுக்காட்டில் கோவா போன்ற செட் அமைக்கப்பட்டு நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பிரம்மாண்ட பட்ஜெட்டில் இரு பாகங்களாக உருவாக உள்ள சூர்யா 42 படத்தின் சூட்டிங் ஏன் இப்படி சென்னையில் செட் போட்டு நடத்தப்படுகிறது என்கிற கேள்வியும் கிளம்பி உள்ளது.

தயாரிப்பு தரப்பு சிக்கலா
யூவி கிரியேஷன்ஸ் மற்றும் ஸ்டூடியோ க்ரீன் இணைந்து தயாரிப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில், இரு தரப்புக்கும் இன்னமும் ஏதோ ஒப்பந்தங்கள் கையெழுத்தாவதில் உள்ள சிக்கல் தான் இதற்கு காரணமா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. அடுத்த வாரம் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் உடன் பிரம்மாண்டமாக தயாரிப்பு தரப்பு அறிவிப்பை வெளியிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











