ஒரு பஃப் என ஆரம்பித்து அடிமையாகிவிடும்.. அந்த கெட்டப்பழக்கத்தை கைவிடுங்க.. சூர்யா அட்வைசஸ்

சென்னை: சூர்யா நடித்துள்ள ரெட்ரோ திரைப்படம் வரும் மே 1ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆக இருக்கிறது. இதற்கான புரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அண்மையில் இப்படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் மற்றும் நடிகை பூஜா ஹெக்டே கொடுத்த பேட்டிகள் இணையத்தில் டிரெண்டிங் ஆனது. இந்நிலையில், படத்தின் ஹீரோவான சூர்யா கடவுள் தேசத்திற்கு சென்று ஸ்டார் நடிகர்களை வியக்க வைக்கும் செயலை செய்திருக்கிறார். அதனோடு அந்த கெட்ட பழக்கம் படத்திற்கு மட்டும் தான் என்றும் தெரிவித்திருக்கிறார்.

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் 44ஆவது படம் ரெட்ரோ. இப்படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தை கார்த்திக் சுப்பராஜின ஸ்டோன் பெஞ்ச் மற்றும் சூர்யாவின 2டி நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. சமீபத்தில் படத்தின் டீசர் மற்றும் டிரைலர் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் இப்படம் மே 1ஆம் தேதி ரிலீஸ் ஆகும் நிலையில், டிக்கெட் முன்பதிவு ஆன்லைனில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தை காண சூர்யாவின் ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.

actor-suriya-appeals-to-fans-in-kerala-to-quit-smoking

யு/ஏ சான்றிதழ்: 2 மணி நேரம் 48 நிமிடங்கள் ஓடும் இப்படத்திற்கு சென்சார் போர்டு U/A சான்றிதழ் வழங்கியுள்ளது. அதிக வன்முறை மற்றும் ரத்தம் தெறிக்கும் காட்சிகள் இடம்பிடித்திருப்பதால் U/A சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், ரெட்ரோ திரைப்படம் முழுக்க முழுக்க காதல் கதை என படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் தெரிவித்திருக்கிறார். நான் எடுத்த படங்களிலேயே இது வித்தியாசமான அனுபவத்தை தந்திருக்கிறது என்றும் கூறினார்.

அடுத்த பட அறிவிப்பு: ரெட்ரோ படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சி சமீபத்தில் ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக விஜய் தேவரகொண்டா, தயாரிப்பாளர் நாக வம்சி, இயக்குநர் வெங்கி அட்லுரி உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர். இந்த விழாவில் தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை சூர்யா வெளியிட்டார். அடுத்ததாக வெங்கி அட்லுரி இயக்கத்தில் நடிக்கவுள்ளதாகவும், நாக வம்சி தயாரிக்க இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், தமிழ் படமாக உருவானாலும், பெரும்பாலான காட்சிகள் ஹைதராபாத்தில் தான் படமாக்கப்படுகிறது என தெரிவித்தார். ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நடித்து வரும் சூர்யா அடுத்ததாக வாடிவாசல் படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சூர்யா வெங்கி அட்லுரிக்கு கால்ஷீட் கொடுத்துள்ளார். வெற்றிமாறனை பழிவாங்குவதாகவும் கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.

actor-suriya-appeals-to-fans-in-kerala-to-quit-smoking

சிகரெட் பிடிக்காதீங்க: இதைத்தொடர்ந்து நேற்று ரெட்ரோ படத்திற்காக கேரளா சென்ற நடிகர் சூர்யா புகைப்பழக்கத்திற்கு யாரும் அடிமை ஆக வேண்டாம் என ரசிகர்களிடம் வேண்டுகோள் வைத்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது, நான் படத்திற்காக மட்டுமே சிகரெட் புகைக்கிறேன். தயவு செய்து யாரும் அதை சரி என எடுத்துக்கொண்டு உபயோகிக்காதீர்கள். ஒரு சிகரெட் தானே, ஒரு பஃப் என நினைத்து புகைப்பழக்கத்திற்கு அடிமை ஆகாதீர்கள். சிகரெட் உங்களை அடிமையாக்கி விடும். இதை எந்த விதத்திலும் நான் ஆதரிக்கமாட்டேன். ரெட்ரோ படம் கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும். படத்தை நான் பார்த்துவிட்டேன். அடுத்தடுத்து நல்ல படங்களில் நடிக்க முயற்சி செய்து வருகிறேன். வித்தியாசமான கதைகளையும் தேர்ந்தெடுத்து நடிப்பதே உங்களுக்காகத்தான். உங்கள் அன்புக்கு எப்போதும் கடமைப்பட்டிருக்கிறேன் என சூர்யா தெரிவித்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X