இந்த வியூஸ் போதுமா குழந்தை.. சோஷியல் மீடியாவிலேயே விஜய்யை ஓடவிட்ட சூர்யா.. சரியான சம்பவம்!

சென்னை: நடிகர் விஜய் வாரிசு இசை வெளியீட்டு விழாவில் எடுத்த செல்ஃபி வீடியோ ட்விட்டரில் எடுத்திருந்த வியூஸை நடிகர் சூர்யா ட்விட்டரில் வெளியிட்ட வீடியோ அசால்ட்டாக முறியடித்துள்ளது.

தமிழ் சினிமாவை பொறுத்தவரை சோஷியல் மீடியா கிங் என்றால் அது விஜய் தான். ட்விட்டர் இந்தியாவில் அதிகம் பார்க்கப்பட்ட போஸ்ட், லைக் செய்யப்பட்ட போஸ்ட் என பல சாதனை பட்டியலில் விஜய்யின் பெயரும் இடம்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Actor Suriya beaten Vijay in Twitter video views

இந்நிலையில், சூர்யா போட்ட வீடியோ போஸ்ட் விஜய் வாரிசு ஆடியோ வெளியீட்டு விழாவில் வெளியிட்ட செல்ஃபி வீடியோவின் சாதனையை வெகு விரைவாக கடந்துள்ளது.

வாரிசு செல்ஃபி வீடியோ: நடிகர்களை விட ரசிகர்கள் தான் பாக்ஸ் ஆபிஸ் நம்பர்களையும், வியூஸ் நம்பர்களையும் அதிகம் கவனித்து எந்த நடிகர் பெரிய நடிகர் என்கிற போட்டியில் அடித்துக் கொண்டு அடுத்த நடிகரை இழிவுப்படுத்தி வருகின்றனர். அதே சமயம் மற்றொரு நடிகர் இந்த நடிகரை அடித்து துரத்தும் போது அவரது ரசிகர்கள் ட்ரோல் செய்ய ஆரம்பித்து விடுகின்றனர்.

வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் எடுத்த செல்ஃபி வீடியோ ட்விட்டரில் வெளியிடப்பட்ட நிலையில், இதுவரை அந்த வீடியோவை 26 மில்லியன் ரசிகர்கள் பார்த்துள்ளனர். இந்தியாவிலேயே முதன் முதலாக 25 மில்லியன் வீடியோவை கடந்த வீடியோ ட்வீட் அதுதான் என விஜய் ரசிகர்கள் மாஸ் காட்டி வந்தனர்.

Actor Suriya beaten Vijay in Twitter video views

முறியடித்த சூர்யா: நடிகர் சூர்யா சோஷியல் மீடியாவில் அதிக ரசிகர்களை கொண்டு இருக்கவில்லை என்கிற கணிப்பு இருந்தாலும், அவருக்கும் அதிகளவில் ரசிகர்கள் உள்ளனர் என்பதை சமீபத்தில் சுதா கொங்கரா இயக்கத்தில் மீண்டும் நடிக்க உள்ள புறநானூறு படத்தின் அறிவிப்பு வீடியோவை சூர்யா வெளியிட அந்த வீடியோ சில வாரங்களிலேயே 26 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை கடந்து விஜய்யின் ரெக்கார்டை முறியடித்துள்ளது.

கங்குவா வசூல்: நடிகர் விஜய் நடித்த லியோ படத்தின் வசூலையும் ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தின் வசூலையும் சூர்யாவின் கங்குவா திரைப்படம் முறியடிக்கும் என்றும் சூர்யா ரசிகர்கள் பெரும் நம்பிக்கையுடன் உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X