நேருக்கு நேர் படத்தில் துவங்கிய பயணம்.. சூர்யா நடிக்கவந்து 27 வருஷம் ஆயிடுச்சா.. ஸ்பெஷல் போஸ்டர் இதோ
சென்னை: நடிகர் சூர்யாவின் பயணம் நேருக்கு நேர் படத்தில்தான் துவங்கியது. இந்தப் படம் கடந்த 1997ம் ஆண்டில் வெளியான நிலையில், சூர்யா திரையுலகிற்கு வந்து 27 ஆண்டுகள் பூர்த்தியாகியுள்ளது. நேருக்கு நேர் படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்திருந்தார் சூர்யா. மணிரத்னம் தயாரிப்பில் இந்தப் படம் வெளியானது. படத்தை வசந்த் இயக்கியிருந்தார்.
தேவா இசையில் படத்தின் பாடல்களும் மிகப்பெரிய ஹிட்டடித்த நிலையில், சூர்யாவிற்கு இந்தப்படம் மிகச்சிறப்பாக அமைந்தது. தற்போது 27 ஆண்டுகளை சினிமாவில் பூர்த்தி செய்துள்ளார் சூர்யா. தன்னுடைய 44வது படத்தில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். சூர்யாவின் 27 ஆண்டு திரைப்பயணத்தை பாராட்டும்வகையில் சூர்யா 44 டீம் சார்பில் புதிய போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

நடிகர் சூர்யா: நடிகர் சூர்யாவின் திரைப்பயணம் வெற்றிகரமானது. கடந்த 1997ம் ஆண்டில் நேருக்கு நேர் படம் மூலம் சினிமாவில் என்ட்ரி கொடுத்திருந்தார் சூர்யா. முதல் படத்திலேயே நடிகர் விஜய்யுடன் இணைந்து நடித்திருந்தார். இயக்குநர் வசந்த் இயக்கத்தில் மணிரத்னம் தயாரிப்பில் உருவாகியிருந்த இந்தப் படத்திற்கு தேவா இசையமைத்திருந்தார். இந்தப் படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்த நிலையில் படத்தில் சூர்யாவின் கேரக்டரும் மிகச்சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது. இந்தப் படம் வெளியாகி 27 ஆண்டுகளை பூர்த்தி செய்துள்ள நிலையில், சூர்யாவும் தன்னுடைய 27 ஆண்டுகளை பூர்த்தி செய்துள்ளார்.
27 ஆண்டு திரைப்பயணம்: இதையொட்டி அவருக்கு பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்துக்களை அதிகளவில் பகிர்ந்து வருகின்றனர். தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா 44 படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. விரைவில் கங்குவா படம் ரிலீசாகவுள்ள நிலையில், படம் மிகப்பெரிய அளவில் கவனத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. வரும் அக்டோபர் 10ம் தேதி ரிலீசாகவிருந்த கங்குவா படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போயுள்ளது. இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். படம் நவம்பர் 15ம் தேதி ரிலீசாகவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சூர்யா 44 டீம் வெளியிட்ட புதிய போஸ்டர்: இந்நிலையில் சூர்யாவின் 27 ஆண்டுகால திரைப்பயணத்தையொட்டி சூர்யா 44 டீம் சார்பில் புதிய போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. அதில் அதிரடியாக பைக்கை சூர்யா ஓட்டி வருவதாக காணப்படுகிறது. இதன் பின்னணியில் நேருக்கு நேர் லுக்கில் சூர்யா பைக் ஓட்டி வருவதாகவும் காணப்படுகிறது. சூர்யாவின் இந்த வளர்ச்சியை 27 ஆண்டுகால பயணத்தை குறிப்பதாக இந்தப் போஸ்டர் அமைந்துள்ளது. தற்போது இந்த போஸ்டர் ட்ரெண்டாகி வருகிறது.
சூர்யா 44 படப்பிடிப்பு மும்முரம்: சூர்யா 44 படத்தின் சூட்டிங் அந்தமானில் தொடர்ந்து ஒரு மாதத்திற்கும் மேலாக நடந்து முடிந்த நிலையில், அடுத்தக்கட்ட சூட்டிங் ஊட்டியில் நடத்தப்பட்டுள்ளது. படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். பீஸ்ட் படத்திற்கு பிறகு தமிழில் அவர் நடித்துவரும் படம் இது. மேலும் படத்தில் ஜோஜு ஜார்ஜ், கருணாகரன், ஜெயராம் உள்ளிட்டவர்களும் நடித்து வருகின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையில் படத்தின் பாடல்களும் மிகுந்த கவனத்தை ஈர்க்கும் என்று எதிர்பார்க்கலாம். படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் மற்றும் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன்பென்ச் கிரியேஷன்ஸ் இணைந்து தயாரித்து வருகிறது.


Click it and Unblock the Notifications










