இதயத்தில் துளை ஏற்பட்டது போன்று உணர்கிறேன்.. நடிகர் சூர்யா உருக்கம்!

சென்னை: பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியத்தின் மறைவு இதயத்தில் துளை ஏற்பட்டது போன்று உள்ளதாக நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.

Recommended Video

SPB உடல் காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் • #RIP SPB

இசை உலகின் ஜாம்பவான், பல சாதனைகளுக்கு சொந்தக்காரரான பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் நேற்று காலமானார். அவரது மறைவுக்கு இந்திய சினிமாவே இரங்கல் தெரிவித்து வருகிறது.

அவரது உடல் சென்னையை அடுத்த தாமரைப்பாக்கத்தில் உள்ள பண்ணை தோட்டத்தில் காவல்துறை மரியாதையுடன் 72 குண்டுகள் முழங்க இன்று நல் அடக்கம் செய்யப்பட்டது.

இரங்கல்

இரங்கல்

அவரது உடலுக்கு இயக்குநர் பாரதிராஜா, அமீர், தேவி ஸ்ரீபிரசாத், உள்ளிட்ட பலரும் நேரில் அஞ்சலி செலுத்தினர். ஏராளமான பிரபலங்கள் சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டும் கருத்து பதிவிட்டும் தங்களின் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

விஜய் அஞ்சலி

விஜய் அஞ்சலி

நடிகர் விஜய் தாமரைப்பாக்கம் பண்ணை வீட்டிற்கு சென்று எஸ்பிபியின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார். மேலும் எஸ்பிபி சரணுக்கும் நடிகர் விஜய் ஆறுதல் கூறினார். நடிகர் அர்ஜூனும் எஸ்பிபியின் புகழ் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார். அப்போது பேசிய அவர் எஸ்பிபிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.

சூர்யா இரங்கல்

சூர்யா இரங்கல்

நடிகர்கள் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், தனுஷ், பிரசன்னா உள்ளிட்ட பலரும் பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியத்திற்கு டிவிட்டரில் இரங்கல் தெரிவித்தனர். அந்த வகையில் நடிகர் சூர்யாவும் டிவிட்டரில் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

இதயத்தில் துளை

இதயத்தில் துளை

இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், என் இதயத்தில் ஒரு துளை ஏற்பட்டது போல் உணருகிறேன். இது வாழ்நாளில் மகிழ்ச்சியான தருணங்களை இழப்பதைப் போன்று உள்ளது! எஸ்பிபி சார் நீங்கள் நித்தியம்.. உங்கள் சாதனைகள் ஈடுசெய்ய முடியாதவை! பணிவு என்றால் என்ன என்பதை எங்களுக்கு காட்டியதற்கு நன்றி. வாழ்க்கைக்கான உங்கள் வேலையை எப்போதும் புதையலாக இருக்கும்! பிரார்த்தனைகளும் அமைதியும்.. என குறிப்பிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X