ஒருத்தர் இறந்துட்டா அவ்ளோ தானா.. கே.வி ஆனந்த் மகள் திருமணம்.. கண்டுக்காத சூர்யா.. புலம்பிய பிரபலம்!
சென்னை: கனா கண்டேன், அயன், கோ, மாற்றான், அனேகன், கவண் மற்றும் காப்பான் என ஏகப்பட்ட சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய மறைந்த கே.வி. ஆனந்தின் மகள் திருமணம் சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது.
மறைந்த இயக்குநர் கே.வி. ஆனந்த் மகள் திருமணத்துக்கு விஜய்சேதுபதி, ஜீவா உள்ளிட்ட நடிகர்கள் வந்திருந்து மணமக்களை வாழ்த்தி உள்ளனர்.

ஆனால், அயன், மாற்றான், காப்பான் என கே.வி. ஆனந்த் இயக்கத்தில் 3 படங்களில் நடித்த நடிகர் சூர்யா வராதது குறித்து பிரபலம் ஒருவரே வருத்தத்துடன் போட்டுள்ள பதிவு இணையத்தில் விவாதத்தை கிளப்பி உள்ளது.
இயக்குநர் கே.வி. ஆனந்த்: முதல்வன், பாய்ஸ், சிவாஜி என ஷங்கர் படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றி வந்த கே.வி. ஆனந்த். ஷங்கரை போலவே பிரம்மாண்ட இயக்குநராக தமிழ் சினிமாவில் உருவெடுத்தார். கடல் நீரை குடிநீராக்கும் முயற்சியில் ஸ்ரீகாந்த், பிரித்விராஜ் நடித்த கனா கண்டேன் படத்தை கே.வி. ஆனந்த் இயக்கி இயக்குநராக அறிமுகமானார்.
ஆனால், அந்த படம் அவருக்கு பெரிதாக போகவில்லை. அதன் பின்னர் சூர்யா, தமன்னாவை வைத்து அவர் இயக்கிய அயன் திரைப்படம் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. தொடர்ந்து கோ, மாற்றான், அனேகன், கவண் மற்றும் காப்பான் என வித்தியாசமான கதைகளில் பிரம்மாண்ட படங்களை இயக்கிய கே.வி. ஆனந்த் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 2021ம் ஆண்டு ஏப்ரல் 30ம் தேதி மாரடைப்பு ஏற்பட்டு காலமானார்.
கே.வி. ஆனந்த் மகள் திருமணம்: இந்நிலையில், நேற்று சென்னையில் மறைந்த இயக்குநர் கே.வி. ஆனந்த் மகள் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. அந்த திருமணத்தில் நடிகர் விஜய்சேதுபதி கலந்து கொண்ட புகைப்படம் வெளியான நிலையில், நடிகர் சூர்யா, தனுஷ் உள்ளிட்டவர்கள் செல்லவில்லையா? என்கிற கேள்வியை நெட்டிசன்கள் எழுப்பி உள்ளனர்.

கோ படத்தில் நடித்த நடிகர் ஜீவாவும் திருமணத்துக்கு சென்றுள்ளார். இந்நிலையில், குறிப்பாக 3 படங்களில் ஹீரோவாக நடித்த சூர்யா ஏன் வரவில்லை என்கிற கேள்வி எழுந்துள்ளது.
உயிரோடு இருக்கும் வரை தான்: "தமிழ் சினிமாவில் புகழ்மிக்கவர்கள் உயிரோடு இருக்கும் வரைதான் அவர்களுக்குன்டான மரியாதை நட்பு அன்பு எல்லாம் கிடைக்கும்..
அந்த புகழ்மிக்கவர்கள் இறந்தவுடன் ஒரு சில நன்றியுள்ளவர்களை தவிர அனைவரும் அவர்களை மறந்துவிடுவார்கள்.
இதுதான் சினிமா டிசைன்...
அந்த வகையில் மறைந்த இயக்குநர் ஒளிப்பதிவாளர் திரு KV ஆனந்த் அவர்களின் மகள் திருமண வரவேற்பு விழா இன்று நடந்தது..
KV ஆனந்த் சார் இயக்கத்தில் நடித்த பல ஹிரோக்கள் வரவில்லை..ஆனால் விஜய்சேதுபதி தனது பிஸியான கால்ஷீட்களிலும் நேரத்தை ஓதுக்கி இந்த விழாவிற்கு வந்து மணமக்களை வாழ்த்தினார்.இந்த நன்றி மறவாத குணம்தான் சேதுவின் தனித்துவம்.
நல்ல மனம் வாழ்க." என ஜெயம் எஸ்.கே. கோபி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
கலை இயக்குநர் கிரண் புலம்பல்: "ஆமாம்.. நம்பமுடியவில்லை தான் ஆனால் இது தான் உண்மை என புரிந்தது. என்ன செய்வது, அவ்வளவு தான் உலகம் போல என நினைத்து மனதை தேற்றிக்கொள்ள மட்டுமே முடிந்தது." என கே.வி. ஆனந்த் படங்களில் கலை இயக்குநராகவும் ஒரு சில படங்களில் வில்லன் வேடத்திலும் நடித்த கலை இயக்குநர் கிரண் நடிகர் சூர்யா வராதது குறித்து வருத்தத்துடன் புலம்பி உள்ளார்.

சூர்யா ஏன் செல்லவில்லை: சமீப காலமாக பல பிரபலங்களின் மறைவு மற்றும் இதுபோன்ற சுப நிகழ்ச்சிகள் என பலவற்றையும் நடிகர் சூர்யாவும் தவிர்த்து வருகிறாரா? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். இயக்குநர் கே.வி. ஆனந்தின் குடும்பத்தையே சூர்யா மறந்து விட்டாரா? என்றும் நெட்டிசன்கள் விளாசி வருகின்றனர்.
அதே சமயம் கவண் படத்தில் நடித்த நடிகர் விஜய்சேதுபதி மற்றும் கோ படத்தில் நடித்த நடிகர் ஜீவா சென்றதற்கு ரசிகர்கள் அவர்களை பாராட்டி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











