'சில்லுக்கருப்பட்டி' இயக்குனர் ஹலிதாவை அப்படி பாராட்டிய சூர்யா, ஜோ... கொடுத்த கிப்ட்டை பாருங்க!
சென்னை: 'சில்லுக்கருப்பட்டி' படத்தின் டீமை வீட்டுக்கு அழைத்து நடிகர் சூர்யாவும், ஜோவும் பாராட்டியுள்ளனர்.
கடந்த ஆண்டு வெளியாகி, ரசிகர்களின் பாராட்டைப் பெற்ற படம் சில்லுக்கருப்பட்டி. 4 வெவ்வேறு கதைகளை உள்ளடக்கிய ஆந்தாலஜி வகை படம் இது.
சமுத்திரக்கனி, சுனேனா, மணிகண்டன், நிவேதிதா சதீஷ், லீலா சாம்சன், பேபி சாரா உட்பட பலர் நடித்திருந்தனர்.

அடுத்த படம்
ஹலிதா ஷமிம் இயக்கி இருந்தார். இவர் ஏற்கனவே பூவரசம் பீப்பி படத்தை இயக்கி இருந்தார். சில்லுக்கருப்பட்டி படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. சினிமா பிரபலங்களும் இந்தப் படத்தை பாராட்டினார். இந்தப் படத்துக்கு பாராட்டு விழாக்களும் நடந்தன. இதையடுத்து கவனிக்கத்தக்க இயக்குனர் ஆனார் ஹலிதா.

அடுத்த பட போஸ்டர்
இந்நிலையில் இவர் தனது அடுத்தப் படம் குறித்த அறிவிப்பை கடந்த சில நாட்களுக்கு முன் வெளியிட்டிருந்தார். இதுகுறித்து தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் படத்தின் போஸ்டரையும் பதிவிட்டிருந்தார். 'என் அடுத்தப்படம் பற்றி பலர் கேட்டுக் கொண்டிருக்கின்றனர். இதுதான் அடுத்த பட போஸ்டர். 'ஏலே'தான் என் அடுத்தப்படம். விரைவில் ரெடியாகும் எனத் தெரிவித்திருந்தார்.
யதார்த்த சினிமா
சுவரில் சாத்தப்பட்டிருக்கும் சைக்கிள், பின் கேரியரில் ஐஸ்பெட்டி, ஒரு ஜன்னல் என கிராமத்தை ஞாபகப்படுத்தும் அந்த போஸ்டரில் சைக்கிள் டயரில் ஏலே என்ற எழுத்து உள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மீண்டும் யதார்த்த சினிமாவை எடுக்க இருப்பதாக ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
சூர்யா, ஜோதிகா
இதை, ரிலையன்ஸ் என்டர்டெயின்மென்ட், வால்வாச்சர் பிலிம்ஸுடன் இணைந்து ஒய் நாட் ஸ்டூடியோஸ் சசிகாந்த் தயாரிக்கிறார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்கிறார். கபேர் வாசுகி இசை அமைத்துள்ளார். இந்நிலையில் இயக்குனர் ஹலீதாவையும் சில்லுக்கருப்பட்டி பட டீமையும் நடிகர் சூர்யா நேற்று தனது வீட்டுக்கு அழைத்தார். சூர்யாவும் நடிகை ஜோதிகாவும் ஒவ்வொருவரையும் பாராட்டினார். பிறகு கேக் வெட்டப்பட்டது.

கைகளைப் பிடித்து
இதுபற்றி ஹலிதா தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார். அதில், 'சூர்யாவும் ஜோதிகாவும் எங்கள் டீமை வீட்டுக்கு அழைத்து வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். அவர்களின் பாராட்டில் பேச்சற்றுப் போனேன். அவர்களின் கைகளைப் பிடித்துக்கொண்டு என் நன்றிகளைத் தெரிவித்தேன். அவர்கள் எனக்கு ஆப்பிள் மேக்புக்கை(New Apple MacBook Pro) பரிசளித்தனர்' என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











