Actor Suriya: காலேஜ் ஸ்டூடண்ட் லுக்கில் சூர்யா.. லேட்டஸ்ட் கிளிக்ஸ் இதோ!

சென்னை: நடிகர் சூர்யா நடிப்பில் கங்குவா படத்தின் சூட்டிங் நடந்து முடிந்துள்ளது. இந்தப் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் தற்போது துவங்கி விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. வரலாற்று பின்னணியில் உருவாகியுள்ள இந்தப்படம் சூர்யா கேரியரில் மிகவும் பிரம்மாண்டமான அளவில் உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் ரிலீசுக்கு முந்தைய பிசினசிலேயே அதிகமாக இந்தப் படம் வசூலித்துக் கொடுத்துள்ளதாக அப்டேட் தெரிவிக்கப்பட்டுள்ளது. கங்குவா படத்தில் வித்தியாசமான கெட்டப்புகளில் சூர்யாவை பார்க்க முடியும் என்று கூறப்பட்டுள்ளது. இதற்கான தன்னுடைய பிட்னசை மிகவும் சிறப்பாக பலப்படுத்தினார் சூர்யா.

படத்தின் அடுத்தடுத்த போஸ்டர்கள், கிளிம்ப்ஸ் உள்ளிட்டவை வெளியாகி ரசிகர்களை அதிகமாக கவர்ந்த நிலையில், படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேவிஸ்ரீ பிரசாத்தின் இசையும் இந்தப் படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளதாகவும் படக்குழு சார்பில் அப்டேட் தெரிவிக்கப்பட்டுள்ளது. படத்தில் சூர்யாவின் இன்ட்ரோ சாங், க்ளோனிங் முறையில் சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. 2000 நடனக்கலைஞர்களுடன் சூர்யா ஆடும்வகையில் இந்தப் பாடல் மிரட்டலாக அமைக்கப்பட்டுள்ளதாகவும் படக்குழு அப்டேட் தெரிவித்துள்ளது.

Actor Suriya going to act as an College student in his next and recent clicks here

நடிகர் சூர்யா: நடிகர் சூர்யா, திஷா பதானி உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள கங்குவா படத்தின் சூட்டிங் ஏறக்குறைய நிறைவு செய்யப்பட்டுள்ளது. படத்தில் சூர்யா, பாபி தியோல் ஆகியோரின் போர்ஷன்கள் நிறைவடைந்துள்ளன. இன்னும் சில தினங்களில் படத்தின் பேட்ச் வேலைகளும் நிறைவு செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தப் படத்தின் அடுத்தடுத்த அப்டேட்களை படக்குழுவினர் வெளியிட்டு வருகின்றனர். படத்தின் அடுத்தடுத்த போஸ்டர்கள், கிளிம்ப்ஸ் உள்ளிட்டவை வெளியாகி ரசிகர்களை மிரட்டியுள்ளன. இந்நிலையில் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் ரசிகர்களை கொண்டாட செய்து வருகிறது.

Actor Suriya going to act as an College student in his next and recent clicks here

கங்குவா படம்: இந்தப் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படம் ஆகஸ்ட் மாதத்தில் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தில் சூர்யாவின் இன்ட்ரோ பாடல் மிகவும் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. க்ளோனிங் முறையில் படத்தில் 2000 நடனக்கலைஞர்கள் இடம்பெறும்வகையில் இந்தப்பாடல் உருவாகியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக சுதா கொங்கரா இயக்கத்தில் புறநானூறு படத்தில் இணையவுள்ளார் சூர்யா. படத்தில் கல்லூரி மாணவராக சூர்யா நடிக்கவுள்ளார்.

புறநானூறு படம்: மேலும் படத்தில் துல்கர் சல்மான், நஸ்ரியா, அதிதி ஷங்கர் உள்ளிட்டவர்களும் இணைந்துள்ளதாக கூறப்படும் நிலையில், சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் படத்தை தயாரிக்கவுள்ளது. முன்னதாக சூர்யா -சுதா கொங்கரா கூட்டடணியில் உருவான சூரரை போற்று படம் மிகப்பெரிய ஹிட்டடித்த நிலையில், இந்தப் படத்திற்கு அதிகமான எதிர்பார்ப்பு காணப்படுகிறது. படத்தின் டைட்டில் மாறக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதனிடையே படத்தில் கல்லூரி மாணவராக நடிக்கவுள்ள சூர்யா, இதற்காக சில வாரங்களாக தன்னுடைய உடலின் எடையை குறைத்து ஸ்லிம்மாகியுள்ளார்.

Actor Suriya going to act as an College student in his next and recent clicks here

கல்லூரி மாணவன் லுக்: அதிகமான வொர்க் அவுட்டுடன் உணவுக் கட்டுப்பாட்டையும் மேற்கொண்டு தன்னுடைய உடல் எடையை சூர்யா குறைத்துள்ளார். முன்னதாக கங்குவா படத்தில் இளவரசர் கெட்டப்பிற்காக தன்னுடைய உடல் எடையை அதிகரித்து கெத்து காட்டியிருந்தார் சூர்யா. இந்நிலையில் தற்போது கல்லூரி மாணவன் கெட்டப்பிற்காக உடல் எடையை குறைத்து யங் லுக்கிற்கு மாறியுள்ளார். படத்திற்கு படம் வித்தியாசம் காட்டிவரும் சூர்யாவின் இந்த டெடிகேஷன்தான் அவரது படங்களின் வெற்றிக்கு ஆதாரமாக அமைந்துள்ளதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். இதனிடையே அவரது ரீசண்ட் லுக் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X