Suriya: அக்டோபரில் கங்குவா சூட்டிங்கை நிறைவு செய்யும் சூர்யா.. அடுத்தது சூர்யா43 தான்!
சென்னை: நடிகர் சூர்யாவின் கங்குவா படத்தின் சூட்டிங் அடுத்தடுத்த கட்டங்களில் நடைபெற்று வருகிறது. படத்தை சிவா இயக்கி வருகிறார்.
1500 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாற்று பின்னணியுடன் கங்குவா படம் உருவாகி வருகிறது. படத்தின் டைட்டில் டீசர், கிளிம்ப்ஸ், பர்ஸ்ட் லுக் ஆகியவை வெளியாகி எதிர்பார்ப்பை எக்கச்சக்கமாக எகிற செய்துள்ளது.
இந்தப் படத்தின் சூட்டிங் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அடுத்த வாரத்தில் படத்தின் அடுத்தக்கட்ட சூட்டிங் சென்னையில் துவங்கவுள்ளது.

அக்டோபரில் கங்குவா சூட்டிங்கை நிறைவு செய்யும் சூர்யா: நடிகர் சூர்யா, திஷா பட்டானி உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகிவருகிறது கங்குவா. சிவா இயக்கத்தில் 1500 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாற்றுப் பின்னணியை அடிப்படையாக கொண்டு இந்தப் படத்தின் சூட்டிங் நடைபெற்று வருகிறது. முன்னதாக அஜித், ரஜினி உள்ளிட்டவர்களை வைத்து கமர்ஷியல் படங்களை கொடுத்துவந்த இயக்குநர் சிவா, இந்தப் படத்தில் மாறுபட்ட கதைக்களத்தில் களமிறங்கியுள்ளார்
படம் பான் இந்தியா படமாக தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 10 மொழிகளில் ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. பிரெஞ்சு உள்ளிட்ட வெளிநாட்டு மொழிகளிலும் படம் ரிலீசாகவுள்ளதாக படக்குழு சார்பில் அப்டேட் தெரிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் அடுத்தடுத்த போஸ்டர்கள் உள்ளிட்டவை வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகின்றன. படத்தின் டைட்டில் டீசர் வெளியான நிலையில், தொடர்ந்து அடுத்தக்கட்ட அப்டேட் குறித்து ரசிகர்கள் தொடர்ந்து கேட்டு வந்தனர்.
இந்நிலையில் கடந்த மாதம் சூர்யாவின் பிறந்தநாளையொட்டி படத்தின் மிரட்டலான கிளிம்ப்ஸ் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. சர்வதேச தரத்தில் கங்குவா படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியானது. ஏற்கனவே இந்தப் படத்தின் மீது ரசிகர்கள் அதிகமான எதிர்பார்ப்புடன் உள்ள நிலையில், கிளிம்ப்ஸ் வீடியோ இந்த எதிர்பார்ப்பை எகிற செய்துள்ளது. கடந்த சில மாதங்களில் இந்தப் படத்தின் சூட்டிங் கோவா, கொடைக்கானலின் அடர்ந்த காட்டுப்பகுதிகளில் எடுக்கப்பட்டது.

இந்நிலையில் கங்குவா படத்தின் அடுத்தக்கட்ட சூட்டிங் சென்னை ஈவிபி படப்பிடிப்பு தளத்தில் அடுத்த வாரத்தில் துவங்கவுள்ளதாக படக்குழு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு வாரம் தொடர்ந்து நடைபெறவுள்ள இந்த சூட்டிங்கை தொடர்ந்து ராஜமுந்திரியில் படத்தின் அடுத்தக்கட்ட சூட்டிங்கை இம்மாத இறுதியிலும் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. தொடர்ந்து வெளிநாட்டிற்கு படக்குழுவினர் பயணம் மேற்கொள்ளவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
படத்தில் சூர்யா, மிகுந்த மெனக்கெடலுடன் நடித்து வருவதாக தன்னுடைய சமீபத்திய பேட்டியில் சிவா பெருமிதம் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இந்தப் படத்தில் அவரது போர்ஷன்கள் வரும் அக்டோபர் மாதத்தில் நிறைவடையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதையடுத்து சில தினங்கள் இடையில் ஓய்வெடுக்கவுள்ள சூர்யா, டிசம்பரில் தன்னுடைய சூர்யா43 படத்தின் சூட்டிங்கில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் படத்தை சுதா கொங்கரா இயக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











