Suriya: ஐதராபாத்தில் கங்குவா பட பிரமோஷன்.. கண்கலங்கிய சூர்யா.. என்னதான் நடந்தது?
ஐதராபாத்: நடிகர் சூர்யா, திஷா பதானி, பாபி தியோல் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள கங்குவா படம் அடுத்த மாதம் 14ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ள நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னதாகவே படத்தின் பிரமோஷன்களை படக்குழுவினர் துவங்கி விட்டனர். நடிகர் சூர்யாவும் அடுத்தடுத்த பிரமோஷன்களில் ஈடுபட்டு ரசிகர்களை சந்தித்து வருகிறார்.
இயக்குநர் சிவா இயக்கத்தில் ஸ்டூடியோ கிரீன் நிறுவன தயாரிப்பாக உருவாகியுள்ளது கங்குவா படம். முன்னதாக இந்தப் படத்திற்கு கங்குவன் என்றுதான் பெயரிடப்பட்டிருந்ததாகவும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாதான் இந்தப் படத்தின் தலைப்பை கங்குவா என்று மாற்றியதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். கங்குவா என்றால் நெருப்பின் நாயகன் என்று பொருள் என்றும் கூறியுள்ளனர்.

நடிகர் சூர்யா: நடிகர் சூர்யாவின் கங்குவா படத்தை இயக்கி முடித்துள்ளார் இயக்குநர் சிவா. இந்த கூட்டணி இணைந்து சூப்பர்ஹிட் கமர்ஷியல் படத்தை கொடுக்கும் என்று எதிர்பார்க்க ரசிகர்களுக்கு இவர்கள் ஆச்சர்யம் கலந்த அதிர்ச்சியையே பரிசாக கொடுத்துள்ளனர். வரலாற்று பின்னணியில் மிகப்பெரிய பிரம்மாண்ட பட்ஜெட்டில் இவர்கள் கங்குவா படத்தை உருவாக்கியுள்ளனர். இவர்களுக்கு முழுமையான படைப்பு சுதந்திரத்தை ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா கொடுத்ததாகவும் சிவா முன்னதாக பேட்டியொன்றில் பாராட்டு தெரிவித்துள்ளார். படம் மிரட்டலாக உருவாகியுள்ள நிலையில் அடுத்த மாதம் 14ம் தேதி படம் சர்வதேச அளவில் 10க்கும் மேற்பட்ட மொழிகளில் ரிலீசாகவுள்ளது.
கங்குவா படம்: இந்திய அளவிலும் பான் இந்தியா படமாக தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் கங்குவா படம் ரிலீசாகவுள்ள நிலையில், தமிழில் மட்டுமில்லாமல் மற்ற மாநிலங்களிலும் அடுத்தடுத்து ரசிகர்களை சந்தித்து வருகிறது படக்குழு. படத்தின் இசை வெளியீட்டு விழா, வரும் 26ம் தேதி சென்னை சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் மிகவும் பிரம்மாண்டமாக மேற்கொள்ளப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, சென்னை, டெல்லி, மும்பை ஆகிய இடங்களில் இந்தப் படத்தின் பிரமோஷன்களை முடித்துள்ள சூர்யா உள்ளிட்ட படக்குழுவினர் இன்றைய தினம் ஐதராபாத்தில் ரசிகர்களை சந்தித்துள்ளனர்.
கண்கலங்கிய சூர்யா: இந்த நிகழ்ச்சியின்போது ரசிகர்களை சந்தித்த நடிகர் சூர்யா, தன்னுடைய உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாமல் கண்கலங்கியதை பார்க்க முடிந்தது. முன்னதாக சூர்யாவின் சூர்யா சன் ஆஃப் கிருஷ்ணன் படம் வெளியாகி மிகப்பெரிய ரசிகர்கள் வட்டத்தை தெலுங்கில் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. இந்நிலையில் கடந்த இரு ஆண்டுகளாக தன்னுடைய படங்கள் எதுவும் திரையரங்குகளில் ரிலீசாகாத நிலையில், ரசிகர்களின் அன்பு தன்னை கண்கலங்க செய்துள்ளதாக சூர்யா குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து ஆந்திர ரசிகர்களுக்கும் தனக்கு இரத்த சம்பந்தம் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
மதன் கார்க்கி விமர்சனம்: இந்த சொந்தம் தனக்கு எப்போதுமே ஸ்பெஷல் என்றும் சூர்யா தெரிவித்துள்ளார். முன்னதாக கங்குவா படத்தின் முழு வடிவத்தை பார்த்துள்ள பாடலாசிரியர் மதன் கார்க்கி, படத்தை ஒவ்வொரு முறை பார்க்கும்போதும் கொடுக்கும் தாக்கம் அதிகரித்துக் கொண்டே செல்வதாக தெரிவித்துள்ளார். காட்சிகளின் பிரம்மாண்டம், இசையின் கம்பீரம், சூர்யாவின் ஆளுமை ஆகியவை இணைந்து இந்தப் படத்தின் மிகச்சிறந்த படைப்பாக ஆக்கியுள்ளதாக மதன் கார்க்கி கூறியுள்ளார். மேலும் அற்புதமான அனுபவத்தை வடிவமைத்துள்ள இயக்குநர் சிவாவிற்கும் நன்றி தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











