Actor Suriya: சூட்டிங் ஸ்பாட்டில் விபத்து.. சூர்யாவிற்கு தலையில் காயம்.. அச்சச்சோ என்னாச்சு?

சென்னை: நடிகர் சூர்யா தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் இணைந்து சூர்யா 44 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் டைட்டில் உள்ளிட்ட அடுத்தடுத்த அப்டேட்கள் விரைவில் எதிர்பார்க்கப்படுகின்றன. தீபாவளியை ஒட்டி சூர்யாவின் கங்குவா படம் ரிலீசாகவுள்ள நிலையில் அந்தப் படத்தின் ரிலீஸுக்கு பிறகு சூர்யா 44 படத்தின் டைட்டில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த சில வாரங்களாக சூர்யா 44 படத்தின் முதல்கட்ட ஷூட்டிங் அந்தமானில் தொடர்ந்து நடத்தப்பட்டது. இதையடுத்து இரண்டாவது கட்டமாக கடந்த மாதத்தில் ஊட்டியில் சூட்டிங் துவங்கப்பட்டு தொடர்ந்து மும்முரமாக நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது ஷூட்டிங்கின் போது ஏற்பட்ட விபத்து காரணமாக படத்தின் சூட்டிங் தடைபட்டுள்ளது. சூர்யாவிற்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளது.

Suriya Suriya 44 movie Karthik subbaraj

நடிகர் சூர்யா: நடிகர் சூர்யா தன்னுடைய சூர்யா 44 படத்தில் தற்போது மிகவும் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் சூர்யாவுடன் பூஜா ஹெக்டே உள்ளிட்டவர்கள் நடித்து வருகின்றனர். ஒரு மாதத்தை தாண்டி அந்தமானில் தொடர்ந்து இடைவெளி இல்லாமல் படத்தின் முதல்கட்ட சூட்டிங் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. அங்கு இந்த படத்தின் ஆக்சன் காட்சிகள் உள்ளிட்டவை அந்தமான் ஹார்பர் உள்ளிட்ட இடங்களில் நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் கடந்த மாதம் 26ம் தேதி முதல் இந்த படத்தின் இரண்டாவது கட்ட ஷூட்டிங் ஊட்டியில் துவங்கி மும்முரமாக நடந்து வந்தது.

சூர்யா 44 படம்: காதல் மற்றும் ஆக்ஷனை அடிப்படையாகக் கொண்டு உருவாகி வரும் சூர்யா 44 படத்தில் சூர்யா மற்றும் பூஜா ஹெட்டே இடையிலான ரொமான்டிக் காட்சிகள் ஊட்டியில் படமாக்கப் பட்டதாக கூறப்பட்டது. இந்த மாதம் 15ம் தேதி வரை இந்த படத்தின் ஷூட்டிங் ஊட்டியில் படமாக்கப்பட உள்ளதாக கூறப்பட்ட நிலையில் படத்தின் ஆக்சன் காட்சி ஒன்றின் ஷூட்டிங்கின்போது சூர்யாவிற்கு தலையில் காயம் ஏற்பட்டதாக படக்குழு சார்பில் தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சூட்டிங் உடனடியாக நிறுத்தப்பட்டு சூர்யாவிற்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது.

சூர்யா தலையில் காயம்: அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சில தினங்கள் ஓய்வெடுக்கும்படி அறிவுறுத்தியுள்ளனர். இதனால் அவர் சில தினங்கள் ஓய்விற்கு பிறகு மீண்டும் இந்த படத்தின் ஷூட்டிங்கில் இணையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து அடுத்தடுத்த ஷூட்டிங்கை மிகவும் சரியான திட்டமிடலுடன் கார்த்திக் சுப்புராஜ் மேற்கொண்டுவந்த நிலையில் தற்போது சூர்யாவிற்கு ஏற்பட்ட விபத்து மற்றும் காயத்தை தொடர்ந்து படத்தின் சூட்டிங் சில தினங்கள் தாமதப்பட்டுள்ளது. விரைவில் ஊட்டியில் இந்த படத்தின் சூட்டிங் துவங்கப்பட்டு சில தினங்களில் நடத்தப்பட்டு இரண்டாவது கட்ட ஷூட்டிங் நிறைவு செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

எதிர்பார்ப்பில் கங்குவா படம்: இதனிடையே மிகுந்த எதிர்பார்ப்பிற்கு உள்ளாகியுள்ளது சூர்யாவின் கங்குவா. இந்தப் படம் அவரது முந்தைய பாகமான எதற்கும் துணிந்தவன் படத்தின் வாழ்நாள் வசூலை முதல் நாளிலேயே எட்டிப் பிடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் சூர்யா ஏழு வேடங்களில் நடிப்பதாக கூறப்பட்டுள்ளது. படத்தில் சூர்யாவுடன் பாபி தியோல், திஷா பதானி, ஜெகபதி பாபு, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர். சூர்யாவின் கேரியரிலேயே மிக அதிகமான பொருட்செலவில் 350 கோடி ரூபாய் வரையிலான பட்ஜெட்டில் இந்தப் படம் உருவாகியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X