Suriya: ரொம்ப பெருமையா இருக்கு அப்பா.. சிவக்குமாரின் சாதனை.. நெகிழ்ச்சியில் சூர்யா!
சென்னை: நடிகர் சிவகுமார் 1965ம் ஆண்டு வெளியான காக்கும் கரங்கள் படம்மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தவர். தொடர்ந்து சிவாஜி கணேசன், எம்ஜிஆர் முத்துராமன் என முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார் சிவகுமார். சிந்து பைரவி, ரோசாப்பூ ரவிக்கைக்காரி உள்ளிட்ட படங்களில் தன்னுடைய ஆளுமையை சிறப்பாக வெளிப்படுத்தி ரசிகர்களின் விருப்பத்திற்குரிய நடிகராக தன்னை நிலைநிறுத்தினார்.
நடிப்பு மட்டுமில்லாமல் சிவகுமாருக்கு ஓவியர், மேடைப் பேச்சாளர் என பல்வேறு முகங்கள் காணப்படுகின்றன. யோகாவில் மிகப்பெரிய உயரத்தை தொட்டவர் சிவகுமார். இந்த வயதிலும் தன்னுடைய பிட்னஸை யோகா மூலமே இவர் மெயின்டெயின் செய்து வருகிறார். சிவகுமாரின் மகன்கள் சூர்யா மற்றும் கார்த்தி இருவரும் தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களாக உள்ளனர்.

நடிகர் சிவகுமார்: நடிகர் சிவகுமார் நடிகராக மட்டுமில்லாமல் ஓவியராகவும் மேடைப் பேச்சாளராகவும் பன்முக திறமைகளுடன் காணப்படுபவர். துவக்கத்தில் சினிமா சார்ந்த ஓவிய வேலைகளுக்காக இவர் திரைத்துறையில் நுழைந்த நிலையில் இவருக்கு நடிகராகும் வாய்ப்பு காக்கும் கரங்கள் படம் மூலம் கிடைத்தது. அதை சிறப்பாக பயன்படுத்திக் கொண்டார் சிவகுமார். காக்கும் கரங்கள் படம் 1965ம் ஆண்டில் வெளியான நிலையில், தொடர்ந்து அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு சிவகுமாருக்கு கிடைத்தது. சிவாஜி கணேசன் மீது கொண்ட ஆர்வத்தால் தன்னுடைய நடிப்பை அவரைப் போலவே அமைத்திருந்தார் சிவகுமார்.
சிவகுமாரின் தனி ஸ்டைல்: இதையடுத்து உயர்ந்த மனிதன் படத்தில் சிவாஜி கணேசனுடன் இணைந்து நடிக்கும் சந்தர்ப்பம் கிடைத்த நிலையில் தனக்கென தனியாக ஒரு நடிப்பு ஸ்டைலை வைத்துக் கொள்ளுமாறு சிவாஜி கொடுத்த அட்வைஸால் அதை அப்படியே தன்னுடைய நடிப்பில் கொண்டு வந்தார் சிவகுமார். சில சமயங்களில் சிவகுமார் ஓவர் ஆக்டிங் செய்வதாக விமர்சனங்கள் இருந்ததையும் பார்க்க முடிந்தது. ஆயினும் தன்னுடைய தனித்துவமான நடிப்பால் சிந்து பைரவி, ரோசாப்பூ ரவிக்கைக்காரி உள்ளிட்ட பல படங்களில் ரசிகர்களின் அதிகமான வரவேற்பை பெற்றவர் சிவகுமார். இந்த படங்கள் ரசிகர்களின் எவர்கிரீன் ஃபேவரிட்டாக அமைந்தன.

சின்னத்திரையிலும் சிவகுமார்: தொடர்ந்து சின்னத்திரையிலும் சித்தி, அண்ணாமலை என அடுத்தடுத்த சீரியல்களில் ராதிகாவுடன் இணைந்து நடித்து மாஸ் காட்டினார். தற்போதும் சில படங்களில் நடித்து வரும் சிவகுமார். நூற்றுக்கும் மேற்பட்ட மேடை சொற்பொழிவுகளில் பங்கேற்று மிகப்பெரிய ஆளுமையாக திகழ்ந்து வருகிறார். சிவகுமாருக்கு ஓவியம் மிகப்பெரிய பேஷனாக காணப்படுகிறது. தற்போதும் இதை தொடர்ந்து வருகிறார். இவரது ஓவியங்கள் பிரபலங்கள் பலராலும் பாராட்டுகளுக்கு உள்ளாகி வருகின்றன. இந்நிலையில் நடிகர் சூர்யா தன்னுடைய அப்பாவின் இந்த திறமை குறித்த புதிய பதிவினை தன்னுடைய எக்ஸ் தள பதிவில் பகிர்ந்துள்ளார்.
சிவகுமாரின் சாதனை: சிவகுமாரின் இந்த வாட்டர் கலர் ஓவியங்கள் போஸ்ட் கார்டுகளில் பயன்படுத்தப்படுவது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள சூர்யா, தன்னுடைய அப்பா குறித்து மேலும் பெருமிதம் கொள்வதாக தன்னுடைய பதிவில் கூறியுள்ளார். தன்னுடைய அப்பாவின் வாட்டர்கலர் மற்றும் ஸ்பாட் ஓவியங்கள் அவரது தன்னலமில்லாத காதலை வெளிப்படுத்துவதாகவும் சூர்யா கூறியுள்ளார். தன்னுடைய அப்பாவின் சில ஓவியங்களையும் அவர் பகிர்ந்துள்ளார்.



Click it and Unblock the Notifications











