Suriya speech: ரோலக்ஸ் கேரக்டர் என்னோட பாதையையே மாற்றிவிட்டது.. சிலிர்த்த சூர்யா!
சென்னை: நடிகர் சூர்யா தற்போது கங்குவா படத்தின் இறுதிக்கட்ட சூட்டிங்கில் பிசியாக நடித்து வருகிறார். படத்தின் சூட்டிங் தாய்லாந்தில் நடைபெற்று வருகிறது.
இந்தப் படத்தை தொடர்ந்து சுதா கொங்கராவின் இயக்கத்தில் சூர்யா புறநானூறு படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார். அடுத்த மாதத்தில் படத்தின் சூட்டிங் துவங்கவுள்ளது.

அடுத்ததாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரோலக்ஸ் படத்திலும் இவர் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
நடிகர் சூர்யா: நடிகர் சூர்யா, திஷா பதானி உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துவரும் கங்குவா படத்தை இயக்கி வருகிறார் இயக்குநர் சிவா. வரலாற்று பின்னணியுடன் எடுக்கப்பட்டுவரும் கங்குவா படத்தின் சூட்டிங் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இறுதிக்கட்ட சூட்டிங் தாய்லாந்தில் எடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக கோவா, சென்னை, கொடைக்கானலின் அடர்ந்த காட்டுப் பகுதிகளில் இந்தப் படத்தின் சூட்டிங் எடுக்கப்பட்டது.
சூர்யாவின் கங்குவா படம்: படம் அடுத்த ஆண்டு கோடைக் கொண்டாட்டமாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்த மாதத்துடன் சூட்டிங்கை நிறைவு செய்துவிட்டு போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளில் படக்குழுவினர் ஈடுபட உள்ளனர். படத்தின் சிஜி வேலைகளும் ஒருபுறம் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதனிடையே படத்தின் இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத்தும் தன்னுடைய பங்கிற்கு வேலைகளை துரிதப்படுத்தி வருகிறார். முன்னதாக கோவாவில் ஒரு பாடல் காட்சி படமாக்கப்பட்டது.

ஜப்பான் ஆடியோ வெளியீடு: இந்தப் பாடல் காட்சி மிகவும் சிறப்பாக அமைந்துள்ளதாகவும் சூர்யா மற்றும் ஜோதிகா மிகவும் உற்சாகமடைந்து தனக்கு பரிசுகள், இனிப்புகள் உள்ளிட்டவற்றை அனுப்பி வைத்ததாகவும் முன்னதாக பேட்டியொன்றில் தேவிஸ்ரீ பிரசாத் கூறியிருந்தார். இதனிடையே நேற்றைய தினம் சென்னையில் நடைபெற்ற கார்த்தியின் ஜப்பான் படத்தின் இசை மற்றும் ட்ரெயிலர் வெளியீட்டில் பங்கேற்ற சூர்யா, கார்த்தி மற்றும் ரசிகர்களுடன் இணைந்து செல்ஃபி எடுத்து மகிழ்ந்தார்.
பாதையை மாற்றிய ரோலக்ஸ் கேரக்டர்: தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய சூர்யா, நீண்ட நாட்களாக கங்குவா படத்திற்காக காத்திருக்கும் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார். மேலும் கங்குவா மிகச்சிறப்பாக வந்துள்ளதாகவும் மகிழ்ச்சி தெரிவித்தார். விக்ரம் படத்தில் லோகேஷ் கனகராஜ் தனக்கு ரோலக்ஸ் கேரக்டரை கொடுத்ததாகவும் அந்த கேரக்டர் தன்னுடைய பாதையையே மாற்றியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். டில்லி திரும்பி வரவுள்ள நிலையில் ரோலக்சும் திரும்ப வருவார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சூர்யாவிற்கு சிங்கம்.. கார்த்திக்கு ஜப்பான்: தனக்கு சிங்கம் படம் 25வது படமாக அமைந்த நிலையில், கார்த்திக்கு ஜப்பான் படம் 25வது படமாக அமைந்தது குறித்தும் சூர்யா உற்சாகம் தெரிவித்துள்ளார். கங்குவா படத்தின் சூட்டிங் ஏறக்குறைய நிறைவடைந்துள்ள நிலையில், இன்னும் சில தினங்களில் தன்னுடைய புறநானூறு படத்தில் இணையவுள்ளார் சூர்யா. சூரரைப் போற்று படத்தின் அதிரிபுதிரி வெற்றியை தொடர்ந்து புறநானூறு படத்தில் சூர்யா -சுதா கொங்கரா கூட்டணி மீண்டும் இணையவுள்ளது எதிர்பார்ப்புகளை அதிகரித்துள்ளது.


Click it and Unblock the Notifications











