Siddique - சித்திக் மரணம்.. இரங்கல் சொன்ன சூர்யா.. மறந்துபோன விஜய்?.. ரசிகர்கள் கேள்வி

சென்னை: Director Siddique (இயக்குநர் சித்திக்) இயக்குநர் சித்திக் உயிரிழப்புக்கு நடிகர் சூர்யா தனது இரங்கலை தெரிவித்திருக்கிறார்.

மலையாள திரையுலகில் பிரபலமான இயக்குநராக வலம் வந்தவ இயக்குநர் சித்திக். பாப்பன் ப்ரியபேட்டா பாப்பன் என்ற படத்தின் மூலம் கதையாசிரியராக அறிமுகமானார். அதனையடுத்து நாடோடிக்கட்டு என்ற படத்திலும் கதையாசிரியாக அறிமுகமானார். அவரது ஆரம்பத்தில் எழுதிய இரண்டு கதைகளுமே நல்ல வரவேற்பை பெற்றதால் இவரே இயக்குநராக களமிறங்கலாம் என்ற கருத்து எழுந்தது.

Actor Suriya has expressed his condolences on the death of director Siddique

இயக்குநராக அறிமுகம்: அதனையடுத்து 1989ஆம் ஆண்டு வெளியான ராம்ஜி ராவ் ஸ்பீக்கிங் என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். கதையாசிரியராக எப்படி தனது முத்திரையை பதித்தாரோ அதேபோல் இயக்குநராகவும் தன்னுடைய முதல் படத்திலேயே முத்திரை பதித்தார். அதனையடுத்து மலையாள திரையுலகில் வாண்டட் இயக்குநராக மாறினார். தொடர்ந்து படங்களை இயக்கிய அவர் 1999ஆம் ஆண்டு ப்ரெண்ட்ஸ் படத்தை இயக்கினார்.

தமிழில் சித்திக்: மலையாள ப்ரெண்ட்ஸ் படத்தின் வெற்றிக்கு பிறகு கோலிவுட்டில் எண்ட்ரி கொடுத்தார். விஜய் , சூர்யா, வடிவேலு, ரமேஷ் கண்ணா உள்ளிட்டோரை வைத்த் அதே பெயரில் தமிழிலும் ப்ரெண்ட்ஸ் படத்தை இயக்கினார். படம் அதிரிபுதிரி ஹிட்டடித்தது. விஜய் மற்றும் சூர்யாவின் கரியரில் முக்கிய படமாக அது அமைந்திருக்கிறது.

வடிவேலு, சித்திக் காம்போ: அதேபோல் வடிவேலுவின் கரியரிலும் ப்ரெண்ட்ஸ் படம் முக்கியமானது. அவரது சிறந்த பத்து காமெடிகளை எடுத்துக்கொண்டால் கண்டிபாக முதல் மூன்று இடஙக்ளுக்குள் ப்ரெண்ட்ஸ் காமெடி இருக்கும். அவர் கடைசியாக மலையாளத்தில் பிக் பிரதர் என்ற படத்தை மோகன்லாலை வைத்து இயக்கினார். ஆனால் அந்தப் படம் சுமாரான வரவேற்பையே பெற்றது.

உயிரிழ்நத சித்திக்: அவருக்கு நிமோனியா மற்றும் கல்லீரல் பிரச்னை வந்த சூழலில் மாரடைப்பும் ஏற்பட்டது. அதனையடுத்து கொச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று முன் தினம் உயிரிழந்தார். அவரது உயிரிழப்புக்கு திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவிக்கின்றனர்.

சூர்யா இரங்கல்: அந்தவகையில் நடிகர் சூர்யா வெளியிட்டிருக்கும் இரங்கல் செய்தியில், "என் மனதை நினைவுகள் கனமாக்கியுள்ளன. சித்திக்கின் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு. அவருடைய குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு எனது இரங்கல்கள். இந்த துயரமான தருணத்தில் நான் உங்கள் அனைவருடனும் நிற்கிறேன்.

'ப்ரெண்ட்ஸ்' எனக்கு பல்வேறு வழிகளில் முக்கியமான படம். சிறிய காட்சியில் நன்றாக நடித்தாலும் உடனே பாராட்டி ஊக்கமளிக்கும் பண்பு கொண்டவர் சித்திக். படப்பிடிப்பின்போதும், எடிட் செய்யும் போதும் எனது நடிப்பு குறித்த தனது எண்ணங்களை மிகுந்த அன்புடன் பகிர்ந்துகொள்வார். ப்ரெண்ட்ஸ்' படம் எடுக்கும் சமயத்தில் சீனியர் மற்றும் புகழ்பெற்ற இயக்குனராக இருந்த சித்திக் அனைவரையும் சமமாக நடத்துவர்.

Actor Suriya has expressed his condolences on the death of director Siddique

படப்பிடிப்பு தளத்தில் அவர் கோபமடைந்தோ, குரலை உயர்த்தியோ நான் பார்த்ததில்லை. அவருடன் பணிபுரிவது என்றும் எனக்கு விருப்பமான ஒன்று. என்னையும் என் திறமையையும் நம்ப வேண்டும் என்ற தன்னம்பிக்கையை கொடுத்தார். எப்போது சந்தித்தாலும் என்னுடைய குடும்பத்தை பற்றி அக்கறையாக விசாரிப்பார்.

ஒரு நடிகனாக நான் உருவான ஆரம்ப காலக்கட்டத்தில் என் மீது நம்பிக்கை வைத்ததற்கு நன்றி. மிஸ் யூ சார். எங்களுக்கு நீங்கள் அளித்த நினைவுகளும் அன்பும், எங்களை முன்னோக்கி அழைத்து செல்லும்" என குறிப்பிட்டுள்ளார். இந்தச் சூழலில் சித்திக் மறைவுக்கு சூர்யா இரங்கல் தெரிவித்துவிட்டார். ஆனால் விஜய் ஏன் சொல்லவில்லை. வளர்ந்த பிறகு வளர்த்துவிட்டவரை மறந்துவிட்டாரா விஜய் என ரசிகர்களில் ஒரு தரப்பினர் கேள்வி எழுப்பிவருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X