வீட்டில் உள்ள ஜிம்மில் உடற்பயிற்சி செய்தபோது.. நடிகர் சூர்யா காயம்.. பயப்பட ஒண்ணுமில்லையாம்!

By

சென்னை: பிரபல நடிகர் சூர்யா, உடற்பயிற்சி செய்துகொண்டிருந்தபோது காயமடைந்தார்.

Recommended Video

Soorarai Pottru- Mannurunda Lyrical video | Surya | G.V.Prakash | Sudha Kongara

நடிகர் சூர்யா இப்போது 'சூரரைப் போற்று' படத்தில் நடித்துள்ளார். இது ஏர் டெக்கான் விமான நிறுவனரான ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகியுள்ள படம்.

இதில் நெடுமாறன் ராஜாங்கம் என்ற விமானியாக சூர்யா நடித்துள்ளார். அபர்ணா பாலமுரளி, ஹீரோயினாக நடித்துள்ளார்.

மோகன்பாபு

மோகன்பாபு

துரோகி, இறுதிச் சுற்று படங்களை இயக்கிய சுதா கொங்கரா இயக்கியுள்ளார். இதில், ஜாக்கி ஷெராப், கருணாஸ், காளிவெங்கட் உட்பட பலர் நடித்துள்ளனர். தெலுங்கு நடிகர் மோகன்பாபு, பல வருடங்களுக்கு பிறகு தமிழில் இந்தப் படத்தில் நடித்துள்ளார். இதில் அவர் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைத்துள்ளார்.

விமானத்தில் ஷூட்டிங்

விமானத்தில் ஷூட்டிங்

சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம், சிக்யா என்டர்டெயின்மென்ட் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ளது. படத்தின் டீசர், பாடல்கள் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளன. விமானம் தொடர்பான கதை என்பதால், விமானத்தில் சுமார் 15 நாள் ஷூட்டிங் நடந்துள்ளது. இந்தப் படத்தை ஏப்ரல் அல்லது மே மாதம் வெளியிட முடிவு செய்திருந்தனர்.

ஒர்க் அவுட்

ஒர்க் அவுட்

கொரோனா லாக்டவுன் காரணமாக, ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. லாக்டவுன் காரணமாக நடிகர், நடிகைகள் தங்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் இருக்கின்றனர். வீட்டிலேயே ஜிம் வைத்துள்ள நடிகர், நடிகைகள் அதில் தங்கள் பொழுதை கழித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் சூர்யாவும் வீட்டில் இருக்கும் ஜிம்மில் ஒர்க் அவுட் செய்து வருகிறார்.

கையில் காயம்

கையில் காயம்

இந்நிலையில் ஒர்க் அவுட் செய்யும்போது நடிகர் சூர்யா கையில் காயமடைந்தார். இதையடுத்து தனியார் மருத்துவமனைக்குச் சென்ற அவர், சிகிச்சை பெற்றுள்ளார். இதுபற்றி விசாரித்தபோது, ' நடிகர் சூர்யா கடந்த சில நாட்களுக்கு முன் காயமடைந்தார். காயம் ஆறிவிடும் என்று நினைத்தார். குணமாகாததால் மருத்துவமனை சென்றார். பயப்படும்படி ஒன்றும் இல்லை' என்று அவர் தரப்பில் தெரிவித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X