மிரட்டல் கூட்டணியில் சூர்யா.. ஆர்ஜே பாலாஜி டைரக்ஷன்.. ஏஆர் ரஹ்மான் இசை.. கேக்கவே கலக்கலா இருக்கே!

சென்னை: நடிகர் சூர்யாவின் கங்குவா படம் அடுத்த மாதம் 14ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ள நிலையில் அடுத்ததாக கார்த்திக் சுப்புராஜுடன் சூர்யா 44 படத்தில் நடித்து முடித்துள்ளார் சூர்யா. இந்த படத்தின் ஷூட்டிங் அந்தமான் உள்ளிட்ட இடங்களில் மிகவும் பிரம்மாண்டமாக எடுத்து முடிக்கப்பட்டுள்ள நிலையில் சூர்யாவின் அடுத்த படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே காணப்பட்டது.

இந்நிலையில் சூர்யா 45 படம் குறித்த அறிவிப்பை இன்றைய தினம் டிரீம் வாரியர் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது. கங்குவா, சூர்யா 44 படங்களை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் சூர்யா இணைவாரா அல்லது சுதா கொங்கராவுடன் அடுத்த படத்திற்கான பேச்சுவார்த்தைகள் நடக்குமா என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது முற்றிலும் வித்தியாசமான காம்பினேஷனில் சூர்யா, சூர்யா 45 படத்திற்காக இணைந்துள்ளார்.

suriya suriya 45 movie rj balaji

நடிகர் சூர்யா: நடிகர் சூர்யா அடுத்தடுத்து முன்னணி இயக்குனர்களுடன் இணைந்து படங்களை கொடுத்து வரும் நிலையில் கடந்த இரு ஆண்டுகளாக அவரது படம் எதுவும் ரிலீஸ் ஆகவில்லை. இந்த விஷயம் அவரது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தாலும் அடுத்ததாக சூர்யா நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள கங்குவா படம் வெளியாக உள்ளது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. இந்தப் படம் நவம்பர் இந்த மாதம் 10ம் தேதியே ரிலீசுக்கு தயாரான நிலையில், ரஜினிகாந்தின் வேட்டையன் பட ரிலீசும் அன்றைய தினமே அறிவிக்கப்பட்டதால் கங்குவா படத்தின் ரிலீஸ் தள்ளி போனது.

கங்குவா படம்: தற்போது கங்குவா படம் அடுத்தமாதம் 14ம் தேதி சர்வதேச அளவில் பத்திற்கும் மேற்பட்ட மொழிகளில் ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மிகப்பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ள இந்த படம் சூர்யா கேரியரில் மட்டுமில்லாமல் இந்திய அளவிலும் மிகப்பெரிய பட்ஜெட் படமாக அமைந்துள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் சூட்டிங், டப்பிங் வேலைகளை நிறைவு செய்துவிட்டு அடுத்ததாக தன்னுடைய சூர்யா 44 படத்திற்காக கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் இணைந்து அந்த படத்தின் சூட்டிங்கையும் தற்போது நிறைவு செய்துள்ளார் சூர்யா. இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் வேலைகளும் தற்போது விறுவிறுப்பாக நடந்து வரும் சூழலில் அடுத்த ஆண்டு துவக்கத்தில் இந்த படம் ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

ஆர்ஜே பாலாஜியுடன் இணையும் சூர்யா: சூர்யா 44 படம் ரிலீசுக்கு தயாராகிவரும் நிலையில் படத்தின் டைட்டில் உள்ளிட்ட அடுத்தடுத்த அப்டேட்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. இதனிடையே அடுத்ததாக அவர் வெற்றிமாறனுடன் வாடிவாசல் படத்தில் இணைவாரா அல்லது சுதா கொங்கராவுடன் அடுத்தப்படத்திற்கான டிஸ்கஷன் நடக்குமா என்ற கேள்வி ரசிகர்களிடையே காணப்பட்டது. இந்நிலையில் விடுதலை 2 படத்தின் சூட்டிங் இன்னும் முழுமையாக முடியாத நிலையில் வாடிவாசல் படத்தின் சூட்டிங் மேலும் தள்ளி போக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனிடையே அடுத்ததாக ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா தன்னுடைய சூர்யா 45 படத்திற்காக இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சூர்யா 45 பட அறிவிப்பு: இது குறித்து ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் இன்றைய தினம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த படத்தை ஆர்ஜே பாலாஜி இயக்கவுள்ள நிலையில், ஏஆர் ரஹ்மான் இசையமைக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் அறிவிப்பை மிரட்டலான போஸ்டருடன் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அதில் அரிவாள், கத்தி போன்றவற்றில் பட்டையிடப்பட்டுள்ளதாக காணப்படுகிறது. மேலும் குதிரை போன்ற ஒரு உருவமும் இந்த போஸ்டரில் காணப்படுகிறது.

suriya suriya 45 movie rj balaji

மிரட்டலான போஸ்டர்: இதனால் ஆன்மீகமும் ஆக்ஷனும் கலந்த கதைக்களமாக இந்த படம் அமையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் இந்த படத்தின் சூட்டிங் துவங்கப்பட உள்ள நிலையில் இந்த ஆண்டுக்குள் படத்தின் சூட்டிங் நிறைவு செய்யவும் படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகளை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X