இது ரொம்ப நல்லா இருக்கு.. சூர்யா 40 படப்பிடிப்புக்கு வந்த சூர்யா.. வெறித்தனமான போஸ்டர் ரிலீஸ்!
சென்னை: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யாவின் 40வது திரைப்படம் சமீபத்தில் பூஜை போட்டு தொடங்கியது.
Recommended Video
ஆனால், கொரோனா பாதிப்பு காரணமாக நடிகர் சூர்யா படத்தின் பூஜையில் கலந்து கொள்ளவில்லை.
விரைவில் சூர்யா படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது சூர்யா 40 படத்தின் படப்பிடிப்பில் இணைந்துள்ளார் சூர்யா.

ஆஸ்கர் வரை
தொடர் தோல்விக்கு பிறகு இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் ஒடிடி தளத்தில் வெளியான சூரரைப் போற்று திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. கோல்டன் குளோப் மற்றும் ஆஸ்கர் உள்ளிட்ட உயரிய விருதுகளுக்கான போட்டியில் முதல்முறையாக நடிகர் சூர்யாவின் படம் கலந்து கொண்டது. ஆஸ்கர் பரிந்துரை பட்டியலில் இடம்பெறவில்லை என்றாலும் அந்த போட்டிக்கு சென்றதே பெருமையான விஷயமாக பார்க்கப்படுகிறது.

வெற்றிமாறன் படம்
சூரரைப் போற்று படத்தைத் தொடர்ந்து அடுத்தடுத்து ஹிட் இயக்குநர்களின் படங்களில் கமீட் ஆகி உள்ளார் சூர்யா. சூர்யாவின் 40வது படத்தை இயக்குநர் பாண்டிராஜ் இயக்கி வரும் நிலையில், அடுத்ததாக வெற்றிமாறன் உடன் இணைந்து வாடிவாசல் படத்திலும் சூர்யா மிரட்ட உள்ளார்.

கொரோனா பாதிப்பு
நெட்பிளிக்ஸில் விரைவில் வெளியாக உள்ள நவரசா ஆந்தாலஜி மற்றும் அடுத்தடுத்த படங்களில் பிசியாக இருந்த நடிகர் சூர்யாவுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. சில வாரங்கள் வீட்டில் தன்னைத் தானே தனிமைப் படுத்திக் கொண்டு சிகிச்சைப் பெற்று வந்த சூர்யா தற்போது பூரணமாக குணமாகி உள்ளார்.

இது ரொம்ப நல்லா இருக்கு
இந்நிலையில், தற்போது சூர்யா 40 படத்தின் படப்பிடிப்பில் நடிகர் சூர்யா இணைந்துள்ளார். அதனை முன்னிட்டு வெறித்தனமான போஸ்டர் ஒன்றை சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது. அந்த போஸ்டரை தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ள நடிகர் சூர்யா, மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொள்வது ரொம்பவே நல்லா இருக்கு என பதிவிட்டுள்ளார்.

வெறித்தனமான போஸ்டர்
இயக்குநர் பாண்டிராஜ் படம் என்ற உடனே கடைக்குட்டி சிங்கம் போல இருக்கும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு எதிர்பாராத ட்விஸ்ட்டாக கையில் துப்பாக்கி உடன் முகத்தை காட்டாமல் நடிகர் சூர்யாவின் அதிரடியான சூர்யா 40 பட போஸ்டர் வெளியாகி ரசிகர்களை மெர்சல் ஆக்கி உள்ளது.

சூர்யாவுக்கு ஜோடி
சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகவுள்ள டோலிவுட் ஹீரோயின் பிரியங்கா மோகன் தான் சூர்யா 40 படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாகி உள்ளார். சமீபத்தில் வெளியன டாக்டர் படத்தின் சோ பேபி பாடலில் பிரியங்கா மோகனின் காட்சிகளை பார்த்து அசந்து போன ரசிகர்கள் சூர்யாவுக்கு ஜோடியாக எப்படி கலக்கப் போகிறார் என்பதை காணவும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications