சிறுத்தை சிவா படத்தில் இணையும் சூர்யா... இன்றைய டாப் 5 பீட்ஸில்!
சென்னை: நடிகர் சூர்யா அடுத்தப்படியாக சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Recommended Video
தமிழ் சினிமா மட்டுமின்றி பாலிவுட் டோலிவுட் என பல்வேறு சினிமாக்கள் குறித்த சுவாரசியமான தகவல்கள் மற்றம் அப்டேட்டுகளை வீடியோவாக வழங்கி வருகிறார் பிகே.
மேலும் ஹாலிவுட் சினிமா தொடர்பான தகவல்களையும் வீடியோவாக வழங்கி வருகிறார் பிகே. அந்த வகையில் இன்றைய டாப் 5 பீட்ஸில் பல்வேறு சுவாரசிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன.

அந்த வகையில் இன்றைய டாப் 5 பீட்ஸில், வலிமை படத்தின் ஓடிடி உரிமை குறித்த தகவலை கூறியுள்ளார் பிகே. வலிமை படத்தின் கிளிம்ஸ் அண்மையில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் வலிமை படத்தின் ஓடிடி தளத்தின் ரிலீஸ் உரிமையை ஜீ 5 ஓடிடி தளம் பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து இதன் தொலைக்காட்சி உரிமையையும் ஜீ தமிழ் தொலைக்காட்சி பெறும் என தெரிகிறது.
இதேபோல் சிறுத்தை சிவா அடுத்ததாக நடிகர் சூர்யாவை வைத்து இயக்கவுள்ள தகவலையும் கூறியுள்ளார் பிகே. நடிகர் சூர்யா தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்து வருகிறார். அந்தப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த பிறகு சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிக்கவுள்ளார் என்றும் இந்தப் படம் அடுத்த ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என்றும் இந்தப் படம் கிராம கதையாக இல்லாமல் சிட்டி கதையாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார் பிகே.
மேலும் ஜிவி பிரகாஷ் மீண்டும் தெலுங்கு சினிமாவில் இசையமைக்கவுள்ள தகவலையும் கூறியுள்ளார் பிகே. கடைசியாக தெலுங்கில் ஜண்டா பாய் ராஜு படத்திற்கு இசையமைத்திருந்தார் ஜிவி பிரகாஷ். அதனை தொடர்ந்து தற்போது மீண்டும் தெலுங்கு படத்திற்கு இசையமைக்கிறார் ஜிவி பிரகாஷ். ரவி தேஜாவின் படத்திற்கு இசையமைக்கிறார் ஜிவி பிரகாஷ்.
மேலும் டிரெண்டிங்கில் வலிமை படத்தை டாக்டர் ட்ரெயிலர் பீட் செய்துள்ளதாகவும் கூறியுள்ளார் பிகே. டாக்டர் படத்தின் ட்ரெயிலர் பல மில்லியன் வியூஸ்களை குவித்துள்ளதாகவும் கூறியுள்ளார் பிகே. இதேபோல் மறைந்த மூத்த நடிகர் இந்தியாவின் சார்ளி சாப்ளின் என அழைக்கப்படும் நடிகர் நாகேஷின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் குறித்த தகவலையும் கூறியுள்ளார் பிகே.


Click it and Unblock the Notifications