Kanguva Audio Launch: பிரம்மாண்டமாக நடந்த சூர்யாவின் கங்குவா இசை வெளியீட்டு விழா.. வருத்தப்பட்ட கார்த்தி!
சென்னை: கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக படப்பிடிப்பு மட்டும் நடத்தப்பட்ட படம் கங்குவா. சூர்யா கதாநாயகனாக நடித்த படங்களில் இதுவரை அதிக பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட படம் கங்குவா. சிவா இயக்கத்தில், சூர்யாவுடன் பாபி தயாள், தீஷா பதானி, கருணாஸ், போஸ் வெங்கட், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்து வெளியாக தயாராக உள்ள படம் கங்குவா. இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைத்துள்ளார். படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று அதாவது அக்டோபட் 26ஆம் தேதி மிகவும் பிரமாண்டமாக நடைபெற்று வருகின்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட நடிகரும் சூர்யாவின் தம்பியுமான கார்த்தி பேசியது பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது.
நடிகர் சூர்யா நடிப்பில் ஸ்டூடியோ க்ரீன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் கங்குவா. இப்படம் கடந்த 10ஆம் தேதிதியே ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டது. ஆனால் அந்தத் தேதியில் சூப்பர் ஸ்டாரின் வேட்டையன் படம் ரிலீஸ் ஆவதாக அறிவிக்கப்பட்டதால், கங்குவா படத்தின் ரிலீஸ் தேதியை மரியாதை நிமித்தமாக தள்ளி வைத்தனர்.

இந்நிலையில் படம் வெளியாக இன்னும் இரண்டு வார காலத்திற்கும் மேல் நாட்கள் இருக்கின்றது. அப்படி இருந்தும் படக்குழு படத்தின் புரோமோசனை வெகு விமர்சையாக தொடங்கி நடத்தி வருகின்றது. இந்த வாரத்தின் தொடக்கத்தில் இருந்து தொடங்கிய புரோமோசன், தலைநகர் டெல்லியில் இருந்து தொடங்கியது. அதன் பின்னர், மும்பை, ஹைதராபாத், பெங்களூரு மற்றும் சென்னை என படு வேகமாக புரோமோசன் பணிகளில் படக்குழு ஈடுபட்டு வருகின்றது.
இசை வெளியீட்டு விழா: படத்தில் இருந்து ஏற்கனவே இரண்டு பாடலகள் ரிலீஸ் ஆன நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று பிரமாண்டமாக, தலைநகர் சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகின்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட நடிகர் சூர்யா படம் குறித்தும் சூர்யா குறித்தும் பல சுவாரஸ்யமான விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார்.
தெரியல: அதாவது அவர் பேசும்போது, " எனது அண்ணன் சூர்யா சினிமாவில் நடிக்கச் சென்றபோது நடிக்கத் தெரியலனு சொன்னாங்க, ஆடத்தெரியலனு சொன்னங்க, ஃபைட் பண்ணத் தெரியலனு சொன்னாங்க, நல்ல உடல் இல்லைனு சொன்னாங்க. எனக்குத் தெரியும் காலையில 3 மணி நேரம் ஃபைட் கிளாஸ் போனாங்க, மாலையில் 3 மணி நேரம் டேன்ஸ் கிளாஸ் போனாரு. இப்போ டேன்ஸ் பிச்சு உதறுராரு. ஆயுத எழுத்தில் நான் வேலை செய்தபோது அதில் சண்டைக் காட்சிகளில் ஃபைட்டர் மாதிரி சண்டைக் கட்டினார்.

நெகடிவ்: இன்றைக்கு அனைத்து ஜிம்களிலும் அண்ணனின் படம் இருக்கு. எதுக்கு இன்ஸ்பயர் செய்யறோம்னு இருக்குல. ஹெல்த்துக்கு இன்ஸ்பயர் செய்யறாரு. எல்லா பசங்களும் ஹெல்த்த சீரியஸா எடுத்துக்க அண்ணன் காரணமா இருக்காரு. எதெல்லாம் நெகடிவ்னு சொன்னங்களோ, அதை எல்லாத்தையும் தன் உழைப்பால் மாற்றிக்காட்டியவர். உழைத்தால் முன்னேறலாம் நினைத்த இடத்தை அடையலாம் என்பதற்கு அண்ணனைத் தவிர, சிறந்த எடுத்துக் காட்டு யாரும் இல்லை.
வருத்தம்: படத்தின் ஆர்ட் டைரக்டர் மிலன் சார், நீங்க இங்க இருந்து இருக்கனும் சார். நான் உதவி இயக்குநராக இருந்தபோது, அவர் உதவி ஆர்ட் டைரக்டர். அவரது உழைப்பு எனக்கு தெரியும். கங்குவா படத்திற்காக அவர் உருவாக்கியுள்ள உலகம் காலத்திற்கும் பேசப்படும். அவர் இங்கு இல்லை என்பது எனக்கு வருத்தமாக உள்ளது என பேசினார். ஆர்ட் டைரக்டர் மிலன், விடாமுயற்சி படத்திற்காக அஜர்பைஜான் சென்றபோது, அங்கு மாரடைப்பால் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் நடிகர் கருணாஸ் பேசும்போதும் ஆர்ட் டைரக்டர் மிலனுக்காக அனைவரையும் மௌன அஞ்சலி செலுத்த வேண்டுகோள் வைத்தார். மேலும் படத்தில் கார்த்தி நடித்துள்ளாரா என்ற கேள்விக்கு, கார்த்தி இந்தக் கேள்வியை இயக்குநர் சிவாவைத்தான் கேட்கவேண்டும் என பதில் அளித்தார்.


Click it and Unblock the Notifications











