ஹாலிவுட் தரத்தில் சி.ஜி பணிகள்.. தீபாவளியை குறிவைக்கும் சூர்யாவின் கங்குவா.. புது அப்டேட் இதோ!

சென்னை: தமிழ் சினிமாவின் மூத்த நடிகர்களில் ஒருவராக இருக்கக்கூடிய சிவக்குமாரின் முதல் மகன் சூர்யா. இவர் சினிமாவிற்காக தனது பெயரை சரவணன் என்பதில் இருந்து சூர்யா என மாற்றி வைத்துக் கொண்டார். இவரது ஆரம்பகால சினிமா வாழ்க்கையில் இன்றைய பல முன்னணி நடிகர்கள் சந்தித்த அவமானங்களையும் விமர்சனங்களையும் எதிர்கொண்டார். ஆனால் இன்றைக்கு இவரை மையப்படுத்தி தமிழ் சினிமாவில் கோடிக்கணக்கில் வணிகம் நடைபெறும் அளவிற்கு உச்ச நட்சத்திரமாக வளம் வருகின்றார்.

சூர்யா தமிழ் சினிமாவிற்குள் நுழையும்போது சிவக்குமாரின் மகன் என அடையாளப்படுத்தப்பட்டார். இன்றைக்கு சூர்யாவின் அப்பா சிவக்குமார் எனக் கூறும் அளவிற்கு தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத கதாநாயகனாக மாறியுள்ளார். படங்களில் தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களை மிகச் சிறிய சிறப்பாக வெளிப்படுத்த வேண்டும் என்பதற்காக சூர்யா எடுத்துக் கொள்ளும் மெனக்கெடல்கள் அவருடன் பணியாற்றிய பல இயக்குநர்கள் பாராட்டியுள்ளனர். உதாரணமாக நந்தா, பிதாமகன், பேரழகன், மாயாவி, ஏழாம் அறிவு, வாரணம் ஆயிரம், சூரரைப் போற்று, ‌ ஜெய் பீம் போன்ற பல படங்களை குறிப்பிடலாம். இப்படி தனது நடிப்பால் பெரும் பாராட்டுகளை குறித்து வந்தது மட்டுமல்லாமல் விருதுகளையும் பெற்று வருகிறார்.

Suriya Kanguva Suriya 44 Director Siva

கங்குவா: சூர்யாவின் நடிப்பில் தற்போது உருவாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் கங்குவா. மன்னர் காலக் கதையைக் கொண்டு எடுக்கப்பட்டு வரும் இந்த படம்தான் சூர்யாவின் நடிப்பில் அதிக பொருட்செலவில் உருவாக்கப்பட்டு வரும் படம். இந்த படத்தினை இயக்குநர் சிறுத்தை சிவா இயக்குகின்றார்.

சி.ஜி பணிகள்: இந்த படம் கடந்த பொங்கலுக்கே ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் படப்பிடிப்புத் தளத்தில் சூர்யாவுக்கு லேசான காயம் ஏற்பட்டதால், படப்பிடிப்பை திட்டமிட்டபடி முடிக்க முடியாமல் போனது. இதனால் படம் எப்போது ரிலீஸ் ஆகும் என்ற கேள்வி அனைவருக்கும் எழுந்தது. இந்நிலையில் படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிந்துவிட்டது எனவும் தற்போது கம்யூட்டர் க்ராஃபிக்ஸ் வேலைகள்தான் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சி.ஜி பணிகளைப் பார்த்த சிலர், படத்தின் சி.ஜி வேலைகள் ஹாலிவுட் படங்களுக்கு நிகராக உருவாக்கப்பட்டு வருகின்றது. எனவே படம் எப்போது ரிலீஸ் செய்யப்பட்டாலும் செலவு செய்யப்பட்ட பணத்தை விடவும் பல மடங்கு அள்ளும் என கூறியுள்ளனர்.

Suriya Kanguva Suriya 44 Director Siva

மேலும் படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகவுள்ளதாகவும் கூறப்படுகின்றது. ஏற்கனவே பொங்கல் ரிலீஸில் அஜித் மற்றும் விஜயுடன் மோத நினைத்த சூர்யா இப்போது அஜித்தின் விடாமுயற்சியுடன் மோதவுள்ளார் எனவும் பேச்சுகள் எழுகின்றது. அதேபோல் தி கோட் படம் செப்டம்பரில் ரிலீஸ் ஆவது ஒருவேளை தள்ளிப்போனால் வரும் ஆண்டு தீபாவளியில் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய தீபாவளியாக அமையும் எனவும் கூறப்படுகின்றது.

கங்குவா படத்தின் அறிவிப்பு வெளியானபோதே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. படத்தில் சூர்யாவுடன் தீஷா பதானி, ஆனந்த் ராஜ், கோவை சரளா, ரெடின் கிங்ஸ்லி மற்றும் யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாந்த் இசை அமைக்கின்றார். படக்குழு தரப்பில் வெளியான டீசரில் சூர்யாவுக்கு போட்டுவிடப்பட்டிருந்த மேக்-அப் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X