Suriya: கிரிக்கெட் கடவுளை சந்தித்த சூர்யா.. ஆர்வமாக பேசிக் கொண்ட காட்சி.. ரசிகர்கள் உற்சாகம்!
மும்பை: நடிகர் சூர்யா தற்போது மும்பையில் வசித்துவந்தாலும் அவ்வப்போது சென்னை வந்து தன்னுடைய படங்களின் சூட்டிங்கில் பங்கேற்று வருகிறார். தன்னுடைய மனைவி தன்னுடைய சொந்தங்களை விட்டுவிட்டு 19 ஆண்டுகளாக சென்னையில் இருந்ததாகவும் அவருக்காக தான் தற்போது மும்பையில் உள்ளதாகவும் முன்னதாக அவர் கூறியிருந்தார்.
மும்பையில் நடக்கும் திரைத்துறை உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளில் சூர்யா மற்றும் ஜோதிகா தனித்தனியாகவோ அல்லது கூட்டாகவோ பங்கேற்பதை பார்க்க முடிகிறது. அந்தவகையில் நேற்றைய தினம் மும்பையில் நடைபெற்ற ஐ.எஸ்.பி.எல் லீக் கிரிக்கெட் தொடரின் துவக்க விழாவில் சூர்யா பார்வையாளராக பங்கேற்றார்.

நடிகர் சூர்யா: நடிகர் சூர்யா அடுத்தடுத்த படங்களில் தன்னை இணைத்து வருகிறார். கடந்த ஆண்டில் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையில் சூர்யா நடிப்பில் வெளியான கங்குவா படம் அவருக்கு சிறப்பாக கைக்கொடுக்கவில்லை. இந்நிலையில் அடுத்ததாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரெட்ரோ படத்தில் நடித்து முடித்துள்ளார் சூர்யா. இந்தப் படம் விரைவில் ரிலீசாகவுள்ள நிலையில் அடுத்ததாக ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா 45 படத்திலும் இணைந்துள்ளார். இந்தப் படத்தின் முதல்கட்ட சூட்டிங் கோவையில் நடந்து முடிந்துள்ளது. படத்தின் வில்லனாக ஆர்ஜே பாலாஜியே இணைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மும்பையில் வசிக்கும் சூர்யா: இந்தப் படத்தின் இரண்டாவது கட்ட சூட்டிங் இன்னும் சில தினங்களில் செனைனயில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான செட்கள் அமைக்கும் பணிகள் தற்போது நடந்து முடிந்துள்ளது. தற்போது தன்னுடைய குடும்பத்தினருடன் மும்பையில் வசித்து வருகிறார் சூர்யா. தனக்காகவும் குடும்பத்திற்காகவும் தன்னுடைய கேரியருக்காகவும் பல ஆண்டுகள் மும்பையில் இருந்த தன்னுடைய சொந்தங்களை பிரிந்து ஜோதிகா வாழ்ந்ததை சுட்டிக் காட்டிய சூர்யா, தற்போது தான் அவருக்காக மும்பையில் வசித்து வருவதாக முன்னதாக பேட்டியொன்றில் தெரிவித்திருந்தார். தன்னுடைய குழந்தைகளின் படிப்பும் மும்பையில் வசிக்க காரணம் என்றும் கூறியிருந்தார்.
சச்சின் -சூர்யா சந்திப்பு: இதனிடையே மும்பையில் நடக்கும் முக்கியமான நிகழ்வுகளில் நடிகர் சூர்யாவை அடுத்தடுத்து பார்க்க முடிந்தது. இதனிடையே தற்போது மும்பையில் துவங்கியுள்ள ஐஎஸ்பிஎல் லீக் கிரிக்கெட் தொடரின் தொடக்க விழாவில் நடிகர் சூர்யா பார்வையாளராக பங்கேற்றார். இதையொட்டிய வீடியோக்கள் சமூக வலைதளங்களில் அதிகமான கவனத்தை பெற்று வருகின்றன. இதனிடையே கிரிக்கெட்டின் கடவுளாக கொண்டாடப்படும் சச்சின் டெண்டுல்கரை நடிகர் சூர்யா இந்த நிகழ்வின்போது சந்தித்துள்ளார்.
ஆர்வமுடன் பேசிய சூர்யா & சச்சின்: சச்சின் டெண்டுல்கரும் இந்த நிகழ்வில் பங்கேற்ற நிலையில், அவரை சந்தித்த சூர்யா, அவருடன் இணைந்து மிகவும் ஆர்வமாக பேசியதை பார்க்க முடிந்தது. இருவரும் சில நிமிடங்கள் பேசிய நிலையில், மற்றொரு நண்பரை பார்த்த சூர்யா, சச்சினிடம் சொல்லிக் கொண்டு அங்கிருந்து சென்றதையும் இந்த வீடியோ காட்சிப் படுத்தியுள்ளது. ஐஎஸ்பிஎல் என்று அழைக்கப்படும் இந்தியன் ஸ்ட்ரீட் பிரீமியர் லீக் போட்டியின் 2வது சீசன் நேற்றைய தினம் மும்பையில் கோலாகலமாக துவங்கியுள்ளது.நேற்றைய தினம் நடந்த முதல் போட்டியில் மும்பை மற்றும் நடப்பு சாம்பியனான கொல்கத்தா அணிகள் மோதின. இதில் மும்பை அணி கொல்கத்தா அணியை வீழ்த்தியது.


Click it and Unblock the Notifications











