Suriya on Karthi: கார்த்தியை பார்த்து பொறாமையாக இருக்கிறது.. வெளிப்படுத்திய சூர்யா!

சென்னை: நடிகர் கார்த்தியின் 25வது படமாக ஜப்பான் படம் உருவாகியுள்ளது. இந்தப் படம் நாளைய தினம் ரிலீசாகவுள்ளது.

ராஜூ முருகன் இயக்கியுள்ள இந்தப் படத்தின் ப்ரமோஷன்கள் கடந்த சில வாரங்களாக களைகட்டின.

படத்தின் இசை வெளியீடு, பேட்டிகள் போன்றவற்றில் நடிகர் கார்த்தி உள்ளிட்ட படக்குழுவினர் சிறப்பாக ஈடுபட்டனர்.

Actor Suriya open talk about his brother actor Karthi makes fans happy

நடிகர் கார்த்தி: நடிகர் கார்த்தி உதவி இயக்குநராகத்தான் தன்னுடைய சினிமா பயணத்தை துவங்கினார். தொடர்ந்து தன்னுடைய அண்ணன் சூர்யாவை போலவே அவரும் நடிகராக மாறிவிட்டார். தற்போது சினிமாவில் 20 ஆண்டுகளை கடந்துள்ள கார்த்தி 25 படங்களில் நடித்து முடித்துள்ளார். அவரது 25வது படமாக தற்போது ஜப்பான் படம் ராஜூ முருகன் இயக்கத்தில் உருவாகியுள்ளது. நாளைய தினம் ரிலீசாகவுள்ள இந்தப்படத்தின் பிரமோஷன்களில் கடந்த சில தினங்களாக படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

ஜப்பான் பட ப்ரமோஷன்கள்: இந்தப் படத்தின் இசை மற்றும் ட்ரெயிலர் வெளியீடு சமீபத்தில் நடைபெற்ற நிலையில் அதில் நடிகர் சூர்யா, தமன்னா, லோகேஷ் கனகராஜ், பா ரஞ்சித் உள்ளிட்டவர்கள் பங்கேற்று சிறப்பித்தனர். படக்குழுவினரும் பங்கேற்று ரசிகர்களின் கவனத்தை கவர்ந்தனர். தொடர்ந்து கார்த்தி தன்னுடைய திரையுலக பயணம் குறித்த அடுத்தடுத்த பேட்டிகளை கொடுத்து வருகிறார். துவக்கத்தில் இருந்தே தான் ஒவ்வொரு படத்தையும் மிகவும் கவனத்துடன் தேர்ந்தெடுத்ததாக கார்த்தி தெரிவித்துள்ளார்.

கார்த்தி உற்சாகம்: எப்போதும் தன்னுடைய படங்கள் தீபாவளி ரிலீசாக வெளியாவது தனக்கு ஸ்பெஷலாகவே இருந்து வருவதாக கூறியுள்ள கார்த்தி, அந்தவகையில் இந்த ஆண்டு ஜப்பான் படம் ரிலீசாவது குறித்தும் உற்சாகம் தெரிவித்துள்ளார். மேலும் ராஜூ முருகனுடன் பணியாற்றியது புது அனுபவமாக இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ள கார்த்தி, அவரது எழுத்து குறித்தும் பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும் ஜிவி பிரகாஷ் இசை இந்தப் படத்திற்கு மிகப்பெரிய பலம் என்றும் கூறியுள்ளார்.

Actor Suriya open talk about his brother actor Karthi makes fans happy

சவாலான ஜப்பான் படம்: இதுவரை ஒரு படம் முழுவதும் கார்த்தியே தெரியாமல் நடித்திருக்கிறேன் என்றால் அது ஜப்பான் படம் தான் என்றும் முன்னதாக காஷ்மோராவின் ப்ளாஷ்பேக் காட்சிகளில் இதுபோல கார்த்தியே தெரியாமல் நடித்தாகவும் கூறியுள்ளார். படம் முழுவதும் கார்த்தியே தெரியாமல் நடிப்பது மிகப்பெரிய சவாலாக இருந்ததாகவும் தன்னுடைய அந்த வாய்ஸ் அனைத்து தரப்பினரையும் கவர்ந்துள்ளதாகவும் கார்த்தி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

கார்த்தியை பார்த்து சூர்யா பொறாமை: முன்னதாக ஜப்பான் படத்தின் இசை வெளியீட்டில் பங்கேற்ற நடிகர் சூர்யா, கார்த்தியை பார்த்தால் தனக்கு மிகவும் பொறாமையாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். கார்த்தி நடிக்க வந்த பின்பு, தன்னை சந்திக்கும் சிலர் உங்கள் ரசிகன் என்பதை காட்டிலும் உங்கள் தம்பி கார்த்தியின் ரசிகன் என்று கூறும் போது இதை தான் உணர்ந்ததாகவும் தெரிவித்துள்ளார். பொதுவெளிகளில் தான் இந்த அனுபவத்தை அதிகமான நேரங்களில் சந்தித்துள்ளதாகவும் சூர்யா குறிபிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X