Actor Suriya: இப்ப தெரியுதா.. சூர்யாவிடம் கேட்ட அஜித்.. அட இப்படி ஒரு விஷயம் இருக்கா?

சென்னை: நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ளது கங்குவா படம். இந்தப் படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் சிவா. இவரது இயக்கத்தில் பிரம்மாண்டமாக வரலாற்று பின்னணியில் உருவாகியுள்ளது கங்குவா. இந்தப் படம் அடுத்த மாதம் 14ம் தேதி சர்வதேச அளவில் ரிலீசாகவுள்ள நிலையில், படத்தின் பிரமோஷன்களில் அடுத்தடுத்து படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

கங்குவா பட பிரமோஷன்கள் அடுத்தடுத்து சென்னை, மும்பை, டெல்லியில் நடத்தப்பட்டுள்ளது. மும்பை மற்றும் டெல்லியில் நடிகர் சூர்யா உள்ளிட்ட படக்குழுவினர் ரசிகர்களை நேரில் சந்தித்து பேசியுள்ளனர். இந்த இடங்களில் சூர்யாவிற்கு அதிகமான வரவேற்பு காணப்பட்டது. இதனிடையே தனியாவும் பல பேட்டிகளை கொடுத்துவருகிறார் சூர்யா.

suriya kanguva movie ajithkumar

கங்குவா படம்: நடிகர் சூர்யா, திஷா பதானி, பாபி தியோல், ரெடின் கிங்ஸ்லி, யோகி பாபு உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள கங்குவா படம் வரும் நவம்பர் 14ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. இந்தப் படத்தின் சூட்டிங் கோவா, கொடைக்கானலின் அடர்ந்த காட்டுப் பகுதிகள், பாங்காக் உள்ளிட்ட வெளிநாடுகளில் நடத்தப்பட்ட நிலையில் படத்தின் சூட்டிங் தொடர்ந்து 170 நாட்கள் நடத்தப்பட்டதாகவும் பல கரடுமுரடான பயணங்களை இந்தப் படம் ஏற்படுத்திக் கொடுத்ததாகவும் நடிகர் சூர்யா தனது பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார். எதற்கும் துணிந்தவன் படத்தை தொடர்ந்து கடந்த இரு ஆண்டுகளாக அவரது படங்கள் ரிலீசாகாத நிலையில் மிகவும் டெடிகேஷனுடன் கங்குவா படத்தில் சூர்யா நடித்து முடித்துள்ளார்.

இருவேறு கெட்டப்புகளில் சூர்யா: இந்தப் படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள நிலையில், அடுத்தடுத்து இரு பாடல்கள் லிரிக் வீடியோவாக வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. நேற்றைய தினம் இந்தப் படத்தின் கொண்டாட்ட பாடல் வெளியாகியுள்ளது. இதில் கோவா கடற்கரையில் சூர்யாவும் திஷா பதானியும் ஆட்டம் போட்டதை பார்க்க முடிந்தது. இந்தப் படத்தில் அடுத்தடுத்து இருவேறு கெட்டப்புகளில் சூர்யா நடித்துள்ளார். வரலாற்று பின்னணியில் படம் உருவாகியுள்ள நிலையில் இந்த காட்சிகள் படத்தில் மொத்தமாக 2 மணிநேரங்கள் அமைந்துள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். மேலும் நடப்பு சூழலில் இருக்கும் சூர்யாவின் காட்சிகள் அரை மணிநேரம் மட்டுமே படத்தில் இடம்பெற்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

கங்குவா பட பிரமோஷன்கள்: படத்தின் ரிலீஸ் அடுத்தமாதம் 14ம் தேதி திட்டமிடப்பட்டுள்ள நிலையில், இந்தப் படத்திற்கான பிரமோஷன்களை அடுத்தடுத்து சென்னை, மும்பை மற்றும் டெல்லியில் படக்குழுவினர் மேற்கொண்டனர். படத்தின் இசை வெளியீடு வரும் 26ம் தேதி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக திட்டமிடப்பட்டுள்ளது. இதில் முன்னணி நடிகர்கள் பங்கேற்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது. அது குறித்து விரைவில் தெரியவரும். ஸ்டூடியோ கிரீன் சார்பில் இந்தப் படத்தை ஞானவேல் ராஜா தயாரித்துள்ள நிலையில், அவரும் அடுத்தடுத்த பிரமோஷன்களில் பங்கேற்று வருகிறார். சூர்யாவும் அடுத்தடுத்து பேட்டிகளை கொடுத்து வருகிறார்.

சிவாவை பாராட்டிய அஜித்குமார்: சூர்யா தற்போது கொடுத்துள்ள பேட்டியென்றில், தான் சமீபத்தில் நடிகர் அஜித்தை சந்தித்ததாகவும், அவர் தன்னிடம் இப்ப தெரியுதா நான் ஏன் சிவாவை விடலைன்னு கேட்டதாகவும் சூர்யா பாராட்டு தெரிவித்துள்ளார். நடிகர் அஜித்துடன் மிகச்சிறப்பான படங்களை சிவா கொடுத்துள்ளதாகவும் சூர்யா பாராட்டியுள்ளார். அவருக்கு தியேட்டர் மூவ்மெண்ட்கள் சிறப்பாக வரும் என்றும் அவரை பல திரைத்துறை பிரபலங்களும் தொடர்ந்து பாராட்டு வருவதாகவும் சூர்யா தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X