Suriya: நாங்க ரெண்டு பேரும் காதலை சொல்லிக்கவே இல்லை.. ஜோவுடனான காதல் கவுன்டவுனை பகிர்ந்த சூர்யா!

சென்னை: நடிகர் சூர்யாவின் கங்குவா படம் வரும் நவம்பர் 14ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. மிகவும் பிரம்மாண்டமாக மிகப்பெரிய பட்ஜெட்டில் இந்த படம் உருவாகியுள்ள நிலையில் படத்தை ஸ்டுடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். இயக்குநர் சிவா இயக்கத்தில் வரலாற்று பின்னணியில் இந்த படத்தின் கதைக்களம் உருவாக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கமர்சியல் ஹிட் படங்களை கொடுத்திருந்த இயக்குனர் சிவா இந்த படம் மூலம் தன்னால் மாறுபட்ட கதைக்களத்திலும் பயணிக்க முடியும் என்பதை நிரூபித்துள்ளார். இந்த படத்தின் ரிலீஸுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் நடிகர் சூர்யா உள்ளிட்ட படக் குழுவினர் அடுத்தடுத்து மும்பை, டெல்லி, ஹைதராபாத், பெங்களூர் என பறந்து பறந்து பிரமோஷன்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

suriya kanguva movie jyotika

நடிகர் சூர்யா: நடிகர் சூர்யாவின் கங்குவா படம் இன்னும் சில தினங்களில் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வரும் சூர்யா, கங்குவா படத்தின் சூட்டிங்கை நிறைவு செய்துவிட்டு அடுத்ததாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனது சூர்யா 44 படத்தையும் நடித்து முடித்துள்ளார். இந்த படங்களை தொடர்ந்து அடுத்ததாக ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது சூர்யா 45 படத்திலும் கமிட்டாகியுள்ளார். இந்த படம் ஆக்ஷன் மற்றும் ரொமாண்டிக் ஜானரில் உருவாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மிரட்டலாக வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.

கங்குவா படம்: இந்நிலையில் தற்போது அவர் கங்குவா படத்தின் ப்ரோமோஷன்களுக்காக தனது படங்களின் சூட்டிங்கில் இருந்து சற்று இடைவெளி எடுத்துள்ளார். அடுத்தடுத்து மும்பை, ஹைதராபாத், டெல்லி, பெங்களூர், சென்னை உள்ளிட்ட இடங்களில் அவர் ப்ரோமோஷன்களில் ஈடுபட்டு வருகிறார். ஒவ்வொரு இடத்திலும் ரசிகர்களையும் செய்தியாளர்களையும் அடுத்தடுத்து சந்தித்து படம் குறித்தும், தன்னுடைய தனிப்பட்ட விஷயங்கள் குறித்தும், பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகிறார். இது மட்டும் இல்லாமல் தனிப்பட்ட வகையில் யூடியூப் சேனல்களுக்கும் சூர்யா, இயக்குனர் சிவா, தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா உள்ளிட்டவர்கள் அடுத்தடுத்த பேட்டிகளை கொடுத்து வருகின்றனர்.

suriya kanguva movie jyotika

ஜோதிகா உடனான காதல்: இந்நிலையில் தன்னுடைய மனைவி ஜோதிகா உடனான காதல்கதை குறித்த கேள்விக்கு பதில் அளித்துள்ள நடிகர் சூர்யா, தன்னுடைய மனைவி மும்பையின் பாந்த்ராவை சேர்ந்தவர் என்றும் 18 வயதிற்கு முன்னதாகவே படங்களில் நடிப்பதற்காக சென்னை வந்ததாகவும் முதல் படத்திலேயே தன்னுடன் இணைந்து நடித்ததாகவும் உற்சாகத்தை பகிர்ந்துள்ளார். தாங்கள் இருவரும் ஆறு -ஏழு படங்களில் ஜோடி சேர்ந்து நடித்துள்ள நிலையில் ஒரு கட்டத்தில் காதலை உணர்ந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தங்களுடைய காதலை வெளிப்படுத்தவில்லை என்ற போதிலும் ஒருவர் இல்லாமல் மற்றொருவரால் வாழ முடியாது என்பதை புரிந்து கொண்டதாகவும் சூர்யா மேலும் தன்னுடைய பேட்டியில் கூறியுள்ளார்.

சூப்பர்ஹிட் ஜோடி: கோலிவுட்டின் சூப்பர்ஹிட் ஜோடியாக வாழ்ந்து வரும் சூர்யா -ஜோதிகா இருவரும் பல ஆண்டுகள் காதலித்து, பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு தேவ் மற்றும் தியா என இரண்டு குழந்தைகள் உள்ளனர். ஜோதிகாவும் அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். தற்போது பாலிவுட்டிலும் அவர் கவனம் செலுத்தி வருகிறார். மாதவன், அஜய் தேவ்கனுடன் ஜோதிகா இணைந்து நடித்திருந்த ஷைத்தான் படம் மிகப்பெரிய வரவேற்பையும் வசூலையும் குவித்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X