Suriya: இந்தக் காரணத்துக்காகத்தான் கங்குவா படத்துல நடிச்சேன்.. நடிகர் சூர்யா ஓபன் டாக்!

சென்னை: நடிகர் சூர்யா நடிப்பில் எதற்கும் துணிந்தவன் படம் கடைசியாக வெளியான நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவரது படங்கள் எதுவும் ரிலீசாகவில்லை. இதையெல்லாம் சரிசெய்யும் வகையில் தற்போது அவரது ரசிகர்களின் உற்சாகத்தை பன்மடங்கு உயர்த்தும் வகையில் கங்குவா படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

வரும் நவம்பர் 14ம் தேதி கங்குவா படம் சர்வதேச அளவில் திரையரங்குகளில் 10க்கும் மேற்பட்ட மொழிகளில் ரிலீசாகவுள்ள நிலையில், ஏஐ மூலம் இந்த அனைத்து மொழிகளிலும் சூர்யாவின் வாய்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளதாக படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது. படத்தின் ரிலீசுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் படத்தின் பிரமோஷன்கள் பிரம்மாண்டப்படுத்தப்பட்டுள்ளது.

suriya kanguva movie delhi

நடிகர் சூர்யா: நடிகர் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படம் வெளியாகி இரண்டு ஆண்டுகளை கடந்துள்ள நிலையில் அடுத்ததாக அவரது கங்குவா படம் ரிலீசுக்கு தயாராகியுள்ளது. மிகவும் பிரம்மாண்டமாக அதிகமான பொருட்செலவில் கங்குவா படம் உருவாகியுள்ள நிலையில் படம் வரும் நவம்பர் 14ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. முன்னதாக இம்மாதம் 10ம் தேதியே இந்தப்படம் ரிலீசாகவிருந்த நிலையில் ரஜினியின் வேட்டையன் பட ரிலீசையொட்டி கங்குவா படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது. படத்தின் ரிலீசுக்கு இன்னும் ஒரு மாத காலம் கூட இல்லாத நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னதாகவே இந்த படத்தின் பிரமோஷன்களை படக்குழுவினர் சிறப்பான வகையில் துவங்கி மேற்கொண்டு வருகின்றனர்.

கங்குவா இசை வெளியீடு: இந்த படத்தின் இசை வெளியீடு வரும் 26ம் தேதி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் பிரம்மாண்ட வகையில் திட்டமிடப்பட்டுள்ள நிலையில் தற்போது சென்னை, டெல்லி, மும்பை உள்ளிட்ட இடங்களில் இந்த படத்தின் ப்ரோமோஷன்களை படக்குழுவினர் மிகச் சிறப்பாக மேற்கொண்டுள்ளனர். சென்னையில் இயக்குனர் சிவா, தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா உள்ளிட்டவர்கள் ப்ரோமோஷன்களில் ஈடுபட்ட நிலையில் மும்பை மற்றும் டெல்லியில் நடந்த ப்ரமோஷன்களில் நடிகர் சூர்யா பங்கேற்றார். அவருடன் படத்தின் நாயகி திஷா பதானி மற்றும் வில்லன் நடிகர் பாபி தியோல் ஆகியோரும் இணைந்து ரசிகர்களை சந்தித்தனர்.

டெல்லியில் சூர்யா: வட இந்தியாவிலும் சூர்யாவிற்கு மிகப்பெரிய மாஸ் வரவேற்பு காணப்பட்டது. ரசிகர்கள் காத்திருந்து அவருடன் செல்ஃபி எடுத்துக் கொண்டனர். மேலும் தனக்காக காத்திருந்த ரசிகர்களுடன் கைகுலுக்கி சூர்யா தன்னுடைய உற்சாகத்தை வெளிப்படுத்தினார். இந்நிலையில் இந்த படம் குறித்து பேசியுள்ள சூர்யா, கஜினி, சிங்கம், 24 ஜெய்பீம் போன்ற படங்களில் நடிக்கவே நடிகர்கள் அனைவரும் விரும்புவதாக தெரிவித்துள்ளார். ஆனால் கங்குவா போன்ற படங்களில் நடிக்க யாரும் முயற்சிப்பதில்லை என்றும் பிரேவ்ஹார்ட் போன்ற படங்களை பார்த்து வியப்படையும் இந்தியாவில் ஏன் இதுபோன்ற படங்களை உருவாக்குவதில்லை என்ற கேள்வி தனக்குள் எழுந்ததாகவும் சூர்யா கூறியுள்ளார்.

கங்குவா படத்தில் நடிக்க காரணம்: இதன் வெளிப்பாடு தான் கங்குவா படத்தில் தான் நடிக்க காரணம் என்றும் சூர்யா தெரிவித்துள்ளார். மேலும் இயக்குனர் சிவா விஷுவலாக சிறப்பான படங்களை எடுக்கும் திறமை கொண்டவர் என்றும் கங்குவா படத்தை தொடர்ந்து 170 நாட்கள் அவர் எடுத்ததாகவும் கூறியுள்ளார். மிகவும் கடினமான பல செயல்பாடுகளை இந்த ஷூட்டிங்கின்போது படக்குவினர் மேற்கொண்டதாகவும் இதற்கான லவ் ரசிகர்களிடம் இருந்து திரும்பவும் தனக்கு படத்தின் வெற்றியாக கிடைக்கும் என்று நம்பிக்கை உள்ளதாகவும் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X