Suriya: நான் மும்பையில் செட்டில் ஆனதுக்கு அதுதான் காரணம்.. சூர்யா சொன்ன சீக்ரெட்!
சென்னை: நடிகர் சூர்யாவின் கங்குவா படம் அடுத்த மாதம் 14ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ள நிலையில் அதையொட்டிய பிரமோஷன்களை கடந்த சில வாரங்களாகவே படக்குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர். சென்னை, மும்பை, டெல்லி, ஹைதராபாத் என அடுத்தடுத்த இடங்களில் செய்தியாளர்களையும் ரசிகர்களையும் சந்தித்த நடிகர் சூர்யா உள்ளிட்ட படக்குழுவினர் படம் குறித்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.
படத்தின் இசை வெளியீடும் பிரம்மாண்டமாக நடத்தப்பட்டுள்ள நிலையில், தனித்தனியாக பேட்டிகளையும் கொடுத்து வருகின்றனர். நடிகர் சூர்யா அதிகமான பேட்டிகளை கொடுத்து வருகிறார். அந்த வகையில் தன்னுடைய சொந்த வாழ்க்கை குறித்தும் கங்குவா மற்றும் தன்னுடைய அடுத்தடுத்த ப்ராஜெக்ட்கள் குறித்தும் அவர் பேசி வருகிறார்.

நடிகர் சூர்யா: நடிகர் சூர்யாவின் கங்குவா படம் அடுத்த மாதம் 14ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. படத்தின் ரிலீஸுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் அடுத்தடுத்த பிரமோஷன்களில் படக்குழுவினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். நடிகர் சூர்யாவும் அடுத்தடுத்த பேட்டிகளில் தன்னுடைய பர்சனல் மற்றும் கங்குவா படம் குறித்து பல சுவாரசியங்களை பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் தற்போது தான் மும்பையில் செட்டில் ஆனது குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். தான் மும்பையில் செட்டில் ஆனதற்கு காரணம் ஜோதிகா மற்றும் தன்னுடைய குழந்தைகள் தான் என்று அவர் தெரிவித்துள்ளார்.
மும்பையில் செட்டிலாக காரணம்: சொந்த பிரச்சினைகள் காரணமாகவே சூர்யா மற்றும் ஜோதிகா மும்பையில் செட்டில் ஆனதாக பல மாதங்களாக தொடர்ந்து சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வந்தது. மேலும் பாலிவுட் படங்களில் சூர்யாவும் ஜோதிகாவும் அதிகமாக கவனம் செலுத்த உள்ளதாகவும் இதுவும் அவர்கள் மும்பையில் செட்டில் ஆக காரணம் என்றும் கூறப்பட்டது. மும்பையில் இருந்தபடியே சென்னையில் நடக்கும் சூட்டிங்கிலும் அவ்வப்போது சூர்யா பங்கேற்று வந்தார். இந்நிலையில் மும்பையில் தான் செட்டில் ஆக காரணம் என்ன என்பதை சூர்யா தன்னுடைய பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
ஜோதிகாதான் காரணம்: ஜோதிகா தன்னுடைய 18 வயது வரை மும்பையில் இருந்ததாகவும் இதையடுத்து நடிப்பு மற்றும் தனக்காக அவர் சென்னையில் செட்டிலானதாகவும் கடந்த 27 ஆண்டுகளாக தன்னுடைய பெற்றோர், உறவினர் மற்றும் நண்பர்களை பிரிந்து அவர் சென்னையில் வாழ்ந்ததாகவும் சூர்யா கூறியுள்ளார். தன்னுடன் நேரத்தை கழிப்பதில் அவர் சந்தோஷம் அடைந்ததாகவும் சூர்யா குறிப்பிட்டுள்ளார். ஒரு ஆணுக்கு தேவைகள், ஆசைகள் இருப்பதை போலவே பெண்ணுக்கும் இருக்கும் என்பதை புரிந்தே தான் மும்பைக்கு ஷிப்ட் ஆனேன் என்று கூறியுள்ள சூர்யா, இதை தான் தாமதமாகவே புரிந்துக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
சூர்யா உற்சாகம்: ஜோதிகாவிற்கு நண்பர்கள், உறவினர்கள், சுயமரியாதை, நிதி சுதந்திரம் போன்றவை தேவை என்பதை தான் புரிந்துக் கொண்டதாகவும் தற்போது தான் விரும்பிய இடத்திற்கு செல்லும் சுதந்திரம் ஜோதிகாவிற்கு உள்ளதாகவும் குழந்தைகளும் சிறப்பான கல்வியை பெற்று வருவதாகவும் சூர்யா கூறியுள்ளார். தான் மாதத்தில் 10 நாட்கள் மும்பையிலும் 20 நாட்கள் சென்னையில் படப்பிடிப்பதற்காகவும் செலவழித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். ஒரு நாளில் 18 மணிநேரம் உழைக்கவும் தான் தயாராக உள்ளதாகவும் கூறியுள்ளார். தன்னுடைய மகளுடன் பார்க்கிலே நடைபோடுவது உள்ளிட்ட பல விஷயங்களை தான் அங்கே செய்வதாகவும் இது தனக்கு மிகச் சிறப்பான வாழ்க்கை முறையை கொடுத்துள்ளதாகவும் சூர்யா மேலும் உற்சாகம் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











