Suriya: கார்த்தியை பார்த்தா பொறாமையா இருக்கும்.. நாகார்ஜுனாவிடம் குறைகொட்டிக் கொண்ட சூர்யா!

ஐதராபாத்: நடிகர் சூர்யாவின் கங்குவா படம் அடுத்த மாதம் 14ம் தேதி சர்வதேச அளவில் ரிலீசாகவுள்ளது. வரலாற்று கதைக்களத்தில் மிகவும் பிரம்மாண்டமாக அதிகமான பொருட்செலவில் கங்குவா படம் உருவாக்கப்பட்டுள்ள நிலையில், படத்தின் மீதான அதிகப்படியான எதிர்பார்ப்பை ரசிகர்கள் வெளிப்படுத்தி வருகின்றனர்.

அதற்கேற்ப படத்தின் அடுத்தடுத்த பிரமோஷன்களும் மிகச்சிறப்பாக நடந்து வருகிறது. சென்னை, ஐதராபாத், மும்பை, டெல்லி என அடுத்தடுத்த இடங்களில் படக்குழுவினருடன் இணைந்து சூர்யா அடுத்தடுத்த பிரமோஷன்களில் ஈடுபட்டு வருகின்றார். சென்னையில் மட்டுமில்லாமல் மற்ற இடங்களிலும் சூர்யாவிற்கு மிகப்பெரிய வரவேற்பை காண முடிந்தது.

suriya karthi nagarjuna

கங்குவா படம்: நடிகர் சூர்யாவின் கங்குவா படம் அடுத்த மாதம் 14ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. இந்த மாதத்திலேயே கடந்த 10ம் தேதி இந்தப் படம் ரிலீசாகவுள்ளதாக முன்னதாக அறிவிக்கப்பட்ட நிலையில், நடிகர் ரஜினிகாந்தின் வேட்டையன் பட ரிலீசையடுத்து கங்குவா படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது. இதை நடிகர் சூர்யாவே வெளிப்படையாக தெரிவித்திருந்தார். இந்நிலையில் மிகுந்த பொருட்செலவில் அதிகமான பிரம்மாண்டத்துடன் உருவாகியுள்ள கங்குவா படத்தின் பிரமோஷன்களும் மிகச்சிறப்பாக முடுக்கி விடப்பட்டுள்ளன.

நடிகர் சூர்யா: படம் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாகவுள்ள நிலையில், அடுத்தடுத்த மாநிலங்களில் கங்குவா படக்குழுவினர் பிரமோஷன்களில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னையில் மட்டுமில்லாமல் ஐதராபாத், மும்பை, டெல்லி ஆகிய இடங்களிலும் இவர்களை பார்க்க முடிந்தது. சூர்யாவும் இந்த பிரமோஷன்களில் ஈடுபட்டு ரசிகர்களை நேரில் சந்தித்த நிலையில், அவர் சென்ற இடங்களில் எல்லாம் அவரை காண ரசிகர்கள் உற்சாகமாக பங்கேற்றதை பார்க்க முடிந்தது. சூர்யா மற்றும் படக்குழுவினருடன் அவர்கள் இணைந்து செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.

தெலுங்கு பிக்பாஸில் சூர்யா: ஐதராபாத்தில் கங்குவா பட பிரமோஷன்களில் ஈடுபட்ட சூர்யா, இயக்குநர் சிவா மற்றும் ஞானவேல் ராஜா உள்ளிட்டவர்கள், நடிகர் நாகார்ஜுனாவுடன் இணைந்து பேட்டிகளையும் கொடுத்தனர். முன்னதாக தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று அதன் ஹோஸ்ட் நாகார்ஜுனாவுடன் சூர்யா பேசினார். இந்த பேட்டியின்போது சூர்யாவை தெலுங்கில் பேசும்படி நடிகர் நாகார்ஜுனா கேட்க, அவர் இதில் தான் fully loaded edition இல்லை என்றும் limited edition என்றும் சூர்யா கூறியதை பார்க்க முடிந்தது. தன்னுடைய தம்பி கார்த்தி மிகச்சிறப்பாக தெலுங்கு மொழியை பேசுவார் என்றும் இந்த விஷயத்தில் அவரைப் பார்த்து தான் பொறாமை படுவதாகவும் சூர்யா மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கார்த்தி மீது பொறாமை: கார்த்தி தன்னுடன் பணியாற்றும் தெலுங்கு நடிகர்களுடனும் சிறப்பாக தெலுங்கில் பேசுவார் என்றும் சூர்யா கூறியுள்ளார். அவர் எப்போதும் ஃபர்ஸ்ட் பென்ச் மாணவர் என்றும் தான் கடைசி பென்ச் மாணவன் என்றும் சூர்யா உண்மையை வெளிப்படுத்தியுள்ளார். நேற்றைய தினம் நடந்த கங்குவா படத்தின் ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சியிலும் சூர்யாவை உற்சாகப்படுத்தும் வகையில் நடிகர் கார்த்தி பங்கேற்று பல விஷயங்களை பேசினார். கார்த்தியின் பட விழாக்களிலும் சூர்யா தொடர்ந்து பங்கேற்று வருவது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X