பொன்னியின் செல்வன் பிளாக் பஸ்டர் அடிக்கும்..டிரைலரை பார்த்து பாராட்டிய சூர்யா!
சென்னை :பொன்னியின் செல்வன் நிச்சயம் பிளாக் பஸ்டர் ஹிட்டடிக்கும் என்று நடிகர் சூர்யா பாராட்டி உள்ளார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என 5 மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30ந் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது.
படம் வெளியாக சரியாக 20 நாட்களே உள்ள நிலையில் படம் குறித்த அப்டேட்களை படக்குழு அவ்வப்போது வெளியிட்டு எதிர்பார்ப்பை தூண்டி உள்ளது.

பொன்னியின் செல்வன்
அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாகக் கொண்டு, இயக்குநர் மணிரத்னத்தின் அதே பெயரில் பொன்னியின் செல்வன் இரு பாகங்களாக உருவாகி உள்ளது. இந்த படத்தில் சரத்குமார், நாசர், பிரகாஷ் ராஜ், பார்த்திபன், பிரபு, நிழல்கள் ரவி, ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், விக்ரம் பிரபு, ரியாஸ் கான், ஜெயராம், ஜெயசித்ரா, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, த்ரிஷா, ஷோபிதா துலிபலா, கிஷோர், அஸ்வின், அர்ஜூன் சிதம்பரம், ரஹ்மான், மோகன் ராம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

பிரம்மாண்ட திருவிழா
இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா 6ந் தேதி நேரு உள்விளையாட்டு அரங்கில் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. விக்ரம்,கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்யா லெக்ஷ்மி, ஜெயராம் ரமேஷ், பிரபு, விக்ரம் பிரபு, சித்தார், அதிதி ராவ் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். மேலும்,இந்த விழாவில், ரஜினிகாந்த், கமல்ஹாசன், ஷங்கர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.

டிரைலர் சாதனை
பான் இந்திய திரைப்படமாக உருவாகி உள்ள இந்த படத்தில் தமிழ் டிரைலரை கமல் வெளியிட்டார். மேலும், டிரைலரில் கமலின் கர்ஜனைக்குரலில் டிரைலர் மிகவும் மிரட்டலாக இருந்தது. டிரைலர் வெளியான 24 மணிநேரத்தில் தமிழில் 75 லட்சம் பார்வையாளர்களு, தெலுங்கில் 24 லட்சமும், மலையாளத்தில் 9 லட்சமும்,கன்னடத்தில் ஒரு லட்சம் பார்வையாளர்களை கடந்துள்ளது.

பிளாக் பஸ்டர் ஹிட்
இந்நிலையில், பொன்னியின் செல்வன் டிரைலரை பார்த்து பிரம்மித்துப் போன நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் வெகுவாக புகழ்ந்துள்ளார். என்ன ஒரு காட்சி.. அந்த வீடியோவில் மணிரத்தினத்தின் பெயர் முழுவதும் எழுதப்பட்டிருப்பதாக கூறினார் மற்றும் குழுவினருக்கு இது பிளாக் ஃபாஸ்ட்டராக இருக்க வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார். அதே போல நடிகர் சிம்பு தமிழ் சினிமாவின் பெருமை என கூறியிருந்தார்.


Click it and Unblock the Notifications











