மெய்யழகன் இயக்குநருக்கு பிடித்த வெள்ளைக் கார்.. பல மாதங்களாக தேடி வாங்கிக் கொடுத்த சூர்யா.. ஒரே சந்தோஷம்!

சென்னை: கடந்த ஆண்டு நடிகர் கார்த்தி, அரவிந்த் சாமி, ஸ்ரீ திவ்யா, தேவதர்ஷினி, ராஜ்கிரண், ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் மெய்யழகன். கடந்த ஆண்டு அதாவது 2024 ஆம் ஆண்டு வெளியான தமிழ் படங்களிலேயே ஆகச் சிறந்த படைப்புகளில் ஒன்று மெய்யழகன். இன்னும் சொல்லப்போனால் முதல் மூன்று இடங்களை அலங்கரிக்கத் தகுதியான படம். இந்த படத்தின் இயக்குநர் பிரேம்குமாருக்கு படத்தின் தயாரிப்பாளரான நடிகர் சூர்யா, வெள்ளை நிற தார் கார் ஒன்றை பரிசாக அளித்துள்ளார். இது இயக்குநர் பிரேம்குமாரை நெகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.

தமிழ் சினிமாவில் வெளியான ஃபீல் குட் படங்களில் ரத்தினமான மிளிரும் படம் என்றால் அது மெய்யழகன். வழக்கமான கதாநாயகப் பிம்பம் என்ற எதுவும் இல்லாமல், சாதாரணமாக இரண்டு ஆண்கள் உரையாடுவதை மட்டும் வைத்து, இவ்வளவு அழகான அதே நேரத்தில் ஆழமான அரசியல் நுட்பம் கொண்ட, அனைவரையும் கவரும் எமோஷன்ஸ் கொண்ட படத்தை மொத்த படக்குழுவும் கொடுத்துள்ளது. படத்தின் கதை மற்றும் திரைக்கதை படத்திற்கு பெரும் பலம் என்றால், படத்தின் இசை, ரசிகர்கள் மனதை அன்பினில் உறைய வைக்கும் இசை, கோவிந்த் வசந்தா உடையது. உலக நாயகன் கமல்ஹாசன் குரலில் இடம் பெற்றுள்ள பாடலில் உருகாத மனங்களை கொண்டவர்களை கல் நெஞ்சக்காரர்கள் என்று சொல்லும் அளவுக்கு அந்த பாடல் இருந்தது.

பிரேம் குமார் இயக்கத்தில் ஏற்கனவே, 96 என்ற படம் வெளியாகி ரசிகர்கள் மனதில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. மெய்யழகன் படம் வெளியாகி தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இன்னும் சொல்லப்போனால், தமிழைக் காட்டிலும் தெலுங்கில் படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. தமிழில் கூட படம் வெளியான பின்னர் சில காட்சிகளை நீக்க வேண்டி இருந்தது. ஆனால், தெலுங்கு ரசிகர்கள் இந்த படத்திற்கு கொடுக்க வேண்டிய மரியாதையை முறையாக கொடுத்தார்கள் என்று கூறலாம்.

Actor Suriya Present Mahindra Thar Roxx AX 5L 4x4 variant Car To Meiyazhagan Director Premkumar

வெள்ளை நிற தார் கார்: படம் வெளியாகி பல மாதங்கள் ஆன நிலையில் படத்தின் தயாரிப்பாளரான நடிகர் சூர்யா, படத்தின் இயக்குநர் பிரேம் குமாருக்கு அவருக்குப் பிடித்த வெள்ளை நிற தார் காரை வாங்கிக் கொடுத்துள்ளார். இது இயக்குநர் பிரேம் குமாருக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது. அவரை வீட்டுக்கு வரவழைத்த நடிகர் கார்த்தி, அவரிடம் காருக்கான சாவியைக் கொடுத்து அன்பை வெளிப்படுத்தினார்.

சர்ப்ரைஸ் : இதை கொஞ்சமும் எதிர்பார்க்காத பிரேம் குமார் இன்ப அதிர்ச்சி அடைந்தார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. அதே நேரத்தில் இது தொடர்பாக இயக்குநர் பிரேம் குமார் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில், " எனக்கு வெள்ளை நிறத்தில் தார் கார் வாங்கவேண்டும் என்று பல நாள் ஆசை. நானும் பல ஷோரூம்களில் விசாரித்து பார்த்துவிட்டேன். எங்கேயும் இல்லை. ஒரு கட்டத்தில் நான் மனம் வெறுத்துப்போய், அந்த கார் வேண்டாம் என முடிவெடுத்தேன். ஆனால், நான் தேடித் தேடிக் கிடைக்காத காரை, பல மாதங்களாக தனது மனதில் வைத்திருந்து, அதை இந்தியா முழுவதும் தேடி, எனக்காக சூர்யா அண்ணா வாங்கிக் கொடுத்திருப்பது மிகவும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

பணம் இல்லை: சில தினங்களுக்கு முன்னர் எனக்கு சூர்யா அண்ணா வெள்ளை நிற தார் காரின் புகைப்படத்தை அனுப்பி, 'அது நமது வீட்டுக்கு வந்து கொண்டு உள்ளது' என்று குறிப்பிட்டிருந்தார். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. காரணம், என்னிடத்தில் அந்த காரை வாங்குவதற்கு பணம் இல்லை. நான் உடனே சூர்யா சாரின் மேனேஜர் ராஜாவுக்கு போன் செய்து, என்னிடம் பணம் இல்லையே, நான் என்ன செய்வது என்று கேட்டபோது, அவர் சிரித்துக் கொண்டே, சொன்ன விஷயம், பிரேம் இது சூர்யா சார் உங்களுக்கு கொடுக்கும் அன்புப் பரிசு என்று கூறினார். எனக்கு ஆச்சரியம் ஆகிவிட்டது.

Actor Suriya Present Mahindra Thar Roxx AX 5L 4x4 variant Car To Meiyazhagan Director Premkumar

கார் சாவி: எனது பாசமிகு மெய்யழகன் கார்த்தி சார் என்னை லக்‌ஷ்மி இல்லத்திற்கு வரச் சொன்னார். நானும் புறப்பட்டுச் சென்றேன். லக்‌ஷ்மி இல்லத்தின் கதவுகள் எனக்காகத் திறந்ததும், என்னை வரவேற்க கார்த்தி காத்துக் கொண்டிருந்தார். எனக்காக வெள்ளை நிற தார் காரும் காத்துக் கொண்டு இருந்தது. அவர் என்னை வரவேற்றுவிட்டு, வெகு சீக்கிரமாக எனது கனவு வாகனமான வெள்ளை நிற தார் காரின் சாவிகளைக் கொடுத்தார். நான் உடனே எனது கனவுகளை அந்த சாவியை கொண்டு திறந்துவிட்டேன். மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

அடுத்த சில நாட்களுக்கு: நானும் கார்த்தி பிரதரும் அந்த தார் காரில் ஒரு குட்டி ரவுண்ட் போனோம். அதன் பின்னர் அந்த காரை நான் எனது அலுவலகத்திற்கு நான் ஓட்டிக் கொண்டு வந்துவிட்டேன். எப்படியும் அடுத்த சில நாட்களுக்கு நான் ஒரு நாளைக்கு குறைந்தது 50 கிலோ மீட்டராவது இந்த தார் காரில் வலம் வருவேன் என்று நினைக்கிறேன். இப்போதும் இது எனக்கு கனவு போல தான் இருக்கிறது. இதை நான் எனக்கான அன்புப் பரிசாக பார்க்கவில்லை. ஒரு இளைய சகோதரனுக்கு மூத்த சகோதரரான சூர்யா, இளைய சகோதரனின் ஆசையை நிறைவேற்றி வைத்துள்ளார் என்றுதான் பார்க்கிறேன்.

Actor Suriya Present Mahindra Thar Roxx AX 5L 4x4 variant Car To Meiyazhagan Director Premkumar

விலை: சூர்யா அண்ணனுக்கு நன்றி, கார்த்தி சகோதரருக்கு நன்றி, ராஜா சாருக்கு நன்றி என்று பதிவிட்டுள்ளார். சூர்யா இவருக்கு பரிசளித்துள்ள கார் என்பது, Mahindra Thar Roxx AX 5L 4x4 variant , 5 door version வெள்ளை நிற கார் ஆகும். இந்த கார் கிட்டத்தட்ட ரூபாய் 20 லட்சத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது. மெய்யழகன் போன்ற சிறந்த படத்தைக் கொடுத்ததற்காக, பிரேம் குமாருக்காக இந்த காரை தேடித் தேடி வாங்கிக் கொடுத்துள்ளார் சூர்யா.

96 பார்ட் 2: பிரேம் குமார் தற்போது 96 படத்தின் இரண்டாம் பாகத்திற்கான கதை மற்றும் திரைக்கதை அமைக்கும் பணிகளில் ஈடுபட்டு கொண்டுள்ளார் என கூறப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் தொடங்கும் போது படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் கூறப்படுகிறது. இவருக்கு சூர்யா கார் வாங்கிக் கொடுத்துள்ளது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X