இயக்குநர்கள் சங்க அறக்கட்டளைக்கு அள்ளிக்கொடுத்த சூர்யா
சென்னை: நடிகர் சூர்யா தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்க உறுப்பினர்கள் நலன் கருதி சங்கத்தின் அறக்கட்டளைக்கு நிதியாக பத்து லட்சம் ரூபாய்க்கான காசோலையை சங்கத்தின் பொது செயலாளர் இயக்குனர் ஆர்.வி.உதயகுமாரிடம் வழங்கினார். அதனை பெற்றுக்கொண்ட இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் சூர்யாவிற்கு தனது நன்றிகளை தெரிவித்தார்.
தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் புதிய தலைவராக பதவி ஏற்றுள்ள இயக்குநர் ஆர்.கே.செல்வமணி இயக்குநர்களின் நலனுக்காகவும் அவர்களின் அங்கீகாரத்திற்காகவும் குரல் எழுப்பி வருகிறார்.

சமீபத்தில் இயக்குநர் பார்த்திபனின் ஒத்த செருப்பு சைஸ் 7 திரைப்படம் ஆஸ்கார் விருதுக்காக ஏன் பரிந்துரைக்கப்படவில்லை என்பதற்காகவும், இயக்குநர்கள் அங்கீகரிக்கப்படவேண்டும் என்பதற்காகவும், அதை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லவும் முயற்சிகளை மேற்கொண்டார்..
நமது தமிழ் சினிமாவிலும் பல திறமையான நல்ல இயக்குநர்கள் இருக்கையில், தமிழ் சினிமாவிற்கு தேசிய விருது கிடைக்காமல் போவதற்கு காரணம் என்ன, சிறிய பட்ஜெட் படங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவேண்டும் என பல வகையிலும் இயக்குநர்கள் நலனுக்காக பல சந்தர்ப்பங்களில் முன் நிற்கிறார்.
அந்த வகையில் பல வெற்றிப்படங்களை அளித்த இயக்குநர்கள் பலரின் நிலைமை இன்று மிகவும் மோசமாக இருக்கிறது. அவர்களுக்கு உதவும் வகையில் நிதி திரட்டப்படுகிறது. வசூலாகும் அந்த நிதியைக் கொண்டு சங்க அறக்கட்டளை சார்பில் அவர்களுக்கு ஏதாவது ஒரு வகையில் உதவி செய்வதற்காக திரையுலகத்தினரிடம் இருந்து தங்களால் முடிந்த தொகையை வசூலித்து வருகிறார்கள்.
பல பிரபலங்கள் தங்களது நிதியை வழங்கி வரும் நிலையில் நடிகர் சூர்யா தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்க உறுப்பினர்கள் நலன் கருதி சங்கத்தின் அறக்கட்டளைக்கு நிதியாக பத்து லட்சம் ரூபாய்க்கான காசோலையை சங்கத்தின் பொது செயலாளர் இயக்குநர் ஆர்.வி.உதயகுமாரிடம் வழங்கினார். அதனை பெற்றுக்கொண்ட இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் சூர்யாவிற்கு தனது நன்றிகளை தெரிவித்தார்.
நடிகர் சூர்யா இன்று மட்டுமல்ல, என்றுமே சமூக அக்கறை மிக்கவர் தான். சமூகத்திற்காக பல நல்ல காரியங்களை செய்து வருபவர். அதற்கு எடுத்துக்காட்டு தான் அகரம் அறக்கட்டளை முலமாக பல குழந்தைகளுக்கு தரமான கல்வி பெறுவதற்கு ஆதரவாக இருந்து வருவது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











