Bobby deol birthday: பாபி தியோல் பிறந்தநாள் ஸ்பெஷல்.. போஸ்டர் வெளியிட்ட சூர்யா.. மிரட்டுதே!
சென்னை:நடிகர் சூர்யா, திஷா பதானி ஆகியோர் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள கங்குவா படத்தின் சூட்டிங் ஏறக்குறைய நிறைவடைந்துள்ளது. இந்தப் படத்தினை இயக்குநர் சிவா இயக்கியுள்ள நிலையில் படத்தின் பேட்ச் வொர்க் வேலைகள் மீதமுள்ளதாக படக்குழு சார்பில் கூறப்பட்டுளள்து. இந்தப் படத்தின் ரிலீஸ் ஆகஸ்ட் மாதத்தில் திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் ஜரூராக நடந்து வருகிறது. சர்வதேச அளவில் 10க்கும் மேற்பட்ட மொழிகளில் ரிலீசாகவுள்ள இந்தப் படத்தில் பாலிவுட் நாயகன் பாபி தியோல் வில்லனாக நடித்துள்ளார்.
இவர்களின் காம்பினேஷன் காட்சிகள் மிரட்டலாக அமைந்துள்ளதாக படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது. படத்தில் சூர்யா 10 விதமான கெட்டப்புகளில் நடித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. படத்தின் போஸ்டர்கள், கிளிம்ப்ஸ் வீடியோ உள்ளிட்டவை வெளியாகி ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது. படத்தின் ரிலீசுக்காக அதன் அறிவிப்பிற்காக ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில் இன்றைய தினம் படத்தின் வில்லன் பாபி தியோலின் பிறந்தநாளையொட்டி அவரது கேரக்டரை வெளிப்படுத்தும் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டரை நடிகர் சூர்யா உள்ளிட்ட படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

நடிகர் சூர்யா: நடிகர் சூர்யாவின் நடிப்பில் இயக்குநர் சிவா டைரக்ட் செய்துள்ள படம் கங்குவா. கங்குவா என்றால் நெருப்பின் மகன் என்று கூறப்பட்டுள்ள நிலையில் படம் மிகவும் பிரம்மாண்டமான அளவில் மிகுந்த பொருட்செலவில் உருவாகியுள்ளது. படத்தில் சூர்யா, பாபி தியோல் ஆகியோரின் போர்ஷன்கள் நிறைவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் சில பேட்ச் வேலைகளை முடித்துவிட்டு ஒட்டுமொத்த சூட்டிங்கையில் சிவா நிறைவு செய்யவுள்ளார். படத்தின் சிஜி வேலைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. படத்தில் சூர்யாவின் இன்ட்ரோ பாடலில் 100 டான்சர்களை கொண்டு எடுக்கப்பட்டு, க்ளோனிங் முறையில் 2000 டான்சர்கள் இருப்பதாக உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
பாபி தியோல் பிறந்தநாள் போஸ்டர்: படம் சர்வதேச அளவில் 10க்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியாகவுள்ளதாகவும் அதற்கான பணிகளும் நடந்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. படத்தின் சூட்டிங் ஜனவரியிலேயே நிறைவடைந்தாலும் படம் ஆகஸ்டையொட்டியே வெளியாகும் என்றும் பதற்றம் இல்லாமல் ரசிகர்களுக்கு நிறைவான படத்தை கொடுக்கவே உழைத்து வருவதாகவும் தயாரிப்பு தரப்பில் கூறப்பட்டுள்ளது. படத்தின் அடுத்தடுத்த போஸ்டர்கள் வெளியாகிவரும் சூழலில் இன்றைய தினம் பாபி தியோல் பிறந்தநாளையொட்டியும் அவரது கேரக்டரை வெளிப்படுத்தும் வகையில் போஸ்டர் வெளியாகியுள்ளது.
பாபி தியோலின் உதிரன் கேரக்டர்: படத்தில் உதிரன் என்ற கேரக்டரில் பாபி தியோல் நடித்துள்ளதாக தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ள நடிகர் சூர்யா, அவரது கேரக்டர் போஸ்டரை வெளியிட்டு அவரது நட்பிற்கு நன்றி தெரிவித்துள்ளார். கங்குவா படத்தில் முற்றிலும் உதிரனாகவே மாறியுள்ள பாபி தியோலுக்கு சூர்யா பாராட்டும் தெரிவித்துள்ளார். இந்தப் போஸ்டரில் கொம்புகளுடன் கூடிய கெட்டப்பில் பாபி தியோல் காணப்படுகிறார். அவரை சுற்றிலும் பெண்களும் அதே கெட்டப்பில் காணப்படுவதாக இந்த போஸ்டர் அமைந்துள்ளது. படம் பான் இந்தியா படமாக வெளியாகவுள்ள சூழலில் பாபி தியோல் மிரட்டலான வில்லனாக அமைந்துள்ளார்.
அடுத்தடுத்த போஸ்டர்கள்: யூவி கிரியேஷன்ஸ் மற்றும் ஸ்டூடியோ கிரீன் இணைந்து தயாரித்துவரும் கங்குவா படத்தின் ஒவ்வொரு விஷயங்களிலும் டீடெயிலிங்கை காட்ட இயக்குநர் சிவா பணிகளை மேற்கொண்டு வருவதாக படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது. படத்தில் காஸ்ட்யூம் உள்ளிட்ட பல விஷயங்களில் அவர் தனிப்பட்ட அக்கறையை செலுத்தி வருகிறார். அது முன்னதாக வெளியான சூர்யாவின் போஸ்டர்களிலும் தற்போது வெளியாகியுள்ள பாபி தியோலின் போஸ்டரிலும் வெளிப்பட்டுள்ளது. இந்த போஸ்டர்கள் தற்போது படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.


Click it and Unblock the Notifications











