இவ்ளோ ஸ்லோவா.. இவ்ளோ அழகா ஒரு டிரைலரை பார்த்ததே இல்லை.. மனதை ஜில் ஆக்கும் சில்லுக்கருப்பட்டி!
சென்னை: சமுத்திரகனி, சுனைனா மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள சில்லுக்கருப்பட்டி படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது.
ஹலீதா ஷமீம் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தின் டிரைலரை நடிகர் சூர்யா தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
வரும் டிசம்பர் 27ம் தேதி இந்த படம் வெளியாகும் இந்த படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் வெளியிடுகிறது.
ஸ்லோவா அழகா இருக்கு
டீஸர் மற்றும் டிரைலர் எப்போதுமே ஜெட் வேகத்தில் வந்து செல்லும். குறைந்த நிமிடத்தில் படத்தின் பல காட்சிகளை நிரப்பிக் கொண்டு ரசிகர்களுக்கு கூஸ் பம்ப்ஸ் கொடுக்கும். சமீபத்தில் வெளியான ரஜினியின் தர்பார் டிரைலரையும் இதற்கு உதாரணமாக சொல்லலாம். ஆனால், மிகவும் ஸ்லோவாகவும் அழகாகவும், ஆழமான வசனங்களுடன் வெளியாகியிருக்கும் சில்லுக்கருப்பட்டி டிரைலரை ஒரு முறை மிஸ் பண்ணாம பாருங்க..
சூர்யா வெளியீடு
ஹலீதா ஷமீம் இயக்கத்தில் உருவாகியுள்ள சில்லுக்கருப்பட்டி படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் வெளியிடுகிறது. வரும் டிசம்பர் 27ம் தேதி படம் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் டிரைலரை தற்போது நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். சூர்யா ரசிகர்கள் இந்த டிரைலரை வைரலாக்கி வருகின்றனர்.

நடிகர்கள் யார் யார்?
சில்லுக்கருப்பட்டி படத்தில் சமுத்திரகனி, சுனைனா, லீலா சாம்சன், நிவேதிதா சதீஷ், சாரா அர்ஜுன், மணிகண்டன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பிரதீப் குமார் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இத்தனை கேமராமேன்களா?
சிம்புவின் வானம் படம் போல, சில்லுக்கருப்பட்டி படத்தில் பலரது காதல் வாழ்க்கை படமாக்கப்பட்டிருக்கிறது. இந்த படத்தில் அபிநந்தன் ராமனுஜம், மனோஜ் பரமஹம்சா, விஜய் கார்த்திக் கண்ணன், யாமினி யக்னமூர்த்தி என பல ஒளிப்பதிவாளர்கள் பணியாற்றியுள்ளனர்.
எல்லா வயதிலும் காதல் இருக்கு
சிறு வயது முதல் முதியவர்கள் ஆனாலும் எல்லோர் மனதிலும் காதல் நீங்காமல் இருக்கிறது என்பதை கவிதையாய் இந்த படத்தின் டிரைலரே சொல்கிறது. நிச்சயம் படமும் இதைவிட ரசிக்கும்படியாய் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











