பெற்றோருக்கு நடிகர் சூர்யா வேண்டுகோள்… இணையத்தில் டிராண்டாகும் வீடியோ !

சென்னை : பெற்றோருக்கு நடிகர் சூர்யா வேண்டுகோள்விடுத்திருக்கும் வீடியோ இணையத்தில் டிராண்டாகி வருகிறது.

பள்ளி மேலாண்மைக் குழுக்களில் பெற்றோர்கள் பங்கேற்பதன் அவசியம் குறித்து நடிகர் சூர்யா, வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ, தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது. அதில்,

சிறந்த பள்ளிகள்தான், சிறந்த மனிதர்களை உருவாக்க முடியும். பள்ளிக்கூடங்கள் வெறும் கட்டிடமட்டுமல்ல. அங்கு நம் நாட்டோட எதிர்காலம் தீர்மானிக்கப்படுது. அரசு பள்ளிகளில், பள்ளி மேலாண்மை குழுவை மறுகட்டமைப்பு செய்துள்ளது தமிழக அரசு. மாணவர்களின் எதிர்காலத்தின் மீது அக்கறை இருக்குற, ஆசிரியர்கள், பெற்றோர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் என பல தரப்பினர் இந்த இடம் பெற்று இருப்பார்கள்.

Actor Suriya request to parents

பள்ளிகளை சுற்றிஉள்ள அனைத்து பிள்ளைகளையும் படிக்க வைப்பதும், படிப்பை பாதியில் நிறுத்துன மாணவர்களை மீண்டும் பள்ளிக்கு கொண்டு வருவது இந்த குழுவின் முக்கியமான வேலை. அது மட்டுமில்லாமல் மாற்றுத்திறனாளி குழந்தை, சிறப்பு கவனம் தேவைப்படும் மாணவர்களுக்கான சூழலும், வசதியும் இருக்கா என்பதையும் உறுதி செய்வாங்க.

பள்ளிக்கூடத்துக்கான கட்டிட வசதி, மதிய உணவு திட்டம், மாணவர்களுக்கு அரசு தர்ற பல்வேறு நல திட்ட உதவிகள் சரியான முறையில வந்து சேர்ந்தாங்கறதையும் இதே குழு கவனிப்பாங்க. நம்ம பிள்ளைகளுக்கு நல்ல கல்விச் சூழலும் வசதியும் கிடைக்கணும்னா, எல்லா அரசு பள்ளியிலயும் நடக்கப் போற, பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு நிகழ்வுல கலந்துக்கறது மிக அவசியம். சிறந்த பள்ளியும் சிறந்த கல்வியும் மாணவர்களின் உரிமை. அதற்குத் துணை நிற்கறதும் உறுதி செய்யறதும் நம்ம கடமை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X