ஷார்ட்ஸ் போட்டுக்கிட்டு வெளியே வந்த சூர்யா.. என் குழந்தைகளை வீடியோ எடுக்காதீங்கன்னு கோரிக்கை!

மும்பை: நடிகர் சூர்யா ஷார்ட்ஸ் மட்டும் அணிந்து கொண்டு வெளியே வந்து பத்திரிகையாளர்களிடம் கோரிக்கை வைத்த வீடியோ இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

நடிகர் சூர்யா சமீப காலமாக அடிக்கடி மாமியார் வீடான மும்பைக்கு விசிட் அடித்து வருகிறார்.

அங்கேயே சூர்யா வீடு ஒன்றையும் சொந்தமாக வாங்கி குடியேறி உள்ளதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன.

அடிக்கடி மும்பை

அடிக்கடி மும்பை

சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிப்பில் சூரரைப் போற்று திரைப்படம் இந்தியில் உருவாகி வருகிறது. மேலும், அக்‌ஷய் குமார் ஹீரோவாக நடித்து வரும் அந்த படத்தில் நடிகர் சூர்யாவும் கேமியோ ரோலில் நடித்து வருகிறார். பாலிவுட்டில் படம் தயாரிக்கும் பணிகளிலும் புதுப் படங்களில் நடிக்கும் வாய்ப்புகளை பெறவும் அடிக்கடி மும்பைக்கு விசிட் அடித்து வருகிறார் சூர்யா.

மாமியார் வீடு

மாமியார் வீடு

நடிகை ஜோதிகாவின் அம்மா மற்றும் அக்கா என அனைவரும் மும்பையில் வசித்து வருகின்றனர். மும்பையில் பிறந்து வளர்ந்த ஜோதிகா தமிழில் வாலி படத்தின் மூலம் அறிமுகமாகி பல படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார். சமீப காலமாக மனைவி மற்றும் குழந்தைகளுடன் அடிக்கடி மாமியார் வீடான மும்பைக்கு நடிகர் சூர்யா சென்று வருகிறார்.

மும்பையில் தனி வீடு

மும்பையில் தனி வீடு

சமீபத்தில், நடிகர் சூர்யா அப்பா சிவகுமாரை பிரிந்து மும்பையிலேயே தனியாக வீடு வாங்கி குடும்பத்துடன் செட்டில் ஆகி விட்டதாக பயில்வான் ரங்கநாதன் பரபரப்பான வீடியோவை வெளியிட்டு பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருந்தார். இந்நிலையில், நடிகர் சூர்யா மும்பையில் பத்திரிகையாளர்களிடம் கோரிக்கை வைக்கும் ஒரு வீடியோ இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

குழந்தைகளை வீடியோ எடுக்காதீங்க

இந்நிலையில், சமீபத்தில் மும்பையில் குடியிருப்பில் இருந்து வெறும் ஷார்ட்ஸ் மட்டும் அணிந்து கொண்டு நடிகர் சூர்யா வெளியே வந்த நிலையில், பத்திரிகை புகைப்படக் கலைஞர்கள் சூர்யாவையும் அவரது குழந்தைகளையும் போட்டோ எடுக்க முயற்சித்தனர். அப்போது, வெளியே வந்த சூர்யா, என் கூட என் பசங்க இருக்காங்க, அவங்களை போட்டோவோ வீடியோவோ எடுக்காதீங்க ப்ளீஸ் என கோரிக்கை வைத்தார். உடனடியாக ஓகே சார் என புகைப்படக் கலைஞர்களும் சொல்லிவிட்டு அங்கிருந்து விலகிச் சென்றனர்.

புது லுக்

புது லுக்

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா 42 படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. இந்நிலையில், இந்த வீடியோவில் தாடி, ஹேர்ஸ்டைல் என எல்லாமே வித்தியாசமாக மாறியபடி புதிய லுக்கில் சூர்யா காட்சி தந்த நிலையில், சூர்யா 42 லுக்கா அல்லது இந்தி படத்திற்கான லுக்கா என ரசிகர்கள் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

பரவிய குழந்தைகள் புகைப்படம்

பரவிய குழந்தைகள் புகைப்படம்

சமீபத்தில் மும்பையில் நடந்த திருமண விழாவில் கலந்து கொண்ட நடிகை ஜோதிகா தனது மகள் தியா மற்றும் மகன் தேவ் உடன் எடுத்துக் கொண்ட போட்டோக்களை வெளியிட்டு இருந்த நிலையில், சூர்யா மற்றும் ஜோதிகாவின் குழந்தைகளின் புகைப்படங்கள் இணையத்தில் டிரெண்டானது குறிப்பிடத்தக்கது. நடிகர் சூர்யா தனது குழந்தைகள் மீது மீடியா வெளிச்சம் படாமல் தொடர்ந்து பாதுகாத்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X