Actor Suriya: சூர்யா 44 படத்தின் அந்தமான் சூட்டிங் நிறைவு.. நியூ லுக்கில் அசத்தும் சூர்யா!

சென்னை: நடிகர் சூர்யாவின் சூர்யா 44 படத்தின் ஷூட்டிங் கடந்த மாதம் முதல் வாரத்தில் அந்தமானில் துவங்கப்பட்டு தொடர்ந்து 35 நாட்கள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் இந்த படத்தின் சூட்டிங்கை நிறைவு செய்துவிட்டு சூர்யா உள்ளிட்ட படக் குழுவினர் சென்னை திரும்பி உள்ளனர்.

இந்த படத்தின் அடுத்த கட்ட சூட்டிங் விரைவில் உதகையில் துவங்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது. படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக பூஜா ஹெக்டே இணைந்துள்ளார். இதனிடையே ஜெயராம், கருணாகரன், ஜோஜு ஜார்ஜ் உள்ளிட்ட நடிகர்கள் படத்தில் களமிறங்கியுள்ளனர். பீரியாடிக் கேங்ஸ்டர் மற்றும் ரொமாண்டிக் ஜானரில் இந்தப் படத்தின் கதைக்களம் அமைந்துள்ளதாக படக்குழு சார்பில் அப்டேட் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Suriya Andaman Karthik subbaraj Chennai tamil cinema

நடிகர் சூர்யா: நடிகர் சூர்யாவின் தங்குவா படம் விரைவில் ரிலீசாகவுள்ள நிலையில் அவர் படத்தின் சூட்டிங், டப்பிங் வேலைகள் என அனைத்து விஷயங்களையும் முடித்துக் கொடுத்துள்ளார். படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் மிக விறுவிறுப்பாக நடந்து வருகிறது. படத்தின் ரிலீஸ் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அடுத்ததாக கார்த்திக் சுப்புராஜுடன் சூர்யா 44 படத்திற்காக இணைந்துள்ளார் சூர்யா. அந்தமானில் கடந்த மாதம் முதல் வாரத்தில் படத்தின் சூட்டிங் துவங்கப்பட்ட நிலையில் தொடர்ந்து 35 நாட்கள் அந்தமானிலேயே நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

சூர்யா 44 படம்: ஆக்ஷன் காட்சிகள், பாடல் காட்சிகள் என அடுத்தடுத்து அந்தமானில் முதல் கட்ட சூட்டிங்கை சிறப்பாக முடித்துள்ளார் கார்த்திக் சுப்புராஜ். இந்நிலையில் இந்த சூட்டிங்கை நேற்றைய தினம் படக்குழுவினர் அந்தமானில் நிறைவு செய்துவிட்டு சென்னை திரும்பியுள்ளனர். இன்னும் சில தினங்களில் அடுத்த கட்ட சூட்டிங்கிற்காக படக்குழுவினர் உதகைக்கு செல்ல உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக பூஜா ஹெக்டே இணைந்துள்ள நிலையில் ஜெயராம், கருணாகரன், ஜோஜு ஜார்ஜ் உள்ளிட்டவர்களும் கமிட்டாகி நடித்து வருகின்றனர்.

Suriya Andaman Karthik subbaraj Chennai tamil cinema

பீரியாடிக் கேங்ஸ்டர் படம்: இந்த படத்தின் கதைக்களம் பீரியாடிக் கேங்ஸ்டர் மற்றும் காதலை மையமாக கொண்டு உருவாகியுள்ளது. இந்நிலையில் படத்தின் சூட்டிங்கை விரைவில் நிறைவு செய்துவிட்டு அடுத்தடுத்த அப்டேட்களை படக்குழுவினர் கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனமும் கார்த்திக் சுப்புராஜ் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனமும் இணைந்து இந்த படத்தை தயாரித்து வருகின்றன. இந்நிலையில் அந்தமானில் இருந்து சூட்டிங்கை முடித்துவிட்டு சென்னை திரும்பிய சூர்யாவின் விமான நிலைய வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகின்றன.

புதிய லுக்கில் சூர்யா: இந்த வீடியோவில் சூர்யாவின் சூர்யா 44 படத்திற்கான லுக்கில் சூர்யா காணப்படுகிறார். கங்குவா படத்தில் வித்தியாசமான லுக்குடன் சூர்யா காணப்பட்ட நிலையில் தற்போது சூர்யா 44 படத்தில் ஹேண்ட்சம் லுக்கில் சூர்யா காணப்படுகிறார். வரும் 23ம் தேதி அவரது 49வது பிறந்தநாளையொட்டி படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படம் கொடுத்த மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் மிகுந்த உற்சாகத்துடன் இந்த படத்தை இயக்கி வருகிறார். படம் கண்டிப்பாக சூர்யாவிற்கு சிறப்பாக கை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X