Suriya: சூர்யாவைவிட 3 மடங்கு சம்பளம் அதிகமாக வாங்கிய ஜோதிகா.. எந்த படத்துக்கு தெரியுமா?
சென்னை: நடிகர் சூர்யா சாக்லேட் பாயாக தன்னுடைய கேரியரை துவங்கி தொடர்ந்து அதிரடி ஆக்ஷன் ஹீரோவாக மாறியுள்ளார். அவரது நடிப்பில் அடுத்ததாக கங்குவா படம் வரும் நவம்பர் 14ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இந்த படத்தின் அடுத்தடுத்த பிரமோஷன்களில் ஈடுபட்டு வரும் சூர்யா தன்னுடைய சொந்த வாழ்க்கை குறித்தும் பேசி வருகிறார்.
கங்குவா படம் குறித்தும் தன்னுடைய அடுத்தடுத்த ப்ராஜெக்ட்கள் குறித்தும், தான் இதுவரை இணைந்து செயல்பட்ட இயக்குநர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், நடிகர், நடிகைகள் குறித்தும் அடுத்தடுத்த சுவாரஸ்யங்களை பகிர்ந்து வருகிறார் சூர்யா. கங்குவா படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், சூர்யாவின் பிரமோஷன்களும் அதற்கு சிறப்பாக கைக்கொடுத்து வருகின்றன.

நடிகர் சூர்யா: நடிகர் சூர்யா அடுத்தடுத்து சிறப்பான இயக்குநர்களுடன் கோலிவுட்டில் களமிறங்கி வருகிறார். அடுத்ததாக பாலிவுட்டிலும் கர்ணா என்ற படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. 40க்கும் மேற்பட்ட படங்களில் இணைந்து நடித்துள்ள சூர்யா துவக்கத்தில் சாக்லேட் பாயாக தன்னுடைய கேரியரை சிறப்பாகவே துவங்கினார். சரியாக நடிக்க வரவில்லை, சரியாக ஆக்ஷன் வரவில்லை, எக்ஸ்பிரஷன் சரியில்லை என்பது உள்ளிட்ட பல விமர்சனங்களை அவர் துவக்கத்தில் சந்தித்த நிலையில் அவற்றையெல்லாம் தனக்கான பாடங்களாகவே எடுத்துக் கொண்டு முன்னேறியுள்ளார்.

சூர்யா -ஜோதிகா ஜோடி: சாக்லேட் பாய் கேரக்டர்களில் இருந்து அதிரடி ஆக்ஷன் ஹீரோவாக தன்னை மாற்றிக் கொண்டுள்ள சூர்யா, அடுத்தடுத்த படங்களால் ரசிகர்களை சிறப்பாக கவர்ந்து வருகிறார். ஜோதிகாவின் முதல் படமான பூவெல்லாம் கேட்டுப்பார் படத்திலேயே ஹீரோவாக நடித்திருந்த சூர்யா, சில ஆண்டுகளிலேயே அவரது ரியல் ஹீரோவாகவும் மாறினார். இவர்களுக்கு தேவ் மற்றும் தியா என மகன் மற்றும் மகள் உள்ள நிலையில் தற்போது இந்த ஜோடி மும்பையில் செட்டில் ஆகியுள்ளது. இதற்கான காரணத்தையும் சூர்யா வெளிப்படுத்தியுள்ள நிலையில் தன்னுடைய மனைவி மீது அவர் கொண்ட பாசம், அன்பு, அக்கறை உள்ளிட்டவை வெளியாகியுள்ளன.

கங்குவா பட பிரமோஷன்கள்: ஜோதிகாவிற்கும் தனிப்பட்ட வகையில் சில விருப்பங்கள் இருக்கும் என்பதால் அவர் பிறந்து 18 ஆண்டுகள் வளர்ந்த மும்பையில் தாங்கள் செட்டிலாகி உள்ளதாக சூர்யா தெரிவித்துள்ளார். அடுத்தடுத்து ஷூட்டிங்கிற்காகவும் தன்னுடைய சொந்தங்களை பார்ப்பதற்காகவும் சூர்யா மட்டும் மும்பையில் இருந்து அடிக்கடி சென்னை வந்து செல்வது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அவரது நடிப்பில் சிவா இயக்கியுள்ள கங்குவா படம் இன்னும் சில தினங்களில் நவம்பர் 14ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. இதற்கான அடுத்தடுத்த பிரமோஷன்களில் சூர்யா ஈடுபட்டு வருகிறார்.

சூர்யா வெளிப்படுத்திய சீக்ரெட்: அந்த வகையில் தன்னுடைய மனைவி குறித்து பேசியுள்ளார் சூர்யா. தன்னுடைய முதல் படமான பூவெல்லாம் கேட்டுப்பார் படத்திலேயே தமிழ் டயலாக்குகளை ஜோதிகா நல்லா பேசுவாங்க என்றும் ஆனால் தான் டயலாக்குகளை மறந்து தடுமாறிக் கொண்டிருப்பேன் என்றும் சூர்யா கூறியுள்ளார். மேலும் காக்க காக்க படத்தில் தன்னைவிட ஜோதிகாவிற்கு மூன்று மடங்கு சம்பளம் அதிகம் என்று தெரிவித்துள்ளார். இந்த படத்தில் குறைந்த காட்சிகளிலேயே ஜோதிகா நடித்திருப்பார். இடையிலேயே வில்லன்களால் அவர் கொல்லப்பட்டு விடுவார். இந்நிலையில் அந்த படத்தில் சூர்யாவை விட ஜோதிகா மூன்று மடங்கு சம்பளம் அதிகமாக வாங்கியுள்ளது குறித்து சூர்யா வெளிப்படுத்தியுள்ளார். இது ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஆச்சரியத்தை கொடுத்துள்ளது.


Click it and Unblock the Notifications











